Friday 15th November 2024

தலைப்புச் செய்தி :

செவ்வாய், வெள்ளி ராகுகாலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது ஏன்?


Written by NIRANJANANIRANJHANA

நவகிரகங்களில் பலம் வாய்ந்தது இராகுவும், கேதுவும்.  

ஜோதிட கணிப்புக்கு உரிய ஒன்பது கிரகங்களில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் இராசி மண்டலங்களில் சொந்தமான வீடு உண்டு. இதில், இராகு-கேதுக்கு தனியாக வீடு என்பது இல்லை. அதுபோல, கிழமை என்று எடுத்துக் கொண்டாலும், ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு கிழமைக்கு உரியதாக இருக்கிறது. இதிலும், இராகு- கேதுவுக்கு தனியே கிழமைகள் இல்லை. என்றாலும், இராகு-கேதுவின் தனித்தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் ஒவ்வொரு நாட்களிலும் ஒன்றரை மணி நேரம் இராகுவுக்கு பலம் சேர்ப்பதாக விதிக்கப்பட்டிருக்கிறது.

இதைதான் “ராகுகாலம்” என்கிறோம்..

மாய கிரகமான இராகுவின் அதிதேவதை துர்கை அம்மன்.

துர்கை அம்மனுக்கு உகந்த செவ்வாய்கிழமையில், இராகு காலத்தில் அம்மனுக்கு அலரி பூ, எலுமிச்சை மாலை, எலுமிச்சை தீபம் ஏற்றுவது மிக விசேஷம்.

சுக்கிர வாரம் ராகுகாலம் பலம் அதிகம்! எதனால்?

அசுரனான ராகுவுக்கு தலைவனாக இருப்பவர் சுக்கிராசாரியார்.Bhakthi Planet இவர்தான் ‘சுக்கிரன்’ என்று அழைக்கப்படுகிறார். ராகுவும், சுக்கிரனும் நண்பர்கள். இதனால்  “சுக்கிர வாரம்” என்று அழைக்கப்படுகிற வெள்ளிக்கிழமையில், ராகுகாலத்தில் அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால், திருமணதடை நீங்கும். பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேர்வார்கள். கலைதுறையில் முயற்சிப்பவர்கள் இந்த பரிகாரம் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

செவ்வாய்கிழமையில் வரும் ராகு கால வழிபாடு நல்ல பலன் தரும் என்றாலும், அதைவிட இன்னும் அதிக பலன் தருவது வெள்ளிக்கிழமையில் வரும் ராகுகாலம் ஆகும். நீச்சனை நீச்சன் பார்த்தால் யோகம் என்கிறது ஜோதிடகலை. அதுபோல, அசுரனான சுக்கிரனும், ராகுவும் ஒன்றாக இருக்கும் நாள் வெள்ளிக்கிழமையில் வரும் ராகுகாலம். இது மேலும் விசேஷமானதாகும்!

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

Bhakthi Planet

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech