Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

திருமகளின் அருள் இருந்தால் முயற்சி திருவினையாகும்!

Written by NIRANJANANIRANJHANA

திருமகளின் ஆசி இருந்தால்தான் முயற்சி திருவினையாகும். அது எப்படி?

முயற்சி செய்பவர்கள் அனைவருமே சாதித்து விடுகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை. திருமகளின் அருட்பார்வை இருப்பவர்களால்தான் சாதிக்க முடிகிறது. நாம் செய்யும் செயல் நல்வினையாக மாறுவதும் தீவினையாக மாறுவதும் திருமகளின் விளையாட்டு.

எடுக்கும் காரியம் நல்வினையாக மாற, திருமகளின் ஆசி இருந்தால், அந்த திருமகள் நம் முயற்சியை திருவினையாக மாற்றி அருள் செய்கிறாள்.

எதிரிகளை அழிக்கும் ஆற்றல் நரசிம்மருக்கு இருந்தாலும், தன் பக்தர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை தந்து செல்வத்தை தரும் ஆற்றல், பொறுமையின் தாயான ஸ்ரீமகாலஷ்மிக்கு இருக்கிறது. திருமகள், நரசிம்மரின் மடியில் அமர்ந்து, தங்களை தரிசிக்க வரும் பக்தர்களின் வாழ்வில் சுபகாரியங்கள் நடக்கவும், அமைதி கிடைக்கவும் ஸ்ரீலஷ்மி-நரசிம்மராக அருள் செய்கிறார்கள்.

ஸ்ரீமந் நாராயணன்தான் இராமராகவும், ஸ்ரீலஷ்மிதேவியே சீதையாகவும் அவதரித்தார்கள். தசரதர் ஸ்ரீஇராமரை காட்டுக்கு செல் என்றதும், ஸ்ரீஇராமரோடு சீதையும்,  இவர்களுக்கு துணையாக தம்பி லஷ்மணனும் வனவாசம் போனார்கள். இராவணன் சீதையை கடத்திய பிறகு இராமசந்திரனின் வாழ்க்கை அல்லல்பட்டது. சீதையை மீட்ட பிறகுதான் அவர் வாழ்வில் வசந்தம் வீச தொடங்கியது ஆம். பட்டாபிஷேகமே நடந்தது.

தன் நலத்தை விட தன்னை சார்ந்தவர்களின் நலனே பெரிது எனும் மனம் படைத்தவர் ஸ்ரீலஷ்மிதேவி. அதனால்தான் பெருமாள் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அத்துணை அவதாரத்திலும் லஷ்மிதேவியும் பிறவி எடுத்து தன் கணவருக்கு பெரும் உதவியாக இருந்தாள்.

ஏன் லஷ்மிக்கு மட்டும் இத்தனை மகிமை என்றால், அவள் பொறுமையின் திலகம்.

பொதுவாக ஒருவருக்கு கோபம் வந்தால், நாவடக்கம் போய்விடும். உதாரணத்திற்கு ஒரு குட்டி கதை இருக்கிறது.

ஒருவர் தன் அலுவலகத்தில் வேலை செய்துக்கொண்டு இருந்தார். அவர் அந்த அலுவலகத்தில் பல பணிகளை இழுத்துபோட்டு செய்தாலும் அந்த ஆபீசில் இருப்பவர்கள் இவரை பாராட்ட மாட்டார்கள். அவர் ஒருநாள் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஒருசமயம் நண்பர்  ஒருவர் அவர் இல்லத்திற்கு வந்தார். அப்போது தன் நண்பரிடம் பழைய நிகழ்ச்சிகளை பற்றி பேசிக் கொண்டு, அலுவலகத்தில் பணி செய்த காலத்தில் எடுத்துக்கொண்ட குரூப் போட்டோ ஆல்பம் ஒன்றை காண்பித்தார்.

அந்த புகைப்படத்தை பார்த்துகொண்டே வந்த நண்பர், “என்னப்பா? இந்த படத்தில் இருப்பவர்களில் சில பேரின் கண்கள் மற்றும் வாய் கிழிந்து இருக்கிறதே  ஏன்?” என்றார்.

“அதுவா நான் வேலை செய்யும்போது இவர்கள் என்னமா என்னிடம் வேலை வாங்கினாங்க தெரியுமா? சிறிது நேரம் கூட உட்காரவிடாமல் விரட்டிக்கொண்டே இருப்பார்கள். அதனால்தான் இவர்கள் கண்கள் நொல்லகண்ணா போகணும், வாய் கோணையாக போகணும்னு புகைப்படத்தில் இப்படி செய்து வைத்திருக்கிறேன்.” என்றார் அந்த நபர்.

வேலையில் இருந்து ஒய்வு பெற்ற பிறகும் இவரின் கோபம் தணியவில்லை.

அந்த நபரை போலதான் பலர் இருக்கிறார்கள். உடல் மண்ணில் சாயும் வரையில் விரோதத்தை மனதில் இருந்து நீக்காமல் இருக்கிறார்கள். பொறுமை இருந்தால்தான் அடுத்தவர்கள் செய்யும் தவறை மன்னிக்க முடியும். விரோதத்தை மறக்க முடியும்.

விரோதத்தை வளர்த்துகொள்வதால் லாபம் வருமா? நிம்மதிதான் கிடைக்குமா?  நிச்சயம் இல்லை. மறப்போம் – மன்னிப்போம் என்று வாழ்ந்தால்தான் மனதில் அமைதி கிடைக்கும். அமைதி இருந்தால்தான் அடுத்த வேலையை பார்க்க முடியும். நிம்மதியாக வாழ முடியும்.

Bhakthi Planetஅத்தகைய பொறுமை திருமகளுக்கு இருந்ததால்தான்  சீதையாக தோன்றி இராமருக்கு பெருமை சேர்த்தாள்.

ஆம் –

இராவணனால் சீதை கடத்தப்பட்ட பிறகு, சீதா தேவி எங்கு இருக்கிறார் என்று இராம பக்தனான ஆஞ்சநேயர், இலங்கையில் பல இடங்களில் தேடி வந்துக்கொண்டு இருந்தார். அப்போது அசோகவனத்திற்கு வந்தபோது சீதையை கண்டார்.

அனுமார் சீதையிடம் தன்னை இராமர்தான் அனுப்பினார் என்பதற்கு போதிய ஆதாரம் காட்டினார். இதை கண்ட சீதாபிராட்டி மகிழ்ந்தார். “தாயே நீங்கள் என் தோல் மேல் ஏறிக்கொள்ளுங்கள். நான் ஸ்ரீராமசந்திர பிரபு இருக்கும் இடத்தில் உங்களை விட்டு விடுகிறேன்.” என்றார்.

அதற்கு சீதை, “வேண்டாம். என் கணவர் நேரடியாக வந்து கொடியவனான இராவணணிடம் போர் செய்து வெற்றி பெற்று அவரே என்னை அழைத்து சென்றால்தான் எனக்கு பெருமை, அவருக்கும் பெருமை. அந்த நல்லகாலம் வரும்வரை நான் பொறுமையாக இருப்பேன்.” என்றார் சீதாபிராட்டி.

இதுபோல இன்னொரு காட்சியும் இருக்கிறது.

இராமருக்கும் இராவணனுக்கும் நடந்த போரில் இராவணனை கொன்றார் ஸ்ரீராமர். இந்த செய்தியை அனுமார் அசோகவனத்தில் இருக்கும் சீதாதேவியிடம் சொன்னார். இதை கேட்ட சீதை மகிழ்ந்தார்.

அப்போது அனுமார், அங்கு இருந்த அரக்கிகளை பார்த்து ஆத்திரம் அடைந்து, “தாயே, இவர்கள் உங்களை எந்த அளவிற்கு சித்ரவதை செய்து இருப்பார்களோ. அதனால்  இவர்களையும் இப்போதே கொன்று விடுகிறேன்.” என்று கூறிக்கொண்டு அரக்கிகளை கோபமாக பார்த்தார் அனுமன். இதை கண்ட சீதாதேவி, “இவர்கள் என் மேல் தனிபட்ட விரோதத்தில் அப்படி செய்யவில்லை. இராவணனிடத்தில் பணி செய்தார்கள். அதனால் இவர்கள் அந்த கொடியவனின்  பேச்சை கேட்க வேண்டிய சூழ்நிலை. இவர்கள் என்ன செய்வார்கள் பாவம்.”  என்று அரக்கிகளை மன்னித்துவிட்டார் சீதாபிராட்டி.

திருமகள் சீதையாக அவதாரம் எடுத்து, பொறுமை என்றால் என்ன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்திருக்கிறார்.

பொறுமையை யார் கடைபிடித்து, தன் பணியை சரியாக செய்கிறார்களோ  அவர்கள்தான் திருமகளின் அன்பை பெற முடியும். திருமகளின் அன்பை பெற்றால்தான் நம் முயற்சி திருமகளால் திருவினையாகும்!.

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

mm ads

Posted by on Jun 27 2013. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், பிற கோயில், பெருமாள் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »