உலகின் மிகப்பெரிய விமான நிலையமான அல்-மஹ்தும் சர்வதேச விமானநிலையம் துபாயில் இன்று திறக்கப்பட்டது. இந்த விமான நிலையம் உலக அளவில் 2வது பெரிய பயணிகள் விமானநிலையம் ஆகும். இந்த விமானநிலையத்தில் 160 மில்லியன் பயணிகளை ஆண்டுக்கு கையாள முடியும். மேலும் ஆண்டுக்கு 12 மில்லியன் டன் கார்கோ சரக்குகள் வந்து இறங்க முடியும். இந்த விமான நிலையத்தில் முதல் பயணிகள் விமானம் புடாபெஸ்டில் இருந்து வந்திறங்கியது, அதனை விமானநிலையத்தில் அனைவரும் உற்சாகமாக வரவேற்றனர். ஜோதிட கட்டுரை படிக்க […]
பாட்னா, பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். பிரமாண்ட பொதுக்கூட்டம் முதல்–மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம் ஆட்சி நடைபெறும் பீகார் மாநிலத்தில் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில், நரேந்திர மோடி கலந்து கொண்ட பிரமாண்டமான பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. காலையிலேயே மாநிலம் முழுவதிலும் இருந்து சிறப்பு ரெயில்கள், பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலம் தொண்டர்கள் வந்து […]
பாட்னா – பாரதீய ஜனதா பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட பாட்னா பொதுக் கூட்டத்தில் அடுத்தடுத்த 8 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 6 பே பலியானார்கள். 83 பேர் காயம் அடைந்தனர்.பாட்னா ரெயில் நிலையம், பொதுக்கூட்டம் நடக்கும் உள்பகுதி, வெளிப்பகுதி ஆகிய 3 இடங்களில் குண்டுகள் வெடித்தது. இத்திட்டத்தை தீவிரவாதிகள் குழு குழுவாக செயல்பட்டு நடத்தி உள்ளனர். பாடானா ரெயில் நிலையத்தில் 9.30 மணிக்குமுதல் குண்டு வெடிப்பும் . 10.30க்கு […]
பீகார் மாநிலம் பாட்னாவில் மோடி பங்கேற்ற பேரணியை குறிவைத்து நேற்று 7 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த கோர சம்பவத்தில் 6 பேர் பலியாயினர் 83 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று மாலை மும்பையில் பாலிவுட் படமான ரஜ்ஜோவின் இசைவெளியீட்டு விழா பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கலந்து கொண்டு இசையை வெளியிட்டார்.இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சி ஷிண்டேவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. பாட்னாவில் மோசமான குண்டுவெடிப்பில் 6 […]
பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனத்திற்கு ரூ.203 கோடி பாக்கி வைத்துள்ளது தொடர்பாக, தொழிலதிபர் விஜய் மல்லையா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நிதி நெருக்கடி காரண மாக விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த ஓராண்டாக முடங்கியுள்ளது. இந்நிறுவனம், கடந்த 2008-2012 ஆம் ஆண்டுகளில், பெங்களூரு பன்னாட்டு விமான நிலைய பயனாளர் மேம்பாட்டு கட்டணம் மற்றும் பயணிகள் சேவைக் கட்டணமாக ரூ.203 கோடியை விமான பயணிகளிடம் இருந்து வசூலித்துள்ளது. இத்தொகையை, பெங்களூரு சர்வதேச […]
தான் அரசியலில் ஈடுபடப் போவதாக செய்தி வெளியானதை அடுத்து அவசர, அவசரமாக மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் நடித்த “தலைவா” படம் வெளியிடுவதில் பல்வேறு அரசியல் சிக்கல்கள் ஏற்பட்டது. அந்த படத்தை வெளியிட்டால், திரையரங்களுக்கு வெடிகுண்டு வைத்து விடுவதாக மிரட்டல்கள் வந்ததால், பெரும் சிரமத்திற்கு பின்னர் படம் வெளியிடப்பட்டது. இதற்கிடையே நடிகர் விஜய் புதிய கட்சியை தொடங்க திட்டமிட்டு வருவதாகவும், இது தொடர்பாக நெருக்கமான சிலருடன் […]
கோச்சடையான் படத்தில் என்னை புறக்கணித்ததாக வதந்திகளை பரப்புகிறார்கள்Õஎன்று டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் கூறினார். சினிமா படவிழா தூத்துக்குடி, போடிநாயக்கனூர் கணேசன் ஆகிய படங்களில் நடித்த ஹரிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம், “சங்கராபுரம்”. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் காலை நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் பேசியதாவது: கோச்சடையான் படத்தில் என்னை புறக்கணிப்பதாகவும், விளம்பரங்களில் என்னுடைய பெயரை சிறிய எழுத்தில் போடுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. […]
கோவை : கோவையில் சில தனியார் பள்ளிகளில் தீபாவளி பண்டிகையை காரணம் காட்டி, ஆசிரியர் அல்லாத பள்ளி ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதாக கூறி “ஜோராக’ நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது; பள்ளிகளில் நோட்டீஸ் விநியோகித்து கட்டண வசூல் செய்வது, பெற்றோர் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஆண்டு முழுவதும் தங்களுக்காக சேவை செய்பவர்களுக்கு, தீபாவளி பண்டிகை நேரத்தில் அன்பளிப்பு வழங்குவதை பலரும் கடமையாக செய்து வருகின்றனர். இந்த அன்பளிப்பு முறையை கோவையில் உள்ள சில தனியார் பள்ளிகள், தீபாவளி நன்கொடை […]
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் கடந்த 22–ந்தேதி அதிகாலை 2.45 மணிக்கு மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. முதலில் 75 மெகாவாட்டாக உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் படிப்படியாக 210 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டது. அந்த மின்சாரம் நெல்லை அபிஷேகப்பட்டி மற்றும் மதுரையில் உள்ள மத்திய மின் தொகுப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் தண்ணீரை குளிர் விக்க செய்யும் பணிக்காக டர்பைன் இயக்கம் நிறுத்தப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சாதனங்களை குளிர்வித்து, அதன்பின்னர் இந்திய […]
வாஷிங்டன்: அமெரிக்க வாழ் இந்திய பெண் எமிலி ஷா, 2014 ம் ஆண்டிற்கான மிஸ் நியூஜெர்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்சியில் நடைபெற்ற அழகிப்போட்டியில் அமெரிக்க வாழ் இந்தியரன எமிலி ஷா மிஸ் நியூஜெர்சியாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். இதனால் மிஸ் அமெரிக்கா அழகிப்போட்டியிலும், மிஸ் யுனிவர்ஸ் போட்டியிலும் இவர் கலந்து கொள்ள முடியும். 18 வயதான எமிலியின் தந்தை பிரசாந்த் ஷா ஹாலிவுட் படத் தயாரிப்பாளராக உள்ளார். இந்தி சினிமாவிலும், சில ஹாலிவுட் படங்களி லும் நடித்துள்ள […]