பிலிப்பைன்ஸ் நாட்டில் சமர் தீவு உள்ளது. இது தலைநகர் மணிலாவில் இருந்து தென் கிழக்கில் 600 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த தீவை ‘ஹையான்’ என்ற புயல் நெருங்கி வந்து மிரட்டிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்த புயல் பிலிப்பைன்ஸ் நேரப்படி இன்று அதிகாலை 4.40 மணிக்கு (இந்திய நேரப்படி நேற்று இரவு 8.40-க்கு) கடுமையாக தாக்கியது. இதனால் மணிக்கு 185 கி.மீட்டர் வேகத்தில் கடுமையான சூறைக்காற்றுடன் மழை கொட்டியது. ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள் […]
சென்னை, உலக செஸ்போட்டியில் கார்ல்செனின் சவாலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்த இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த், தனக்கு உதவியாக இருக்கும் வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டார். ஆனந்த் பேட்டி நடப்பு சாம்பியன் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், உலகின் நம்பர் ஒன் வீரர் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நாளை தொடங்குகிறது. 12 சுற்று கொண்ட இந்த போட்டியில் யார் முதலில் 6.5 புள்ளிகளை எட்டுகிறார்களோ? […]
சென்னை விளையாட்டு மேம்பாட்டுக்காக தமிழக அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார். உலக சதுரங்க போட்டியின் தொடக்க விழா, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப்போட்டியை தொடக்கி வைத்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய உரை வருமாறு:– சதுரங்கத்துக்கு பொற்காலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த காலகட்டத்தில், இந்தப்போட்டி நடைபெறுவது, சதுரங்கத்துக்கு பொற்காலமாகும். மிகப்பழமையான புத்திகூர்மைக்கான இந்த விளையாட்டின் தாயகமான இந்தியாவில், முதல்முறையாக இந்தப்போட்டி நடைபெறுகிறது. உலக சதுரங்க வாகையர் […]
நடிகர் கமலஹாசன் இன்று தனது 59–வது பிறந்த நாளை கொண்டாடினார். நடிகர், நடிகைகள் பலர் நேரிலும் போனிலும் வாழ்த்தினார்கள். பிறந்த நாளையொட்டி நேற்று நள்ளிரவு முக்கியஸ்தர்களுக்கு சென்னையில் உள்ள ஒட்டல் ஒன்றில் விருந்து கொடுத்தார். இதில் நடிகர்கள் ஆர்யா, தனுஷ், டைரக்டர்கள் மணிரத்னம், செல்வமணி, நடிகை சுகாசினி உள்ளிட்ட பலர் பங்கேற்று கமலுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்கள். நடிகை கவுதமியும் இதில் பங்கேற்றார். பின்னர் கமல் ‘கேக்’ வெட்டினார். கமலை அர்ஜுன் வாழ்த்தியுள்ளார். அவர் கூறும்போது, இந்திய […]
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட ஓப்பனிங் கொண்ட ஹீரோக்களில் நடிகர் அஜீத்தும் ஒருவர். அவரது படம் வெளியாகும் போதெல்லாம் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு தீபாவளிக்கு 2-நாட்கள் முன்னதாக அஜீத்தின் ‘ஆரம்பம்’ படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. ‘பில்லா’ வெற்றிக்குப் பிறகு விஷ்ணுவர்தன்–அஜீத் கூட்டணியில் உருவான படம் என்பதால், இதுவரை இல்லாத அளவிற்கு ‘ஆரம்பம்’ படத்திற்கு டிக்கெட் விற்பனையும் படுஜோராக நடந்தது. முதல் […]
திருச்செந்தூர், நவ.7 – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் லட்சக்கணக்காக பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். முருப்பெருமானின் இரண்டாவது வது படை வீடாக திகழ்வது திருச்செந்தூர். திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் இக்கோவிலில் முருகப் பெருமான், சுப்பிரமணிய சுவாமியாக காட்சி தருகிறார். கோவிலில் ஐப்பசி மாதம் அமாவாசையை அடுத்து 6 ம் நாள் முருகன் சூரனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்ட திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த […]
பீஜிங், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மங்கள்யான் விண்கலம் நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்து வருகின்றன. ஆசியாவில் இந்தியாவின் மிகப்பெரிய போட்டி நாடாக கருதப்படும் சீனாவும் இத்திட்டத்தை வரவேற்றுள்ளது. இது குறித்து, சீனாவில் இயங்கி வரும் தெற்காசிய கல்வி அகடாமி பேராசிரியர் யி ஹைலின் கூறும்போது, ‘‘செவ்வாய் கிரக ஆய்வில் இந்தியாவின் மங்கள்யான் திட்டம் மிகப்பெரிய வெற்றியாகும். இதற்காக உலக நாடுகள் […]
சென்னை, நவ. 7 – சென்னையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதை முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சென்னை கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ள பணிமனையில் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஜெயலலிதா வருகை தந்ததால் அவரைக் காணவும், சோதனை ஓட்டத்தைக் காணவும் பெருமளவில் மக்கள் திரண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று கோயம்பேடு பணிமனையில், சென்னை மெட்ரோ ரயிலின் முதல் ரயில் பெட்டித் தொடரின் சோதனை ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். அதற்கு முன்னர், […]
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா, அமெரிக்க வாழ் இந்தியக் குழந்தைகளுடன் வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். அப்போது, பாலிவுட் பாடலுக்கு அவர் நடனமாடினார். வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடன நிகழ்ச்சிக்கு, நியூயார்க் நகரில் புகழ்பெற்ற அமெரிக்க-இந்திய இசைக்குழுவான “கோல்டு ஸ்பாட் குழு’ வரவழைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமாவின் அரசு நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மிஷெல் […]
சென்னை:நாட்டுக்கு நான்தான் தலைவர் என அரசியல்வாதி கூறினால் அவருடன் விவாதம் நடத்த தயாராக இருக்கிறேன் என்றார் நடிகர் கமல்ஹாசன்.ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: விஸ்வரூபம் 2ம் பாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால் ஏற்கனவே சொன்னதுபோல் நான் நாட்டைவிட்டு வெளியேறுவேன். பொழுதுபோக்குகள் சமுதாயத்தை எப்படி வழிநடத்த உதவுகின்றன என்கிறார்கள். சமூகம்தான் பொழுதுபோக்கை வழிநடத்துகிறது. சமூகத்தில் உள்ளதைதான் பொழுதுபோக்கு அம்சங்கள் பிரதிபலிக்கின்றன. ‘தென்னிந்திய நடிகர்கள் பலர் அரசியலில் இருப்பதுபோல் கமல்ஹாசன் 2014ம் ஆண்டு அரசியலுக்கு […]