எனது நோக்கம் பணம் அல்ல
லாஸ் ஏஞ்சல்ஸ்
59 வயதாகும் பிரபல ஆக்ஷன் நடிகர் ஜாக்கி சான் சீனாவின் யிஸ்குவாங் மாவட்டத்தில் ஜே.சி வேர்ல்டு என்ற நினைவு பூங்கா அமைக்க திட்டமிட்டு உள்ளார்.பொதுவாக சீனாவில் தீம் பார்ர்க்குகள் அதிகரித்து வருகின்றன.சமீபத்தில் தான் முதல் பறவைகள் தீம்பார்க் இங்கு உருவாக்கபட்டது. 2015 இல் டிஸ்னி ஒரு தீம்பார்க் திறக்கவும். ஸ்டீபன் ஸீபில் பர்க் 2016 இல் ஒரு தீம் பார்க் திறக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.
இந்த தீம் பார்க் குறித்து ஜாக்கி சான் கூறியதாவது:-
3.5 சதுர மைல் அளவில் இந்த தீம் பார்க் அமைகிறது.இதில் 5 பிரிவுகள் இருக்கும்.ஒவ்வொன்றிலும் வெவ்வேறு வகையானவைகளாக் இருக்கும்.இவை பார்வையாளர்களுக்கு பல்வேறு கலாச்சார அனுபவங்களை வழங்கும். நான் இங்கு எனது அனைத்து பொருட்களையும் காட்சிக்காக வைக்கப்போகிறேன்.அவை பண மதிப்பு அற்றயாக இருக்கலாம் ஆனால் அந்த பொருட்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. மேலும் பூங்காவில் அனைத்து வகையான பொருட்களும் இடம் பெற்று இருக்கும்.
பார்க்கின் மைய பகுதியில் சீனாவின் வரலாற்று சிறப்பு மிக்க சந்தன வீடுகள் இருக்கும். நான் சிறுபிள்ளையாக இருக்கும் போது மிகவும் ஏழை எனக்கு பணவசதி தாமதமாகத்தான் கிடைத்தது.நான் உலகம் முழுவதும் சுற்றி அனைத்து விஷேசமான பொருட்களையும் வாங்கி உள்ளேன். இந்த பூங்காவிற்குள் நுழைய நுழைவு கட்டணம் கிடையாது. ஆனால் சில வகையான விசேஷ காட்சிகளுக்கு மட்டும் கட்டணம் உண்டு. பூங்காவில் 60 சதவீதம் இலவசம்.40 சதவீதம் கட்டண காட்சிகளாகும் இது பூங்கா பராமரிப்புக்கு பயன்படுத்தப்படும்.எனது நோக்கம் பணம் அல்ல இவ்வாறு அவர் கூறினார்.