தயாரிப்பாளர் ஆகிறார் ஏ.ஆர். ரஹமான்!
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். ஓய். எம். மூவிஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கியிருக்கும் அவர், ஈராஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்துடன் இணைந்து விரைவில் ஒரு இந்திப்படத்தைத் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். விரைவில் இயக்குநர், நடிகர், நடிகைகள் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. படத்துக்கு இசையை அவரே அமைக்க இருக்கிறாராம்.