Friday 15th November 2024

தலைப்புச் செய்தி :

எதிர்பாரா யோகத்தை தரும் எளிய பரிகாரங்கள்!

Written by NIRANJANANIRANJHANA

வளையல் ஓசை தரும் லஷ்மி கடாக்ஷம்

பெண்களின் கைகளுக்கு அழகு தருவது வளையல். அதுவும் சுமங்களி் பெண்கள் வளையல் அணியாமல் இருக்ககூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. அத்துடன், வளையல் அணியாமல் மற்றவர்களுக்கு உணவு பரிமாறக்கூடாது. சலசலக்கும் ஓசையுடன் கண்ணாடி வளையல் அணியும்போது பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.

பெண்களுக்கு வளைகாப்பு செய்யும்போது இன்றும் சில கிராமப்புறங்களில் முதலில் வேப்பிலை கொழுந்தை வளையல் போல செய்து, இறைவன் முன் வைத்து வணங்கி, அந்த வேப்பிலை வளையலைதான் முதலில் அணிவிப்பார்கள். பிறகுதான் தங்க வளையலையே போடுவார்கள்.

ஏன் இப்படி செய்கிறார்கள் என்றால், கர்ப்பவதியாக இருக்கும் பெண்ணின் அருகில் தோஷம் இருப்பவர்களோ, வியாதிகளால் அவதிப்பட்டு வருகிறவர்களோ அல்லது பொறாமை மனம் படைத்தவர்களாலோ எந்த ஆபத்தும் அந்த பெண்ணுக்கு வராமல் இருக்க வேப்பிலை வளையல் அணிவிப்பார்கள். வேப்பிலை இருக்கும் இடத்தில் கிருமிகள் அண்டாது. துஷ்ட சக்தியும் அண்டாது.

Bhakthi Planetவேப்பிலை வளையலை போல் கண்ணாடி வளையலும் மகத்துவம் வாய்ந்தது. கண்ணாடி வளையல் அணியும்போது மனதில்  மகிழ்ச்சி ஏற்படும். அத்துடன் கலகல ஓசையால் எந்த துஷ்டசக்தியையும் நெருங்கவிடாது. அத்துடன் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு மகத்துவம் உண்டு. அதிலும் பச்சை, சிகப்பு கண்ணாடி வளையல்களை அதிகம் விரும்புவார்கள். இதற்கு காரணம் பச்சை, மனதை அமைதிப்படுத்தும். வாழ்வை செழிமையாக்கும். சிகப்பு,  கண்திருஷ்டியை அகற்றும் சக்தி கொண்டது.

மங்கள பொருட்களில் வளையலும் இடம் பெற்று இருக்கிறது. தங்கமோ, வெள்ளியோ அல்லது கண்ணாடி வளையலோ எதுவாக இருந்தாலும் சரி, பெண்கள் கண்டிப்பாக கைகளில் வளையலை அணிய வேண்டும். இதனால் லஷ்மி கடாக்ஷமும், மனதில் அமைதியும் உண்டாகும்.

இராசி – நட்சத்திர கோலங்கள் சாதகமா, பாதகமா?

கோலம் என்றாலே மங்கள சின்னம் ஆகும். கோலம்போடும் இல்லத்திற்கு எந்த துஷ்டசக்தியும் நெருங்காது. அதனால்தான் திருநாட்களிலும், மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும்போதும் கண்டிப்பாக கோலம் போட வேண்டும் என்று பெரியவர்கள் எழுதாத சட்டமாக வைத்திருந்தார்கள்.

அதுபோல நவராத்திரி தினங்களில், நவராத்திரி கோலம் என்றும் விசேஷ கோலம் இருக்கிறது.  மற்ற கோலங்களை போல் நவராத்திரி கோலம், வாசற்படியில் போடுவதை தவிர்த்து, பூஜை அறையிலோ அல்லது கொலு வைக்கும் இடத்திலோ கோலம் போட்டால் நல்ல பலன் தரும்.

ஆனால், ஒருவரின் இராசிக்கு உகந்த கோலமோ, நட்சத்திரத்திற்கு உகந்த கோலமோ அந்த இல்லத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பலன் தரும் என்கிற நம்பிக்கை தவறு.

ஏன், அந்த இராசிகாரர்களுக்கே நல்ல பலன் தருமா என்றால் நிச்சயம் தராது என்றே சொல்ல வேண்டும். காரணம், இராசி கோலம் என்பது நவகிரகங்களுடன் சம்மந்தப்பட்டது. ஒவ்வொரு இராசியும் நவகிரகங்களால்தான் இயங்குகிறது. “குரு பார்த்தால் கோடி புண்ணியம்”, “அஷ்டம சனி, மச்சு வீட்டையும் கூரை வீடாக்கும்” போன்ற கருத்துகள் நவகிரகங்களை குறித்து உள்ளன.

இராவணன், நவகிரகங்களை அடிமையாக்கி, தன் சிம்மாசன படிகளாக மாற்றினான். அதில் இருந்து அவனுக்கு பிடிக்க ஆரம்பித்தது கஷ்ட காலம்.

கோலம் என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். இறைவனுக்கு உகந்த சின்னங்களின் கோலங்களை பூஜை அறையில்தான் போடவேண்டும்.

ஆனால் இராசி கோலமோ, நட்சத்திர கோலமோ இல்லத்தில் போடுவது அத்தனை நன்மையா என்றால் நிச்சயம் இல்லை.

எப்படி நவகிரகங்களை இல்லத்தில் வைத்து வழிபட கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறதோ, இதுபோல் நவகிரகங்களின் சக்தியால் இயங்கும் இராசி கோலம் மட்டும் எப்படி நன்மை தரும்?

முக்கியமாக, அந்த இராசி கோலத்தை அந்த இராசிகாரர்களோ, அல்லது மற்ற இராசிகாரர்களோ தெரியாமல் மிதித்து விட்டால் இராவணனைபோல் அல்லவா அவதிப்பட வேண்டும்.

இராவணன், சொர்கத்திற்கு போய் வர  பாதை அமைக்க திட்டம் மிட்டான். ஆனால் நவகிரகங்களின் மீது எப்போது கால் வைத்தானோ, சூர்ப்பணகை ரூபத்தில் வந்தது சனி. சொந்த காசில் தனக்குதானே சூன்யம் வைத்துக்கொண்டான்.

அதனால், அனைவருக்கும் பொதுவான கோலம் போடுவதுதான் நன்மை தரும்.  அதேபோல் அரிசி மாவில்  கோலம் போட்டால் அந்த இல்லத்தில் ஸ்ரீமகாலஷ்மி வாசம் செய்யும் என்கிறது சாஸ்திரம்.

குழந்தைகளுக்கு பெயர் எப்படி வைக்க வேண்டும்?

குழந்தை பிறந்து சில நாட்களிலேயே பெயர் வைத்து அழைக்க வேண்டும். அல்லது ஒரு வருடம் முடிவதற்குள்  பெயர் வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு வீட்டின் பெரியவர்களின் – முன்னோர்களின் பெயரையோ அல்லது குலதெய்வத்தின் பெயரையோ அல்லது ஜென்ம நட்சத்திர எழுத்துகளுக்கேற்பவோ பெயர் வைக்கலாம். அத்துடன், குழந்தை பிறந்த தேதிக்கு ஏற்ப, பிறந்த தேதிக்கு உகந்த நட்பு எண்ணில் பெயர் வைத்தாலும் நல்ல எதிர்காலம் அமையும்.

எதிரிகளை வெல்ல – ஆதித்ய ஹிருதயம் !

இராமருக்கும் – இராவணனுக்கும் போர் நடந்துக்கொண்டு இருந்தது.  யார் வெற்றி பெறுவார்கள்?, தர்மம் வெல்லுமா? என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அந்த எதிர்பார்ப்பு அகஸ்திய முனிவருக்கும் இருந்தது. அதனால்  இராமசந்திரனை பார்க்க வந்தார்.

“இராம, நீ இராவணனை வெல்ல ஆதித்ய ஹிருதய மந்திரத்தை சொல். எதிரிகளை வெல்லும் ஆற்றல் எளிதில் கிடைக்கும்.” என்று கூறினார் முனிவர்.

அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி, சூரிய பகவானை மனதார நினைத்து வணங்கி,  ஆதித்ய ஹிருதய மந்திரத்தை உச்சரித்தார் ஸ்ரீஇராமர். இதன் பலனாக, இராவணனை வீழ்த்த  சூரியனின் ஆசியும் இராமனுக்கு துணை இருந்தது.

வழக்கு சாதகமாக அமைய, எதிரிகளின் சூழ்ச்சி நம்மை அண்டாமல் இருக்க, அரசாங்கத்தால் எந்த தொல்லையும் வராமல் இருக்கவும், அரசாங்க ஆதரவு கிடைக்கவும், ஞாயிற்று கிழமையில் அதிகாலையில், “ஆதித்ய ஹிருதயம்” மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இதன் அற்புத பலனாக பாதுகாப்பு வளையம் போல், சூரிய பகவான் நம்மை சுற்றி நின்று  காப்பார். நன்மைகளை அள்ளி தருவார்!

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

mm ads

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech