குழம்புப் பொடி
குழம்புப் பொடி
தேவையான பொருட்கள்
மிளகாய் வற்றல் – 200 கிராம்
கொத்தமல்லி விதை – 150 கிராம்
மிளகு – 50 கிராம்
விரலி மஞ்சள் – 30 கிராம்
கடலைப் பருப்பு – 50 கிராம்
துவரம் பருப்பு – 100 கிராம்
செய்முறை
மிளகாய் வற்றலைக் காயவைத்து மிஷினில் பொடியாக்கிக் கொள்ளவும். மிளகு, கொத்தமல்லி விதை, மஞ்சள், கடலைப் பருப்பு, துவரம் பருப்பு இவைகளை நன்றாய் அரைத்து, மிளகாய்ப் பொடியுடன் சேர்த்துக் கலக்கவும். இதை காற்றுப்புகாமல் டப்பாவிலோ, பாட்டிலிலோ அடைத்து வைத்துக் கொண்டு தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளவும்.
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்