அன்றாட வாழ்வுக்கு உபயோகமான டிப்ஸ்-பகுதி–5
ஜி. விஜயலஷ்மி
ஆரோக்கியம் காக்கும் முட்டை கோஸ்
முட்டை கோஸ்சில் வைட்டமின் ஏ, பி, சி, மற்றும் இரும்பு சத்து பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்கிறது. தலைமுடி உதிர்ந்துக்கொண்டே இருந்தால், முட்டை கோசை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதால் முடி உதிரும் பிரச்னை தீரும்.
அத்துடன் முட்டை கோஸ், கண் பார்வை குறைபாடும் தடுக்கிறது. எலும்பு வலுவடைய செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும் முட்டை கோசுக்கு இருக்கிறது. மாலை கண் நோய் குறைபாட்டை தடுக்கும். தோல், மினுமினுப்பு பெறும். மூல நோய் உள்ளவர்கள், முட்டை கோசை வாரத்திற்கு இரண்டு தடவை உணவில் சேர்த்துக்கொண்டால் நல்லது. தொற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை தந்திடும். நீரிழிவு நோயாளிகளுக்கும் முட்டை கோஸ் நல்லது. உடல் வெப்பத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது. வாரத்தில் இரண்டு நாளாவது முட்டை கோசை சமைத்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
சுண்டக்காய் தரும் நன்மை
தினமும் இரண்டு சுண்டக்காய் வற்றலை உணவுடன் சாப்பிட்டு வந்தால், வயிற்றில் இருக்கும் பூச்சிகள் நீங்கும். மலக்கிருமிகளால் ஏற்படும் வயிற்று வலியும் நீங்கும். பசி ஏற்படாமல் இருப்பவர்கள் இந்த சுண்டக்காய் வற்றலை நெய்யில் வறுத்து பொடி செய்து சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால், நன்றாக பசி ஏற்படும். நீரிழிவு உள்ளவர்கள் தினமும் இரண்டு சுண்டக்காய் வற்றலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி கட்டுக்குள் இருக்கும்.
உடல் மினுமினுப்புக்கும் எலும்பு வலுவுக்கு சூரிய ஒளி
காலையில் சூரிய நமஸ்காரம் மிக நல்லது என்பது நாம் அறிந்ததே. அதுபோல, உடலில் எண்ணெய் தடவிக்கொண்டு இளம் வெயிலில் நின்றால், சூரிய ஒளியில் இருக்கும் வைட்டமின் D சத்து உடலுக்கு கிடைத்து, உடல் வலியும், எலும்பு குறைபாடுகளும் குணம் அடையும். குழந்தைகளுக்கு உடல் முழுவதும் தேங்காய் எண்ணெயை தடவி காலை இளம் வெயிலில் 5 நிமிடம் இருக்க வைத்து பிறகு குளிப்பாட்டினால் குழந்தைகளுக்கு எலும்பு தேய்மானம் எந்த வயதிலும் ஏற்படாது. இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தாலே போதும்.
முகத்தில் அதிகம் முகப்பரு உள்ளவர்கள், தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து முகம் கழுவி வந்தால், முகப்பரு மறையும். முகம் தெளிவாகவும் பொலிவாகவும் இருக்கும்.
வழுக்கையை சரி செய்யும் சின்ன வெங்காயம்
சின்னவெங்காயம். இதை சாம்பாரில் போட்டு சாப்பிட்டு வந்தாலும் அல்லது தயிர் பச்சடியாக செய்து சாப்பிட்டு வந்தாலும் ரத்தத்திற்கு நல்லது. ரத்தத்தில் இருக்கும் தேவை இல்லாத கொழுப்பை குறைக்கும். சிறு குடலுக்கு மிகவும் நல்லது. வாயு தொல்லை தீரும். நன்றாக ஜீரணசக்தியை உண்டாக்கும். தலை முடி உதிர்ந்து வழுக்கையாக இருக்கும் இடத்தில் சின்னவெங்காயத்தை 2 நிமிடம் தினமும் தேய்த்து வந்தால் முடி வளரும்.
ஆரோக்கியத்தை தரும் கீரை சூப்
சிறு கீரை, பச்சை பொன்னாங்கன்னி கீரை, முருங்கைக்கீரை அல்லது உங்களுக்கு எந்த கீரை கிடைக்கிறதோ அந்த கீரையை தினமும் சூப் வைத்து குடித்தால், உடலுக்கு தேவையான வைட்டமின், இரும்பு சத்து போன்ற அனைத்தும் கிடைக்கும்.
அத்துடன், உடலும் இரும்பை போல் வலுவாகவும், அழகாகவும், முகம் பொலிவோடும் மாறும். கல்லையும் ஜீரணமாக்கும் சக்தியை வயிற்றுக்கு தந்திடும். கீரை சூப் எப்படி தயாரிக்க வேண்டும் என்றால், கீரையை சிறிது சிறிதாக நறுக்கிக்கொணடு, அதில் இருக்கும் மண் போகும் அளவுக்கு நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்து, பிறகு தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் இவை அனைத்தும் சேர்த்து எண்ணெயில் தாளித்து, அத்துடன் கீரையை அதில் கலந்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்த பிறகு மிக்ஸியிலோ அல்லது பருப்பு மத்திலோ கடைந்து கீரை சூப் தயாரித்து குடித்தால் ஆரோக்கியமாக வாழலாம்.!
மேலும் இயற்கை மருத்துவம் பற்றி அறிய மருத்துவம் பகுதிக்கு கிளிக் செய்யவும்
Send your feedback to: editor@bhakthiplanet.com
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
http://www.youtube.com/bhakthiplanet
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2013 bhakthiplanet.com All Rights Reserved