கல்லூரி மாணவியாக புரமோஷன் கேட்கும் சரண்யா!
காதல் படத்தில் அறிமுகமான சரண்யா நாக் அந்த படத்தில் பள்ளி மாணவியாக நடித்தாலும் நடித்தார் அடுத்து வந்த “பேராண்மை” படத்திலும் மாணவியாகவே நடித்தார். இந்நிலையில் “ரெட்டை வாலு” படத்திலும் பள்ளி மாணவியாக நடிக்க கேட்டபோது, முதலில் மறுத்துவிட்டாராம். இதனையடுத்து, “யூனிபார்ம் போட்டு போட்டோ ஷுட் நடத்திப் பார்க்கலாம் உங்களுக்கு திருப்தி என்றால் மட்டும் நடியுங்கள்” என்று படயூனிட் சொன்ன பிறகு ஒ.கே. சொன்னாராம். ஆனால், “இதுதான் நான் பள்ளி மாணவியாக நடிக்கும் கடைசி படம். இனிமேல் என்னை யாராவது பள்ளி மாணவியாக நடிக்க கூப்பிட்டீர்கள் அவ்வளவுதான். எத்தனை நாளைக்குத்தான் பள்ளி மாணவியாகவே நடிப்பது? புரமோஷன் கொடுத்து கல்லூரி மாணவியாவாவது நடிக்க வையுங்கள்” என்று இயக்குநர்களிடம் சான்ஸ் கேட்டு வருகிறார் சரண்யா நாக்.