வரலாற்றில் இடம் பெற மோதும் நடிகைகள்!
வரலாற்று கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதற்கு அனுஷ்கா, சார்மி இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் வரலாற்றுப் படங்களை எடுக்க தெலுங்கு பட உலகம் அச்சத்தில் இருக்கிறதாம். “அருந்ததி“ படத்தில் நடித்து அழியாப் புகழ் பெற்றார் அனுஷ்கா. சிவாங்கி படத்தில் நடித்து சார்மியும் வரலாற்று நாயகியாகவே வலம் வருகிறார்.
இதனிடையே அனுஷ்கா “ருத்ரமாதேவி” என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். “அனுஷ்காவுக்கு மட்டுமதான் வரலாறு இருக்குமா எனக்கு இருக்க்க்கூடாதா? வரலாற்றுக் கதைகள் எனக்கும் பொருத்தமாக இருக்கும்” என்று சொல்லி ஃபேஸ்புக்கில் வரலாற்றுப் பட ஸ்டில்களைப் பதிவேற்றம் செய்தபடி இருக்கிறாராம் சார்மி. இதனை கண்டு ஆத்திரத்தில் இருக்கிறாராம் அனுஷ்கா. அச்சத்தில் தவிக்கிறது ஆந்திரா.