ஜாதகப்படி மகா தைரியசாலி யார்?
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.
ஒரு அரசர் இருந்தார். அவருக்கு ஒரு கேள்வி எழுந்தது. யார் உண்மையான தைரியசாலி என்பதுதான் அவர் கேள்வி. இதை பற்றி மந்திரிகளிடம் கேட்டார் அரசர். இதற்கு ஒவ்வொரு மந்திரிகளும் ஒவ்வொரு கருத்துகளை சொன்னார்கள்.
முதல் மந்திரி எழுந்தார். “அரசே, சிறு போர் படையாக இருந்தாலும் பெருஞ்சேனையை எதிர்கொள்ள துணிபவர்கள்தான் மகா தைரியசாலி.” என்று கூறி அமர்ந்தார்.
அடுத்த மந்திரி எழுந்தார். “அரசே, போரில் எதிரிகளுக்கு அஞ்சாமல் போரிட்டு வீர மரணம் அடைபவர்கள்தான் தைரியசாலி.” என்றார்.
இதே கருத்தைதான் மற்ற அமைச்சர்களும் சொல்லி வந்தார்கள்.
அந்த சமயம், அனைவரின் கருத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார் வயதில் பெரியவரான ஒரு அமைச்சர். கடைசியாக அவர் எழுந்து தன் கருத்தை சொன்னார்.
“மன்னா, அமைச்சர் பெருமக்கள் சொல்லிய அத்துணை கருத்தும் உண்மைதான். படைக்கு முந்துபவர்கள்தான் வீரர்கள், தைரியசாலிகள். ஆனால் இவர்களை விட மகா தைரியசாலி ஒருவன் இருக்கிறான். அவன் யார் என்றால், தன் கடமையை சரியாக செய்து, எந்த கஷ்டம் வந்தாலும் அதை பெரிதுப்படுத்தாமல், துயரங்களில் கலங்கி விடாமல், துன்பங்களை கண்டு துவண்டு போகாமல், பிறருக்கும் துரோகம் நினைக்காமல், தன்னை நம்பி உள்ள குடும்பத்தின் நலனுக்காக உழைத்து, தன்னுடைய கஷ்டங்களை தன் குடும்பத்தாரிடம் சொல்லாமல், போராடி பிரச்சனைகளை சமாளித்து, குடும்பத்தை காப்பாற்றி, மகிழ்ச்சியாக நடத்துபவனே தைரியசாலி என்றார் அமைச்சர்.
அமைச்சரின் விளக்கத்தை அரசர் ஏற்று, பரிசுகள் தந்து பாராட்டினார்.
தைரியம் உள்ளவர்கள்தான் இறைவனின் அருளால் புத்திசாலிதனமாக சிந்தித்து முன்னேறுகிறார்கள். அதே சமயம், முரட்டு தைரியம் ஆபத்தில் சிக்க வைக்கும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
நல்லவை செய்ய நினைத்து அதனால் தேவையற்ற இன்னல்கள் வந்தால், அதற்கு கலங்கி விடாமல் மன உறுதியுடன் இருந்தால், எதையும் சாதிக்க முடியும். அவர்களே மகா தைரியசாலிகள்.
சரி. ஜாதகப்படி இவர் தைரியசாலியா? இல்லையா? என்று அறிய முடியுமா என்றால் நிச்சயம் முடியும்.
ஜோதிட சாஸ்திரபடி, ஒருவரின் தைரியம் பற்றி அறிய வேண்டும் என்றால், ஜாதகத்தில் லக்கினத்திற்கு 3-ம் இடத்தின் நிலையை அறிய வேண்டும்.
லக்கினத்திற்கு மூன்றாம் இடம்தான் இளைய சகோதரன்-சகோதரி, புகழ், கீர்த்தி, தைரியம் ஆகிய இவற்றை குறிப்பிடும் இடமாகும்.
மூன்றாம் இடத்து அதிபதி உச்சம் பெற்று தனித்து இருந்தாலும், அல்லது ஆட்சி பெற்று இருந்தாலும் தைரியவான்.
மூன்றாம் அதிபதியை செவ்வாய் பார்த்தாலும், மூன்றாம் அதிபதியுடன் சேர்ந்தாலும் தைரியவான்.
மூன்றாம் அதிபதி 5,9,11-ல் இருந்தாலும் அல்லது இவர்கள் பார்த்தாலும் அந்த ஜாதகர் தைரியசாலி.
மூன்றாம் அதிபதியை, சம சப்தமமாக குரு பார்த்தாலும் தைரியவான்களே.
அதுபோல, மூன்றாம் அதிபதி நீச்சம் அடையக் கூடாது.
சரி. ஒருவேலை உங்கள் ஜாதகப்படி தைரியம் ஸ்தானம் பலவீனமாக இருப்பதை நீங்கள் அறிந்தால், அதற்கு என்ன செய்வது?
இதற்கு நிவர்த்தி தரும் தெய்வம் முருகப்பெருமான்.
முருகனை வணங்கினால் தைரியம் கிடைக்கும். எதையும் சாதிக்கும் ஆற்றல் பிறக்கும்.
முருகப் பெருமானுக்கு விசேஷ தினமான செவ்வாய்கிழமையில் வணங்குங்கள். அதுபோல, ஒன்பதுமுறை உங்கள் பெயரை எழுதி வாருங்கள். எழுதும்போது, என்னை போல் தைரியசவாலி யாரும் இல்லை என்று மனதில் உச்சரித்துக்கொண்டே உங்கள் பெயரை எழுதுங்கள். இதுதான் எளிய பரிகாரம். இறைவனின் அருளால் துணிவே துணையாகும்.!
Send your feedback to: editor@bhakthiplanet.com
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2013 bhakthiplanet.com All Rights Reserved