Wednesday 25th December 2024

தலைப்புச் செய்தி :

மண் சட்டியில் சாப்பிடும் பணக்கார சாமி

Written by Niranjana NIRANJHANA

உலகின் பணக்கார கடவுள் யார் என்றால் எளிதாக சொல்லிவிடலாம் ஸ்ரீமந் நாராயணன் என்று. பெருமாள் கோயில்கள் அனைத்தும் மகிமை வாய்ந்தவை என்றாலும், திருப்பதி பெருமாளுக்கு சைவம்-வைணவம் என்ற பாகுபாடு கிடையாது. அவ்வளவு ஏன் பிற மதத்தினர் பலரும் திருப்பதி பெருமாளுக்கு பக்தர்களாக உள்ளனர். காக்கும் தெய்வமான பெருமாளை வழிபட வழிபட வாழ்வில் திருப்பங்கள் ஏற்படும். அத்தகைய நல்ல திருப்பம் தந்த தெய்வத்திற்கு நன்றி கடனாக நாம் பணத்தையோ, தங்க ஆபாரணங்களோதான் தர வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அப்படி இருந்தாலும் அவற்றை ஏன் நாம் காணிக்கையாக தருகிறோம்? என்றால்,

“இறைவா.. நீ தந்த செல்வங்களின் ஒரு சிறுபகுதியை, நான் நன்றி உள்ளவன் என்பதை உணர்த்தவே உனக்கே காணிக்கை ஆக்குகிறேன். உன் திருக்கோயில் வளர்ச்சியை கண்டு, என் பக்தியையும், நீ எனக்கு தந்த அந்தஸ்தையும் இந்த உலகம் அறியட்டும்.” என்கிற காரணத்துக்காகதான்.

நம் வசதிக்கு ஏற்ப சிறு காணிக்கையானாலும் நமக்கு இஷ்டமான திருக்கோயில்களுக்கு தந்திடும்போது, அவை அந்த திருக்கோயில்களின் சார்பாக அன்னதானம் போன்ற எண்ணற்ற மக்கள் நலப்பணிகளுக்கு சென்றடைகிறது.

என் வசதிக்கு ஏற்ப நான் ஒரு ரூபாய் காணிக்கை தருவதால் இறைவன் மகிழ்ச்சி அடைவானா? என நினைக்க வேண்டாம். தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஒன்பது ரூபாய் இருந்தாலும், ஒரு ஏழை தருகிற ஒரு ரூபாய்தான், அந்த தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஒன்பது ரூபாயை ஒரு லட்சமாக உயர்த்துகிறது. ஆகவே காணிக்கை எதுவானாலும் – அது எவ்வளவு ஆனாலும் நம் அன்பான பக்தியால் அதற்கு மதிப்பு கூடுமே தவிர குறையாது.

காது கொடுத்து கேட்கும் தெய்வம்

திருப்பதி பெருமாள் சில யுகங்களுக்கு முன்புவரை தன்னை நாடிவரும் பக்தர்களிடம் பேசியதாகவும், பிறகு பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க பேசுவதை நிறுத்திவிட்டு பக்தர்களின் குறையை காது கொடுத்து கேட்டு அதற்கு தீர்வு தருவதாகவும் ஸ்தலபுராணம் சொல்கிறது.

குயவன் பீமனின் புகழ்

முன்னோரு காலத்தில் பீமன் என்ற குயவன் இருந்தான். அவன் திருப்பதியில் வசித்து வந்தான். தினமும் பெருமாளின் நாமத்தை உச்சரித்து வந்தான். திருப்பதி மலையின் கீழே இருப்பவர்களுக்கு கூட Bhakthi Planetபெருமாளின் தரிசனம் சில சமயம் கிடைக்காது. நாடு விட்டு நாடு வருபவர்கள் திருப்பதி பெருமாளை எளிதில் தரிசிப்பார்கள். காரணம், “உன்னை பார்க்க வேண்டும் வா” என்று தெய்வம் அழைத்தால்தான் அந்த தெய்வத்தின் சந்நிதியின் முன்னே நாம் நிற்க முடியும். இது பீமனின் வாழ்க்கையில் வெகுவாக பொருந்தியது.

தினமும் பெருமாளின் நாமத்தை உச்சரிக்கும் அவனை ஏனோ பெருமாள் அழைத்து தரிசனம் காட்டவில்லை. “நாம் ஏன் பெருமாளை தரிசிக்க முடியவில்லை.? இன்று விட கூடாது.. பெருமாளை எப்படியும் தரிசித்தே ஆகவேண்டும்.” என்று முடிவு செய்து, கொஞ்சம் ஓய்வு நேரம் கிடைத்தாலும் அதை வீணடிக்காமல் உடனே பெருமாளை தரிசிக்க திருமலை மீது ஏறி சென்று பெருமாளை தரிசிப்பான்.

சனிகிழமை விரதத்தை சரியாக செய்வான் பீமன் என்கிற அந்த குயவன். குடும்ப பொறுப்பின் காரணமாக வழக்கத்தை விட அதிக அளவிலான சட்டி பானைகளை செய்து வந்ததால், சாப்பிட கூட அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை. உறக்கத்தையும் மறந்தான். சட்டி பானைகள் அதிக அளவில் உற்பத்தி செய்வதிலேயே அதிக நேரத்தை செலவு செய்தான். ஆனாலும் பெருமாளின் நாமத்தை உச்சரிப்பதை மட்டும் அவன் மறக்கவில்லை.

பெருமாளை நினைக்கும் போதெல்லாம், “முன்பு போல நம்மால் வெங்கடேஸ்வரனை தரிசிக்க முடியவில்லையே.” என்று மனம் வருந்தினான். “பெருமாளே என்னை தேடி வந்தால் என்ன.?” என்று முடிவு செய்து, தன் கை திறமையினால் மண்னால் பெருமாளின் சிலையை செய்தான். “பெருமாளுக்கு புஷ்பம் வைத்தால் நன்றாக இருக்குமே” என்று கருதினான். ஆனால் தினமும் மலர்கள் வாங்கும் காசில் வீட்டுக்கு அரிசியாவது வாங்கலாமே.” என்று பீமனுடைய வறுமை மலர்கள் வாங்க தடுத்தது. அதனால் களி மண்ணிலேயே அழகான பூக்களை வடிவமைத்து செய்து பெருமாளுக்கு மாலையாக சமர்பித்து வந்தான்.

திடுக்கிட்ட அரசர் தொண்டைமான்

அந்த நாட்டை ஆண்ட அரசர் தொண்டைமானும் தீவிர பெருமாள் பக்தர். மனனர் என்பதால் சனிகிழமைதோறும் தங்கத்தாலான பூக்களை செய்து பெருமாளுக்கு சமர்பித்து வந்தார் மன்னர்.

ஒருநாள் அரசர் தொண்டைமான், பெருமாளை தரிசிக்க வந்த போது, பெருமாளின் கழுத்தில் மண் பூமாலைManamakkal Malai இருப்பதை கண்டார். அர்ச்சகர்தான் இன்று வித்தியசமாக இருக்கட்டும் என்று மண்ணால் பூமாலையை பெருமாளுக்கு அணிவித்து இருப்பார் என்று நினைத்துக் கொண்டார் அரசர். இதை பற்றி அர்ச்சகர்களிடம் விசாரித்தால் அரசர் தண்டனை தந்துவிடுவாரோ என்று அவர்கள் பயந்து விட போகிறார்கள் என்று நினைத்து யாரிடமும் ஒன்றும் கேட்காமல் அரண்மனைக்கு சென்றுவிட்டார் அரசர்.

இருந்தாலும் தொண்டைமானின் மனம் அன்று கலக்கத்துடன் இருந்தது. பெருமாளை தங்கத்தால் அலங்கரிக்க நினைத்தால் அந்த அர்ச்சகர் மண் பூமாலையை அணிவித்து இருக்கிறாரே.” என்று வருத்தத்துடன் உறங்கினார் அரசர்.

அன்றிரவு தொண்டைமான் கனவில் பெருமாள் தோன்றி,

“என்னுடைய பக்தனான குயவன் பீமன், தன் சக்திக்கேற்ப மண்ணால் பூமாலையை தயாரித்து, அவனே தன் கரங்களால் உருவாக்கிய என்னுடைய விக்கிரகத்தில் தினமும் அணிவித்து மகிழ்கிறான். நீ எனக்கு அணிவிக்கும் தங்க பூமாலைகளை போல மண் பூமாலையும் எனக்கு பிடித்திருக்கிறது. அதைதான் நீ என்னுடைய ஆலயத்தில் கண்டாய்.” என்று கூறினார்.

தன் கனவில் பெருமாள் தோன்றி, நடந்ததை சொன்னவுடன் தொண்டைமானின் மெய் சிலிர்த்துவிட்டது. “எங்கோ இருக்கும் குயவன் அவன் உருவாக்கிய பெருமாள் சிலைக்கு தயாரித்த மண் பூமாலை, திருப்பதி பெருமாள் ஸ்தலத்தில் மூலஸ்தானத்தில் இறைவன், தம்முடைய கழுத்தில் தாமே விரும்பி அணிந்துக் கொண்டார் என்றால், அந்த குயவனுடைய பக்தி எந்த அளவிற்கு புனிதமாக இருக்கும்?” என்று நினைத்து, மறுநாளே அந்த குயவனான பீமனின் இல்லம் தேடி சென்று பார்த்தார் அரசர் தொண்டைமான்.

அங்கு அவன் வீட்டில் இருந்த மண்ணால் ஆன பெருமாள் விக்கிரகத்தில், திருப்பதில் தாம் நேரடியாக கண்ட மண்ணால் ஆன பூமாலை இங்கேயும் அப்படியே அணிவிக்கப்பட்டு இருந்ததை கண்டு ஆச்சரியபட்டார் அரசர்.

“பீமா.. நீ இங்கு அணிவிக்கும் மண் பூமாலை, திருப்பதி பெருமாள் கழுத்திலும் நான் கண்டேன்.” என்று அரசர் கூறியதும் பீமனின் உடலும் சிலிர்த்துவிட்டது. அவன் கண்களில் தாரை தாரையாக ஆனந்த கண்ணீர்.

“பீமா..உனக்கு என்ன வேண்டும் கேள்?” என்று கூறி கொண்டே அவன் வாய் திறந்து கேட்பதற்கு முன்னதாகவே அந்த ஏழையின் வீட்டுக்குள் மன்னரின் அன்பளிப்பாக பொன், பொருட்களை அடுக்கினார் அரசர்.

“அரசே… உங்கள் அன்பு போதும். இவையெல்லாம் வேண்டாம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தூய்மையான பக்தியுடன் நான் செய்யும் சேவையை பெருமாள் ஏற்றுக் கொண்டாரே அதுவே எனக்கு போதும்.” என்றான் பீமன்.

மண்சட்டியில் உணவு சாப்பிடும் பணக்கார சாமி

பீமனின் புகழ் உலகம் இருக்கும்வரை நிலைத்து இருக்க வேண்டும் என்று திருப்பதி பெருமாள் நினைத்தார். “எனக்கு குயவன் தயாரிக்கும் மண்சட்டியில்தான் நைவேதியம் படைக்கவேண்டும்.” என்று உத்தரவிட்டார் திருப்பதிபெருமாள்.

அதனால் பல கோடிகளுக்கு அதிபதியாக திருப்பதி பெருமாள் இருந்தாலும், இன்றுவரை மண்சட்டியில்தான் திருப்பதி பெருமாளுக்கு நைவேதியம் செய்யப்படுகிறது.

இறைவன் தன் பக்தர்களிடம் உயர்ந்த பொருட்களை எதிர்பார்ப்பது இல்லை. தூய்மையான பக்தியைதான் எதிர்பார்க்கிறார்.

உண்மையான அன்புக்கு இறைவன் கட்டுப்படுவார். தன் பக்தனை உலகபுகழ் பெறவும் செய்வார். நிம்மதியான வாழ்வையும் தருவார் திருப்பதி பெருமாள்.

திருப்பதி சென்றால் திருப்பம் என்பது மட்டுமல்ல, திருப்பதி பெருமாளை மனதால் நினைத்தாலே நல்ல திருப்பமும், பெருமாளின் அனுகிரகமும் தேடி வரும்.

ஓம் நமோ நாராயணாய…! ஓம் நமோ வெங்கடேஸ்வராய நம..!

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Sep 19 2013. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், கோயில்கள், பெருமாள் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »