மதகஜராஜா படத்தை தயாரிப்பாளரிடம் திருப்பிக்கொடுத்த விஷால்!
விஷால் கதாநாயகனாக நடித்து, சுந்தர் சி. இயக்கத்தில் ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்துள்ள படம் “மதகஜராஜா”. படம் முடிவடைந்து 8 மாதங்கள் ஆகியும் வெளிவராததால் படத்தை வெளியிடும் உரிமையை பெற்றார் விஷால். ஆனால் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு, இதற்கு முன் தயாரித்த படங்களின் தோல்வியால், விநியோகதர்களுடன் பிரச்சனை இருந்து வந்தது.
இதன் காரணமாக “மதகஜராஜா” வை வெளியிடுவதில் சிக்கல் உருவாகி விஷாலுக்கு ரத்த அழுத்தம் குறைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவில் நிலை உருவானது. இந்நிலையில், படத்துக்கு பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகள் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த படத்தை தயாரிப்பாளரிடமே விஷால் திருப்பிக்கொடுத்து விட்டார்.
வருகிற 13-ந் தேதி படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கு ஜெமினி நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.