பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுக்கு அன்னை தெரசா சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1994-ம் ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டம் வென்றவர் சுஷ்மிதா சென். அதற்குப்பிறகு ஏராளமான ஹிந்திப்படங்களிலும்.ரட்சகன் உள்ளிட்ட தமிழ்ப்படத்திலும் நடித்து புகழ் பெற்றார்.சமூக சேவையில் மிகுந்த ஆர்வம் கொண்ட சுஷ்மிதா,பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பொதுநலப்பணியாற்றி வருகிறார். அவருடைய சேவையை பாராட்டி ஹார்மனி பவுண்டேஷன் என்ற அமைப்பு அன்னை தெரேசா சர்வதேச விருதை வழங்கி உள்ளது.மும்பையில் நடைபெற்ற விழாவில் விருதைப்பெற்றுக்கொண்ட சுஷ்மிதா சென், அன்னை […]
வாஷிங்டன், அக்.29– செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்து ஆய்வு மேற் கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் அங்கு கியூரியா சிட்டி ஆய்வக விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு மற்றும் மலையை போட்டோ எடுத்து அனுப்பி வைத்தது. காற்றின் வேகம், தட்ப வெப்ப நிலை போன்ற வற்றை அளவீடு செய்து தகவல்களை அனுப்பி வருகிறது. கியூரியா சிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தின் நிலப் பரப்பில் ஆங்காங்கே நகர்ந்து மாதிரிகளை சேகரித்து வருகிறது. […]
பிரிட்டனில் “செயிண்ட் ஜூடு’ புயல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். மின்சார வசதி துண்டிக்கப்பட்டது. ஜூடு புயல் காரணமாக தலைநகர் லண்டனிலும் பிரிட்டனின் மற்ற பகுதிகளிலும் கன மழை பெய்தது. சூறைக்காற்று பலமாக வீசியதால் லண்டனுக்கு வடக்கில் உள்ள கெண்ட் மற்றும் வாட்ஃபோர்டு பகுதிகளில் மரம் முறிந்து விழுந்து 17 வயது பெண்ணும் ஒரு முதியவரும் இறந்தனர். மேற்கு லண்டனில் மரம் முறிந்து விழுந்ததால் ஏற்பட்ட காஸ் வெடிவிபத்து மற்றும் வீடு இடிந்தது ஆகிய சம்பவங்களில் ஒரு […]
தனுஷ் நடிப்பில் வேல்ராஜ் இயக்கும் வேலையில்லா பட்டதாரி படத்தில் ஜானகி ஒரு பாடல் பாடியிருக்கிறார். டூயட். உடன் பாடியவர் தனுஷ். அனிருத் இசையில் இந்த முதுமை – இளமை காம்பினேஷன் சாத்தியமாகியிருக்கிறது. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் For Astrology Consultation Contact: Astrologer, Sri […]
டெல்லி: வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்ககி 0.25% உயர்த்தியுள்ளது. இதனால் ரெபோ ரேட் 7.50 சதவீதத்திலிருந்து 7.75 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த வட்டி உயர்வால் தனிநபர், வீடு, வாகன கடன்களின் வட்டி விகிதமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் காலாண்டிற்கான நிதிநிலை ஆய்வு அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி ரொக்க கையிருப்பு விகிதத்தில் எந்த மாற்றமும்(4%) செய்யப்படவில்லை. மேலும் அவசரக் கால தேவைக்கான வட்டி விகிதம், 0.25% குறைக்கப்பட்டுள்ளது. […]
சேலத்தைச் சேர்ந்த பத்மராஜன் இதுவரை 155 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். தற்போது ஏற்காடு சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூர் டேம் ராமன்நகரை சேர்ந்த பத்மராஜன் சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை எதிர்த்து ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு மனுதாக்கல் செய்தார். இதற்கு எம்.எல்.ஏ.க்கள் யாரும் முன்மொழியாத காரணத்தால் பத்மராஜனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பத்மராஜன் களம் இறங்குகிறார். வருகிற 9-ந்தேதி ஏற்காடு இடைத்தேர்தலில் […]
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் மரண இறுதி ஊர்வலத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கலந்து கொள்ளவில்லை என்று நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். ஆனால் மாறாக ஜவஹர்லால் நேரு கலந்து கொண்டதற்கு ஆதாரமான வீடியோவை திக்விஜய் சிங் தனது ட்விட்டரில் வெளியிட்டார். அசல் வீடியோவை யூடியூபில் பதிவேற்றியது பிரிட்டிஷ் பாத்தி டாட் காம் ஆகும். இது குறித்து கூறிய திக்விஜய் சிங், மோடி ஒரு பொய்யர் என்றும் அவரது கருத்துக்கு அவர் மன்னிப்பு […]
திமுக உறுப்பினர் எ.வ.வேலுவை சட்டசபையில் இன்று கண்டக்டர் என்று விமர்சித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே கண்டக்டராக இருந்தவர்தானே என்று கூறியுள்ளார். தமிழக அரசின் மினி பேருந்து குறித்த விவாதம் இன்று சட்டசபையில் நடந்தது. சட்டசபையில் கேள்வி நேரத்திற்கு பிறகு இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் எம்.எல்.ஏ. மினி பேருந்துகள் பற்றி பேசியபோது, பேருந்துகளில் இருப்பது இரட்டை இலை இல்லை அது இயற்கை காட்சி என்று […]
நடிகை சரிதாவிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொண்ட பிறகே இரண்டாவது திருமணம் செய்தேன் என்று நடிகர் முகேஷ் கூறியுள்ளார். சரிதாவை திருமணம் செய்த நடிகர் முகேஷ் அவரைப் பிரிந்து கேரளாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் தேவிகாவை காதலித்து கடந்த வாரம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்துக்கு முகேஷின் முதல் மனைவியான நடிகை சரிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து சரிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், முகேஷ் சட்ட விரோதமாக தேவிகா என்ற பெண்ணை திருமணம் […]
தி.மு.க. முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன்; அந்தமான் மாநில ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் பி.ஆர். கணேசன் திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி–2 தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருச்சி கே. சௌந்தரராசன், தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் நகர மன்றத் தலைவர் ஐ.ஆபிதாசேக், எட்டையபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் கா. கோவிந்தராஜ பெருமாள் உள்ளிட்டோர் முதல்வர் ஜெயலிதா முன்னிலையில் தனித்தனியாக அதிமுகவில் இணைந்தனர் மேலும் பிரபல செய்தி வாசிப்பாளர்கள், பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி, தஞ்சாவூர் மாவட்ட […]