சாம்பார் பொடி
சாம்பார் பொடி
தேவையான பொருட்கள்
மிளகாய் – 750 கிராம்
மிளகு – 100 கிராம்
வெந்தயம் – 50 கிராம்
உளுத்தம் பருப்பு – 50 கிராம்
துவரம் பருப்பு – 250 கிராம்
கடலைப் பருப்பு – 250 கிராம்
விரலி மஞ்சள் – 100 கிராம்
கொத்தமல்லி விதை – 750 கிராம்.
செய்முறை
வாணலியை அடுப்பில் வைத்து உளுத்தம் பருப்பு துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மஞ்சள், வெந்தயம், மிளகு இவைகளைத் தனித்தனியாக லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதே வாணலியில் கொஞ்சம் விளக்கெண்ணெய் ஊற்றி மிளகாயைச் சிறிது நேரம் வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மிளகாயையும், கொத்தமல்லியையும் கல்லுரலில் போட்டு நன்றாக இடித்துக் கொண்டு, மற்ற பொருட்களையும் உரலில் போட்டு இடித்து, இரண்டையும் கலந்து கண்ணாடி சீசாக்களிலோ, ஜாடிகளிலோ அடைத்து வைக்கவும். நாள்பட உபயோகிக்க உதவும். அரைக்க முடியாதவர்கள் வறுக்காமல் அப்படியே எல்லா சாமான்களையும் கலந்து மிஷினில் கொடுத்து அரைத்து பொடியை ஒரு நாள் வெய்யிலில் நன்கு ஆறவைத்து ஜாடிகளில் நிரப்பி உபயோகிக்கலாம்.
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்