Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

அவசரம், பரபரப்புடன் அதிகம் காணப்படுபவர் யார்? ஜோதிட சிறப்பு கட்டுரை

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai

அவசரம் – பரபரப்பு என்பது இந்த காலத்தில் மட்டுமல்ல உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே அனைவருக்கும் இருக்கிறது. உதாரணத்திற்கு சிலப்பதிகாரத்தில் ஒரு காட்சி.

கண்ணகியின் சிலம்பில் ஒன்றை கோவலன் விற்க சென்றான். அந்த நேரத்தில் பாண்டிய நெடுஞ்செழியனின் மனைவி கோப்பெருந்தேவியின் சிலம்பு  காணாமல் போய் இருந்ததால், அதை யார் திருடினார்கள் என்று கண்டுபிடியுங்கள் என்று அரசர் உத்தரவிட்டு இருந்தார்

அந்த நேரத்தில் தான் கோவலனின் விதி விளையாட தொடங்கியது. ஆம். கோவலன் தன் மனைவி கண்ணகியின் சிலம்பை விற்க சென்ற இடத்தில், ஒரு பொற்கொல்லனை சந்தித்து, சிலம்பு விற்பனை பற்றி கேட்டான் கோவலன்.

சிலம்பை கண்ட பொற்கொல்லன், இது அரசிக்கு சொந்தமானது போல இருப்பதாக நினைத்து, “சற்று இங்கேயே இரு” என்று  கோவலனிடம் கூறி அரண்மனைக்கு சென்று, “அரசியின் சிலம்பை திருடியவனை கண்டேன்” என்றான்.

உடனே, மன்னன் பாண்டிய நெடுஞ்செழியன், “அந்த கள்வனை கொன்று, அச்சிலம்பினைக் கொணர்வீர்” என்றான் அவசர அவசரமாக. அவசரத்தால் மதி இழந்தார்  மன்னர். அவசரப்படாமல் நிதானமாக யோசித்து, “கள்வனை கொன்று வாருங்கள்” என்பதற்கு பதிலாக,  “கொண்டு வாருங்கள்” என்று சொல்லி இருந்தால், கண்ணகி மதுரையை எரித்திருக்க மாட்டாள். மன்னரும் நீதியில் உயர்ந்தவராக இருந்திருப்பார்.

இதனால்தான் பெரியவர்கள் சொல்வார்கள், “எதை செய்வதாக இருந்தாலும் பதறாமல் நிதானமாக செய். பதறும் காரியம் சிதறும்” என்பார்கள்.

ஆத்திரத்தில் எழுதுகிற கடிதம் ஆபத்தில் முடியும். அதுவே, கோபம் தணிந்த பிறகு அதே விஷயத்தை பற்றி யோசிக்கும்போது அது மிக சாதாரண விஷயமாக தோன்றும்.

பல நேரங்களில் நம் வீண் கோபத்தை நினைத்தால் அந்த வீண் கோபத்தின் மீது கூட கோபம் வருவதுண்டு.

அவசரத்திலும், பரபரப்பிலும்தான் ஒருவன் முட்டாள்தனமான காரியங்களை செய்கிறான்.

அவசரம் சில நேரத்தில் சாதகமாக இருந்தாலும் பல நேரங்களில் பாதகமாக அமைகிறது.

அதற்காக அவசரமாக எடுக்க வேண்டிய முடிவுகளை தள்ளி போடுவதும் துன்பத்தில் முடியும்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல, அவசரமாக எடுக்க வேண்டிய முடிவுகளை தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் அவசரம் காட்டில் அதுவே நஞ்சாகும்.

நிம்மதியான வாழ்க்கைக்கு நிதானமான மனநிலை அவசியம்.

சரி –

எந்த நேரத்திலும் காலில் சுடு தண்ணீர் ஊற்றியது போல் அவசரம், பரபரப்பு என்ற மனநிலையில் இருப்பவர்கள் யார் என்பதை பற்றி ஜாதக ரீதியாக சில கருத்துகளை பார்ப்போம்.

மீனம், மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம் இந்த ராசிகாரர்கள் அல்லது இந்த லக்கினக்காரர்கள், பரபரப்புடன் காணப்படுவார்கள். இந்த இராசிகளில் அமையப்பெற்ற சந்திரனை அல்லது இந்த லக்கினத்தை செவ்வாய் பார்த்தாலும், சூரியன் பார்த்தாலும் மிகுந்த பரபரப்பு உடையவர்கள்.

இந்த இராசிகாரர்களுடன் செவ்வாய் சேர்ந்தாலும், சூரியன் சேர்ந்தாலும் சொல்லவே வேண்டாம். டென்ஷன் பார்ட்டிகள்தான்.

இத்தகைய கிரக அமைப்பு உள்ள ஜாதகர்கள் டென்ஷன் குறைய, எளிய பரிகாரம் இருக்கிறது. அது என்னவென்றால், வலது கை மோதிர விரலில் முத்துவோ அல்லது பச்சை நிற ரத்தினமோ இவற்றில் ஏதேனும் ஒன்றை மோதிரமாக செய்து அணிந்தால், மனம் அமைதி பெரும். மனம் அமைதி பெற்றாலே பரபரப்பும் குறையும்.

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

mm ads

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »