வேறு வழியில்லாமல் ஓ.கே சொன்ன நயன்தாரா!
தெலுங்கின் முன்னணி நாயகன் கோபிசந்த்- நயன்தாரா இணைந்து நடிக்கும் “ புரோடக்ஷன் நம்பர் 5” படத்தின் தொடக்க விழா ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடந்தது. விழாவில் படத்தின் நாயகி நயன்தாரா கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என நாயகன் கோபிசந்தும், படத் தயாரிப்பாளரும் கேட்டுக்கொண்டார்கள். வேறு வழியில்லாமல் ஓ.கே சொன்ன நயன்தாரா மூன்று கட்டளைகளை பிறப்பித்த பிறகுதான் ஸ்பாட்டுக்கே வந்தாராம். அவை . எந்த பத்திரிகையாளரையும் அந்த விழாவில் நான் பார்க்கக் கூடாது. ஒருவேளை பத்திரிகையாளர்கள் யாராவது வந்துவிட்டால், நான் கண்டிப்பாக அவர்களிடம் பேச மாட்டேன். என்னுடைய வருகையை மிகவும் ரகசியமாக வைத்துக்கொள்ளவேண்டும்.
நயன்தாராவின் கட்டளைப்படி பத்திரிகையாளர்கள் இல்லாமல் அந்த விழா இனிதே நடந்துமுடிந்தது.