180 கோடி நஷ்டம். புலம்பும் டிஸ்னி நிறுவனம்!
“மனோஜ் நைட் ஷியாமளனிடம் போய் 130 கோடி மில்லியன் படத்தை இயக்கும் பொறுப்பைத் தந்திருக்கிறார்களே.. ”என்று ஷியாமளன் “ஆஃப்டர் எர்த்” படத்தை இயக்கிய போது ஹாலிவுட்காரர்கள் அலறினார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு “லான் ரேஞ்சர்” படத்தின் கதையைக் கேட்டால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும். காரணம், ஜோனி டெப் நடிப்பில் ஜுலை மாதம் வெளிவந்த “த லோன் ரேஞ்சர்” படத்தின் பட்ஜெட் 250 கோடி மில்லியன் டாலர்கள்.
ஆனால் முன் படத்துக்கு அலறியபோது, அந்தப்படம் பெரிய வெற்றி பெற்று ஷியாமளனுக்கு ஹாலிவுட்டில் வசூல் மன்னன் பட்டமும் கிடைத்துவிட்டது. தற்போது வெளியான “த லோன் ரேஞ்சர்” படமோ 95 மில்லியன் கோடி டாலர்கள்தான் வசூலித்துள்ளதாம். “த லோன் ரேஞ்சர்” படத்தால் எங்களுக்கு 180 கோடி வரை நஷ்டம் என்று புலம்பி வருகிறது படத்தைத் தயாரித்த டிஸ்னி நிறுவனம்.