Wednesday 25th December 2024

தலைப்புச் செய்தி :

பெருமாள் திருவல்லிகேணிக்கு வந்த வரலாறு!

Written by Niranjana NIRANJHANA

சென்னைய திருவல்லிக்கேணியில் மெரீனா கடற்கரையிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் இருக்கிறது பார்த்தசாரதி திருக்கோயில்.

பெருமாள் திருவல்லிகேணிக்கு வந்த வரலாறு

துண்டீரன் என்ற நாட்டில் சுமதி என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். இவ்வரசன் பெருமாளின் தீவிர பக்தன். பெருமாள், பாரதப்போரில் தேரோட்டியாகப் பணியாற்றியபோது இருந்த உருவத்தை பார்க்க வேண்டும் என்று ஆவல் அரசனுக்கு ஏற்பட்டது. தன் விருப்பத்தை ஆத்ரேய முனிவரிடம் கூறினார்.

“அரசனே…நீயே சிறந்த விஷ்ணு பக்தன். நீ விரும்பியபடி உனக்கு அவர் காட்சி கொடுக்கமாட்டாரா என்ன? நீ திருவல்லிக்கேணிக்கு செல். செவ்வரல்லி நிறைந்து இருக்கும் பகுதி அது. அதனால் அந்த இடத்தில் நல்ல நறுமனம் வீசும். இப்படி நறுமனம் இருக்கும் இடத்தில்தான் பெருமாள் விரும்பி காட்சி கொடுப்பார். அங்கே நீ சென்று தவம் செய்.” என்றார்.

முனிவர் சொன்னது போல் அரசன் சுமதி தவம் செய்தார். தவத்தை ஏற்று பெருமாள் “பார்த்தசாரதி உருவத்தில் காட்சி தந்தார். பார்த்தனை பார்த்து ஆனந்தம் அடைந்த அரசர், “நீங்கள் இங்கேயே நிரந்தரமாக தங்கி பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்.

பார்த்தனுக்காக வந்தாள் வேதவல்லி

Bhakthi Planetபிருகு முனிவர் கடும் தவம் செய்து, ஸ்ரீமகாலஷ்மி தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று வேண்டினார். அவர் விருப்பப்படி லஷ்மிதேவி சந்தன காட்டில் குழந்தையாக அவதரித்தாள். அந்த குழந்தையை மகளாக ஏற்று பிருகு முனிவர் வளர்த்து வந்தார். பருவ வயதை அடைந்த வேதவல்லி, பெருமாளுக்கு மலர் பறிப்பதற்காக நந்தவனத்திற்கு சென்றாள். அப்போது பெருமாள் வேதவல்லியை விரும்பி, பிருகு முனிவரின் சம்மதத்துடன் திருமணம செய்து கொண்டு திருவல்லிகேணிக்கு அழைத்துவந்தார்.

திருவல்லிக்கேணி வந்த ஸ்ரீராமர்

பாண்டாரம் என்ற முனிவருக்கும் ஹேலை என்ற வானுலக பெண்ணுக்கும் பிறந்தவர் மதுமான். இவர் ஸ்ரீராமரை நினைத்து தவம் செய்தார். ஸ்ரீராமர் மதுமானுக்கு காட்சி கொடுத்தார். தன் பக்தன் மதுமானின் விருப்பத்திற்கேற்ப சீதையையும் லட்சுமனனை அழைத்து கொண்டு திருவல்லிகேணியில் குடிபுகுந்தார் ஸ்ரீராமர். இராமருக்கு துணையாக அனுமனும் திருவல்லிக்கேணி வந்து, நமக்கும் துணை இருக்கிறார்.

பார்த்தசாரதியும், ஸ்ரீராமரும் சாந்த கடவுளாக இருக்க, உக்கிர கடவுள் நரசிம்மரை அழைத்து வந்தவர் இவர். காரணம்….?

அத்ரி முனிவர் திருவல்லிக்கேணியில் ஸ்ரீநரசிம்மரை நினைத்து கடும் தவம் செய்தார். அத்ரி முனிவரின் தவத்தை ஏற்று நரசிம்மர் காட்சி கொடுத்தார். ”தீயவர்களிடம் இருந்து நல்லவர்களை காப்பாற்றி தீயவர்களை மன்னிக்கும் குணம் பெருமாளுக்கும் ஸ்ரீராமருக்கும் இருப்பதால், அநீதி செய்பவர்கள், இறைவன் நம்மை மன்னித்து விடுவான் என்று பயம் இல்லாமல் தொடர்ந்து அநீதியான காரியங்களை செய்கிறார்கள். ஆதலால் நரசிம்மரே தாங்கள் இவ்விடத்தில் அருள் புரிந்து நல்லோருக்கு துன்பம் செய்பவர்களை வீழ்த்தி பாடம் கற்பியுங்கள்.” என்று வேண்டினார் முனிவர். முனிவரின் நல்ல எண்ணத்தை புரிநது நரசிம்மர் “தெள்ளியசிங்கர் எனும் திருநாமம் கொண்டு துஷ்ட மனம் படைத்தவர்களை அழிக்கவும், நல்லவர்களை காக்கவும் திருவல்லிக்கேணியில் தங்கிவிட்டார்.

யானை, கஜேந்திரவரதர் என பெயர் பெற்ற சம்பவம்

இந்திரத்தியும்னன் என்ற பாண்டிய நாட்டு மன்னர். நல்லாட்சி செய்த சிறந்த பெருமாள் பக்தர். ஒருநாள்Manamakkal Malai மன்னரை பார்க்க அகத்திய முனிவர் வந்தார். ஏதோ சிந்தனையில் இருந்த அரசர், அகத்திய முனிவரை சரியாக உபசரிக்காமல் இருந்தார். இதை தவறாக புரிந்து கொண்ட முனிவர், “தான் வந்ததை தெரிந்தும் அலட்சியமாக இருந்து தன்னை அவமானம் படுத்திவிட்டானே இவன்.” என்று கோபம் கொண்டு, “நீ யானையாக பிறப்பாய்.” என்று சாபம் விட்டார். அதே போன்று ஒருசமயம், ஊகூ என்ற முனிவர் ஆற்றில் நீந்தி கொண்டு இருந்தார். அப்போது தேவலன் என்ற முனிவர் ஊகூ முனிவருக்கு வேடிக்கை காட்டுவதாக நினைத்து விளையாட்டாக உள்நீச்சல் போட்டு, ஊகூ முனிவரின் காலை பற்றி பயமுறுத்தினான்.

தன்னை பயமுறுத்தியது தேவலன் முனிவன்தான் என்பதை அறிந்து கொண்ட ஊகூ முனிவர், கடும் கோபம கொண்டு தேவலன் முனிவரை, “நீ முதலையாக பிறக்கக் கடவாய்” என்று சபித்தார்.  இந்த சம்பவத்திற்கு பிறகு சில மாதங்கள் கழித்து அகத்தியரின் சாபத்தால் இந்திரத்தியும்னன் யானையாக பிறந்து, ஒடையில் நீந்தி கொண்டு இருந்தது. அப்போது அந்த யானையின் கால்களை பற்றி இழுத்தது முதலை. முதலையின் வாயில் தன் கால்கள் மாட்டி கொண்டு எடுக்க முடியாமல் பிளறியது யானை. இந்த பிறவியிலும் விஷ்ணு பக்தியில் இருந்த யானை,. ஆதிமூலமே காப்பாற்று என்று கதறியது. யானை பிளரியதை  கேட்டு பெருமாள், கருட வாகனத்தில் விரைந்து வந்து தன் சக்கராயுதத்தால் அநத முதலையை கொன்று யானையை காப்பாற்றினார். யானையின் பிறவி சாபத்தை நீக்கி அதன் பக்தியை ஏற்று கஜேந்திரவரதர் என திருநாமம் தந்தார். “உன்னை வணங்குவோர்க்கு உடல் பலத்தையும், எதிரிகளை எதிர்த்து போராடும் தைரியத்தையும் நீ தருவாயாக” என்று ஆசி கூறினார் ஸ்ரீமந் நாராயணன்.

மீன்கள் இல்லாத குளம்

முத்கலர் என்ற முனிவர் பெருமாளை வேண்டி கோயில் குளக்கரையில் கடும் தவம் இருந்தார். அப்போது குளத்தில் இருந்த மீன்கள் துள்ளி குதித்து கொண்டு சலசலப்பு ஏற்படுத்தியது. இதனால் கோபம் அடைந்த முனிவர், “இனி நீங்கள் இந்த குளத்தில் எப்போது இருக்கக் கூடாது.” என்று சாபம் விட்டார். அன்று முதல் இன்றுவரை இந்த குளத்தில் மீன்கள் வசிப்பது இல்லை. அப்படியே மீனை எடுத்து வந்து குளத்தில் போட்டாலும் அடுத்த நிமிடமே மீன்கள் இறந்து விடுகிறதாம்.

பக்தர்கள் முதலில் தரிசிக்க கூடாதாது பார்த்தசாரதியை ஏன் தெரியுமா?

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு ஒரு சம்பிரதாயம் இருக்கிறது. முதலில் வேதவல்லி தாயாரையும் அடுத்து ஆண்டாளையும் பிறகு நரசிங்கப் பெருமாளையும் மற்ற தெய்வங்களையும் தரித்தபிறகு கடைசியாகதான் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளை தரிசிக்க வேண்டும். ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள், தன்னை தரிசித்த தன் பக்தர்களின் வீட்டுக்கு அவர்களுடனே செல்வதாக ஐதீகம். பெருமாளை  தரிசித்த பிறகு கோயிலில் உட்காரமல் நேராக வீட்டுக்கு வந்தால் நம்முடனே பெருமாளும் வந்து விடுவார் என்று தவசி முனிவர்கள் கூறியுள்ளனர். திருப்பதி பெருமாளையும், திருவட்டாறு பெருமாளையும் தரிசிக்க இயலாதவர்கள் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளை தரிசித்தாலே போதும் நல்ல திருப்பங்கள் வரும். வாழ்க்கை வளமுடன் அமையும்.

“நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Sep 19 2013. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், பெருமாள் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »