மிளகுக் குழம்பு
முதலில் ஓர் எலுமிச்சம்பழ அளவு புளியை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுத் தண்ணீர் விட்டு ஊற வைத்து, நன்றாக கரைத்து அரைலிட்டர் புளித்தண்ணீர் எடுத்து கொள்ளுதல் வேண்டும்.
அந்தப் புளித்தண்ணீரில் தேவையான அளவு உப்பு சிறிதளவு கருவேப்பிலையும் போட்டுக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி அதில் ஒரு கரண்டிஅளவு மிளகும், நான்கு மிளகாய் வற்றல்களும் ஒரு சிறு கரண்டி துவரம் பருப்பும் போட்டு, சிவக்கவறுத்து எடுத்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்து எடுத்த விழுதை, புளித் தண்ணீரோடு சேர்த்து அடுப்பில் கொதிக்க வைத்தல் வேண்டும். புளித்தண்ணீர் சிறிது சுண்டும் வரை கொதிக்கவிட்டு, ஒரு துண்டு பொருங்காயத்தை நீரில் கரைத்து ஊற்றவும். சிறிதளவு அரிசி மாவும் கரைத்து ஊற்றவும், இவற்றை ஊற்றி ஒரு கொதி வந்தவுடன், சிறுகரண்டி அளவு கடுகைத் தாளித்துக் கொட்டி இறக்கி வைத்துவிடவேண்டும்.