கணபதி இருக்க கவலையில்லை! இரட்டை பிள்ளையாரின் சிறப்புகள்!
நிரஞ்சனா
இரட்டை பிள்ளையாருக்கு தனி மகத்துவம் என்ன?
பிள்ளையாரை வணங்கினாலே நன்மைகள் கிடைக்கும். அத்துடன் இரட்டை பிள்ளையாரை வணங்கினால் காரியதடை நீங்கும் என்கிறது புராணம். இரட்டை பிள்ளையார் உருவான கதையை தெரிந்துக்கொண்டாலே, இரட்டை பிள்ளையாரின் மகிமைகளை அறிய முடியும்.
அசுரர்கள் என்றாலே தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லைதான். அதன்படியே நடந்தான் ஒரு அசுரன்.
முனிவர்கள் நாட்டின் நலனுக்காக யாகம் செய்தால், அதை தடுத்து விடுவான். அதனால் அந்த அசுரனை “விக்கினன்” என்று பெயர் அழைத்தார்கள். “விக்கினன்” என்றால் “தடை செய்பவன்” என்று பொருள். விக்கினின் தொல்லையால் நல்ல காரியங்கள் செய்ய முடியாமல் அவதிப்பட்டார்கள் முனிவர்கள். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா?. அதனால் வசிஷ்ட முனிவரும், மற்ற பல முனிவர்களும், விநாயகப்பெருமானிடம் சென்று அசுரனான விக்கினனின் கொடுமைகளை பற்றி சொன்னார்கள்.
”அவன் என்ன அவ்வளவு பெரிய அசுரனா? அவனை அடக்க என் அங்குசமே போதும்” என்று கூறி தன் அங்குசத்தை ஏவினார் கணபதி.
“சின்னப் பையன். தொந்தி வயறுக்காரன். என்னை அவன் என்ன செய்ய முடியும்?“ என்று விக்கின்னும் ஆணவமாக சிரித்தான். கணபதியிடம் இருந்து தப்பிக்க பலவிதமான தந்திரங்களும் செய்தான். ஆனால் அவனின் மந்திர – மாய தந்திரங்கள் எதுவுமே விநாயகர் முன் எடுப்படவில்லை. இனி தம்மால் விநாயகரிடம் இருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்தான். மனதளவில் வலிமை இழந்தான் அசுரனான விக்கினன்.
“விக்னேஷ்வரன்” என்கிற பெயரின் காரணம்!
கணபதி, வேலாயுதத்தை அந்த அசுரன் மேல் ஏவினார்.
சின்ன பையன் என்று இவரை சாதாரணமாக நினைத்து, இவரிடம் மோதி என்ன சாதித்தோம்? இனி சரணடைவதுதான் நமக்கு நல்லது என்பதை உணர்ந்து, விநாயகப்பெருமானிடம் சரண்னடைந்தான் அசுரன்.
“விநாயகப்பெருமானே… படைக்கும் தொழில் செய்ய பிரம்மா படைக்கப்பட்டதைபோல, நான் மற்றவர்களுக்கு கெடுதல் செய்யவே பிறந்தவன். ஆகவே என் மீது எந்த தவறும் இல்லை. நீங்கள்தான் எனக்கு நல்வழிகாட்டவேண்டும்.” என்றான் விக்கினன்.
அந்த அசுரனின் பேச்சில் நியாயம் இருந்ததால் கணபதி யோசித்தார்.
“சரி. என்னை முதலில் வணங்கி காரியம் தொடங்குபவர்களை நீ எதுவும் செய்யக் கூடாது என்னை வணங்காமல் யார் எந்த செயல் செய்தாலும், என்ன யாகம் செய்தாலும், நீ உன் வேலையை (விக்கினங்களை) காட்டு.”. என்றார் கணேச மூர்த்தி.
பிறகு அசுரனான விக்கினன் ஒரு கோரிக்கை விடுத்தான்.
“பெருமானே, நீங்கள் என்னுடைய பெயரை உங்கள் பெயருக்கு முன் சூட்டிக்கொள்ள வேண்டுகிறேன். அதுதான் என் ஆசை. இதனால் “விக்கினங்களை தீர்க்கும் விநாயகர்” என்று மக்கள் என் பெயரையும் மறக்காமல் இருப்பார்கள்.” என்று விக்கினன் கேட்டுக்கொண்டதை ஏற்றுக்கொண்டு, அன்றுமுதல், “விக்னேஷ்வரன்” என்றும் அழைக்கப்படுகிறார் விக்கினராஜனான விநாயகப் பெருமான்.
ஒருவர் “விக்னேஸ்வரன்” இன்னோருவர் “விக்னஹரன்”!
அதுசரி. இந்த கதைக்கும் இரட்டைபிள்ளையாருக்கும் என்ன சம்மந்தம்? என்று யோசிக்கிறீர்களா? சம்மந்தம் இருக்கிறது.
எப்படி முருகப்பெருமான் சூரபத்மனை வீழ்த்தி, சூரபத்மனின் ஒருபாகத்தை சேவலாகவும், மறுபாகத்தை மயிலாகவும் மாற்றி தன்னோடு வைத்துக்கொண்டாரோ, அதுபோல், விநாயகப்பெருமானும் விக்கினனை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார். ஒரு அசுரனுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக விக்கினனை தன்னுள் ஐக்கியப்படுத்திக்கொண்டார். இவர்களே இரட்டை பிள்ளையாராக உருவானார்கள்.
இந்த இரட்டை பிள்ளையாரில் ஒருவரின் பெயர் “விக்னேஸ்வரன்” இன்னோருவர் “விக்னஹரன்”.
தடையற்ற முன்னேற்றம் பெற வழி!
“நன்மைகள் தடையில்லாமல் நடைப்பெற, விக்கினராஜாவே உன்னை வணங்குகிறேன்” என்று இரட்டைபிள்ளையாரிடம் வேண்டிக்கொண்டால், விக்கினன் என்ற அசுரன் உங்கள் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டான். விநாயகரின் அருளாசி பரிபூரணமாக கிடைக்கும்.
உங்கள் ஊரில் எங்கே இரட்டை பிள்ளையார் ஆலயம் இருக்கிறது? என்று விசாரித்து அந்த ஆலயத்திற்கு சென்று உங்கள் பெயரில் அர்ச்சனை செய்தால், உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தடையே வராது. அத்துடன் இரட்டை பிள்ளையார் உருவபடத்தை உங்கள் இல்லத்தில் வைத்து வணங்கினாலும் நன்மைகள் கிடைக்கும்.
இப்போது தெரிந்துக்கொண்டீர்களா இரட்டைபிள்ளையார் உருவான காரணத்தை. மகேஸ்வர புத்திரனான, விக்ன விநாயகர் பாதம் வணங்கி முன்னேறுவோம்.
மேலும் விநாயகர் கட்டுரைகள்..
கணபதி இருக்க கவலையில்லை! விநாயகர் சதுர்த்தி சிறப்பு கட்டுரை பகுதி – 1
விநாயகர் சதுர்த்தி வழிபாடும் பூஜை நேரமும்! விநாயகர் சதுர்த்தி சிறப்பு கட்டுரை பகுதி – 2
Send your feedback to: editor@bhakthiplanet.com
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
http://www.youtube.com/bhakthiplanet
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2013 bhakthiplanet.com All Rights Reserved
பொது அறிவிப்பு:
BHAKTHIPLANET.COM இணையதளத்தில் வெளிவரும் ஆன்மிக கட்டுரைகள் – ஜோதிட கட்டுரைகள் – வாஸ்து கட்டுரைகள் மற்றும் அனைத்து கட்டுரைகளையும் வேறு இணையதளங்களில் வெளியீடுவதற்கும் – பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்வதற்கும், புத்தகங்களாக வெளியீடுவதற்கும் அல்லது வேறு எந்த வகையில் வெளியீடுவதற்கும் BHAKTHIPLANET.COM நிர்வாகத்திடம் எழுத்து பூர்வமாக முன் அனுமதி பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மீறினால் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
N. JOTHI,
Advocate,
319. Law Chambers,
Madras High Court,
Chennai – 104