உருளைக் கிழங்கு பொடிமாஸ்
உருளைக் கிழங்கு பொடிமாஸ்
தேவையான பொருட்கள்:
உருளைக் கிழங்கு – கால் கிலோ
மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை
எலுமிச்சம் பழம் – ஒன்று
வற்றல் மிளகாய் – இரண்டு
கடுகு – கால் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன்
கடலைப் பருப்பு – அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் – இரண்டு
இஞ்சி – சிறிய துண்டு
தேங்காய்த் துருவல் – ஒரு மூடி
எண்ணெய் – நாலு ஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
உப்புப் பொடி – தேவையான அளவு
செய்முறை
உருளைக் கிழங்கை வேக வைத்து தோலினை உதிர்த்துக் கொள்ளவும். அதில் மஞ்சள் பொடி, உப்புப் பொடி தூவி கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல் இவற்றை வறுத்தும், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை இவற்றைப் போட்டு வதக்கியதும் உதிர்த்த உருளைக் கிழங்கைப் போட்டு கிளறி, தேங்காய்த் துருவலையும் போட்டு கிளறி இறக்கவும். எலுமிச்சம் பழத்தை நறுக்கிப் பிழிந்து விதைகளை நீக்கி சாற்றை பொடிமாஸில் பரவலாக ஊற்றிக் கிளறவும்.
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்