Saturday 28th December 2024

தலைப்புச் செய்தி :

நீச்சனை நீச்சன் பார்த்தால் நினைத்தது நடக்கும்.!

Horoscope YogasAstrologer, Sri Durga Devi upasakar,

V.G.Krishnarau.Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai

யோகம் யார் மூலமாக வரும் என்று யாருக்கும் தெரியாது. அடுத்த வேலை சோற்றுக்கு திண்டாட்டமாக இருந்தான், இன்று என்ன கொண்டாட்டமாக வாழ்கிறான் பார் என்று மற்றவர் சொல்லும் வகையில் வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் உண்டு.

அனைவருமே வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றுதான் முயற்சிக்கிறார்கள். முயற்சிப்பவர்கள்  அனைவருமே வெற்றி பெறுகிறார்களா என்றால் இல்லை. விதைத்த விதைகள் அனைத்தும் மரமாகிவிடுகிறதா என்ன?

மனித வாழ்வில் அனைவரும் யோகத்தை  பெற்று விடுவதில்லை. யோகம் என்பது முயற்சியால் மட்டும் அமைந்துவிடுவதும் இல்லை. அதற்கு, முன் ஜென்மத்தில் நல்லவை பல செய்திருக்க வேண்டும். அப்போதுதான் அதன் பலனை யோகமாக இந்த ஜென்மத்தில் அனுபவிக்க முடியும்.

வங்கியில் நம் கணக்கில் பணம் இருந்தால்தான் நாம் தரும் காசோலை செல்லுபடியாகும். அதுபோல, முன் ஜென்மத்தில் நாம் நல்லவை செய்திருந்தால்தான், இப்போது அது அதிர்ஷ்டமாக மாறி வரும்.

அத்தகைய அதிர்ஷ்டம் நமக்கு இருக்கிறதா என்பதைதான் ஜாதகம் எடுத்துக்காட்டுகிறது.

நோயை அறிய ஸகேன் தேவைப்படுவதைபோல, மனிதனின் முன்னேற்றத்தை அறிய ஜாதகம் என்கிற ஸகேன் தேவைப்படுகிறது.

புத்தியுள்ள அனைவரும் வெற்றி பெறுவதில்லை. வெற்றி பெற்ற அனைவரும் புத்திசாலி இல்லை என்றார் கவிஞர். அது உண்மைதானே.

அறிவு பூர்வமாக சிந்தித்து செயல்பட்டும், எடுத்த காரியத்தில் தோல்வியை சந்தித்தால் அவனை திறமை இல்லாதவன் என சொல்ல முடியாது. அதிர்ஷடம் யாரை விரும்புகிறதோ அவர் பின்னே தன் இஷ்டப்படி செல்கிறது.

பிச்சைகாரிக்கு அடித்த யோகம்

இந்த காலத்தில் இருப்பதுபோல் அந்த காலத்திலும் திருட்டுபயம் அதிகமாகவே இருந்தது. அதனால் நகைகளை அரிசியிலும் பருப்பு டப்பாவிலும் போட்டு வைப்பார்கள். அதுதான் அந்த கால்த்தில் Safety Locker. அதுபோல் தன் நகைகளை அரிசிக்குள் போட்டு பாதுகாப்பாக வைத்திருந்தார் பாலகங்காதர திலகரின் மனைவி.

ஒருநாள் பிச்சைகார பெண் ஒருவள், பாலகங்காதர திலகரின் வீட்டுக்கு பிச்சை கேட்டு வந்தாள்.

அந்த பிச்சைக்கார பெண்ணின் குரல் கேட்டு திலகரின் மனைவி, இரண்டு கைபிடி அளவு அரிசியை அள்ளிக்கொண்டு வந்து, அந்த பிச்சைகாரியின் பிச்சை பாத்திரத்தில் போட்டார். அப்போது அந்த பிச்சை பாத்திரத்தில் ஏதோ ஒன்று மினுமினுத்தது. அதை கண்டு திடுக்கிட்டார் திலகரின் மனைவி. காரணம், அது அவரின் வைர மூக்குத்தி.

அரிசிக்குள்தான் நகைகளை பாதுகாப்பாக வைக்கும் பழக்க அவருக்கு. பிச்சைகாரிக்காக அள்ளி வந்த அரிசியுடன் இந்த வைர மூக்குத்தியும் பிச்சை பாத்திரத்தில் சேர்ந்து விட்டது. திலகரின் மனைவி பெரிய இடத்து பெண். அதனால் பிச்சை பாத்திரத்தில் விழுந்த வைர மூக்குத்தியை எடுக்க தயங்கினார்.

திண்ணையில் அமர்ந்தபடி நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தார் பாலகங்காதர திலகர். மனைவியின் தர்மசங்கடத்தை உணர்ந்தார். எழுந்து மனைவியின் அருகில் வந்தார் திலகர்.

”நடந்ததையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். பிச்சை பாத்திரத்தில் விழுந்த உன் வைர மூக்குத்தியை திருப்பி வாங்க உன் தன்மானம் இடம் தரவில்லை. கவலைப்படாதே. யாருக்கு எது போய் சேர வேண்டும் என்பது இறைவனுக்கு தெரியும். இந்த பிச்சைகாரிக்கு இன்று வைர மூக்குத்தியை இறைவன் தந்துவிட்டான். இனி அது அவளுடையது.” என்று மனைவியை சமாதானப்படுத்தி, பிச்சைகாரியை அனுப்பினார் திலகர்.

அதுவே இந்த காலத்தில் இப்படி ஒரு சம்பவம் வேறு யாருக்காவது நடந்து இருந்தால், வைர மூக்குத்தியுடன் பிச்சை பாத்திரத்தையும் பறித்து பிச்சைகாரியை துரத்தி இருப்பார்கள்.

யோகம் யார் மூலமாக எப்படி வரும் என்று யூகிக்க இயலாது.

ஆனால் ஒருவரின் ஜாதகத்தில், நீச்சம் அடைந்த கிரகத்தை இன்னொரு நீச்சம் பெற்ற கிரகம் பார்வை செய்தால், அவர் வாழ்வில் நிச்சயம் ஒருநாள் எதிர்பாராத யோகத்தை பெற்று வாழ்வில் முன்னேறுவார் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

வறுமையில் பாடாய் பட்ட சிலரை பார்த்திருக்கிறேன். ஆனால் அப்படிப்பட்ட நபர்களே மடமடவென்று குறுகிய காலத்தில் கார், பங்களா, கோடிக்கணக்கான பணம் என்று அவர்களின் வாழக்கை நிலையில் நம்ப முடியாத உச்சத்தை தொட்டு இருக்கிறார்கள். அது எப்படி என்று ஆராய்ந்து பார்த்தால், அவர்களின் ஜாதகத்தில் நீச்சம் அடைந்த கிரகம் செய்யும் சித்து வேலையே காரணம் என அறிய முடிகிறது.

Bhakthi Planetஆம். ஒருவர் ஜாதகத்தில் நீச்சம் பெற்ற கிரகம், தன் நேர் எதிரில் இருக்கும் இன்னொரு நீச்ச கிரகத்தை பார்வை செய்தால் போதும். அந்த ஜாதகர் மிக யோகசாலி. உதாரணமாக, மகரத்தில் இருக்கும் குரு நீச்சம் பெற்றவன் ஆகிறான். அவன் கடகத்தில் நீச்சம் பெற்ற செவ்வாயை பார்த்தால் போதும். மாடி படி ஏறுவதுபோல இல்லாமல், லிப்ட்டில் செல்வது போல முன்னேற்றமும் அந்த ஜாதகருக்கு வேகமாக இருக்கும்.

அதுபோல, கன்னியில் நீச்சம் பெற்ற சுக்கிரன், மீனத்தில் இருக்கும் நீச்சம் பெற்ற புதனை பார்த்தால் சில்லறைக்கே திண்டாட்டம் அடைந்தவர் கையில் கரன்சிதான்.

விருச்சிகத்தில் நீச்சம் பெற்ற சந்திரன், ரிஷபத்தில் நீச்சம் பெற்ற இராகுவையோ – கேதுவையோ பார்த்தாலும் போதுமே, கால்நடையாக சுற்றி திரிந்தவர் ஆடம்பர வாகன வசதிகளுடன் வாழ்வார்.

மேஷத்தில் நீச்சம் பெற்ற சனி, துலாவில் நீச்சம் பெற்ற சூரியனை பார்த்தால் வேறு என்ன வேண்டும்? அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டுமே. யோகங்களை அள்ளித் தர  தொடங்குமே.

மொத்தத்தில், நீச்சனை நீச்சன் பார்த்தால் நினைத்தது நடக்கும் யோகம்தான்.

மேலும் ஜோதிட சிறப்பு கட்டுரைகள் படிக்கவும்.!  

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Mar 15 2013. Filed under Headlines, Home Page special, செய்திகள், ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »