ராமர் பிறந்த தேதியும் ஆண்டும் இதுதான்.!
புஷ்கர் பட்நாகர் என்ற இந்திய ஐ.ஆர்.எஸ். முன்னாள் அதிகாரி ஸ்ரீராமனின் பிறப்பு, வனவாசம், மனைவியை பிரிதல், இராம – இராவண யுத்த வெற்றி, ஸ்ரீராம பட்டாபிஷேகம் முதலியவை குறித்து வால்மீகி இராமாயணத்தில் உள்ள ஜோதிடக் குறிப்புகள் கொண்டு ஆராய்ந்துள்ளார். (‘Dating the Era of Lord Ram’ published by Rupa & Co)
“மேஷத்தில் சூரியன், துலா இராசியில் சனி, கடகத்தில் குரு, மீனத்தில் சுக்கிரன், மகரத்தில் செவ்வாய், கடக லக்னம், புனர்வசு சந்திரன் ஆகிய கோள் நிலையில் அமாவாசைக்கு 9 நாள் கழித்து அயோத்தியில் (25Deg.N 81Deg.E) ஸ்ரீராமன் பிறந்தான்.”
இது வால்மீகி கூறும் குறிப்பு. அதை வைத்து ஆய்வு செய்தார் பட்நாகர்.
கிரக நிலைகளைத் துல்லியமாகக் கூறும், வானசாஸ்திர நவீன மென்பொருள் துணைக் கொண்டு, ஸ்ரீராமனின் ஜென்மம்-கி.மு.5114 ஆம் வருடம், ஜனவரி மாதம் பத்தாம் தேதி, நண்பகல் 12 மணி முதல் பகல் ஒரு மணிக்குள், என்பது பட்நாகர் முடிவு.
இந்த ஆய்வின்படி ஸ்ரீராமன் தன் 25 ஆவது வயதில் (5114-5089) வனவாசம் மேற்கொள்ள நேர்கிறது. இதுபோல், வால்மீகி இராமாயணத்தின் முக்கிய நிகழ்வுகளை தேதி வாரியாக பட்நாகர் பதிவு செய்துள்ளார். சீதை அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த காலகட்டம் கிமு. 5076
இலங்கை அரசும், இராமாயண நிகழ்விடங்களை ஆய்வு செய்து அதன் கால கட்டத்தை உத்தேசமாகக் கணித்துள்ளது. அவையும் வால்மீகி இராமாயணக் குறிப்புகளை ஒட்டியே அமைந்துள்ளன.!