நான் என்ன அறிமுக நடிகனா?
அர்ஜுன் இயக்கத்தில் 1994ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை ஈட்டிய படம் ”ஜெய்ஹிந்த்” அந்த வெற்றியின் பங்கில் கவுண்டமணி- செந்தில் கூட்டணியில் அமைந்த காமெடிக்கு பெரிய பங்கு உண்டு. அதனால் தான் தற்போது இயக்கிவரும் “ஜெய்ஹிந்த் – 2“ படத்திலும் கவுண்டமணியை நடிக்க வைத்து விடவேண்டும் என்று இது தொடர்பாக பேசுவதற்கு தன் அலுவலகம் வருமாறு கவுண்டமணி அழைத்தாராம் அர்ஜுன். நான் என்ன புதுமுக நடிகனா… உங்கள் அலுவலகம் வந்து பார்ப்பதற்கு. வேண்டுமானால் நீங்கள் வந்து பாருங்கள்” என்று பதிலளித்தாராம் கவுண்டமணி. ஆனால் அர்ஜுன் கவுண்டமணி அலுவலகம் போகவில்லை. இப்போது பிரேமானந்தா காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். கேட்பவர்களிடம், “ஒரு மாற்றத்துக்கு பிரேமானந்தா நடிக்கிறார் என்று சொல்லி வருகிறாராம் அர்ஜுன்.