Sunday 17th November 2024

தலைப்புச் செய்தி :

உங்கள் ஜாதகப்படி நடக்கும் தசா-புக்தியை சாதகமாக்குவது எப்படி?

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

ஒருவருடைய வாழ்வை நிர்ணயிப்பது முன்ஜென்ம கர்மவினை. இதையே விதிபயன் என்றும் சொல்கிறோம். ஒழுக்கம், மனிதாபிமானம், நேர்மை, கலாசார கட்டுப்பாடு போன்றவை ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள். இத்தகைய விதிகளை அவன் மீறும்போதுதான், சட்டவிதியை மீறும்போது தண்டனைக்கு ஆளாவது போல, நல்லவற்றை செய்ய தவறிய காரணத்தால் கொடும் தீவினை மனிதனை ஆட்டிபடைக்கிறது. ஒரு மனிதன் செய்கிற தீய செயல்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு அவனை நோக்கியே திரும்பும் என்கிறது சாஸ்திரம். அந்த சமயம் அந்த தீய பலன்களை மனிதன், இந்த ஜென்மத்திலும் அனுபவிக்க்க்கூடும் அல்லது அடுத்து வரும் பிறவிகளிலும் அனுபவிக்க்க்கூடும். இதைதான் விதி என்கிறோம்.

முன்ஜென்ம பயனாக ஒருவர் இந்த ஜென்மத்தில் அனுபவிக்க இருப்பது சுகங்களா? அல்லது சோகங்களா? என்பதைதான், அவரவர் ஜாதக தசா-புக்தி விரிவாக எடுத்துக்காட்டுகிறது.

“ஒரு காலத்தில் அவன் எப்படி வாழ்ந்தவன் தெரியுமா?. ஆனால் இன்றோ தெருவில் நிற்கிறான்” என்பார்கள். அதுபோல, “ஒரு காலத்தில் அவன் அடுத்த வேலை உணவுக்கு கூட வழியில்லாமல் இருந்தவன். ஆனால் இன்றோ சமுதாயத்தில் பெரிய மனிதாக நல்ல அந்தஸ்தில் இருக்கிறான்” என்பார்கள்.

இதில் இருந்து என்ன தெரிகிறது? எதிர்காலத்தில் யாருடைய வாழ்க்கை நிலையும் இன்று இருக்கும் இதே நிலையில் இருப்பதில்லை.

அதனால்தான், “30 வருடம் வாழ்நதவனும் இல்லை. 30 வருடம் தாழ்ந்தவனும் இல்லை.” என்று சொல்வார்கள்.

அது என்ன 30 வருடம்?

சனியின் சஞ்சாரத்தை கணகிட்டுதான் நம்மவர்கள் அப்படி சொல்லி வைத்தார்கள். சனி, ஒரு இராசியில் இருந்து புறப்பட்டு மீண்டும் அதே இராசிக்கு வந்து சேர 30 வருடங்கள் ஆகிறது. அந்த 30 வருட காலகட்டத்திற்குள், ஒருவரின் வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்கிறது.

விண்வெளியில் புதிது புதிதாக கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வந்தாலும், யுகம் யுகமாக ஜோதிட ரீதியில் பலன் தரும் கிரகங்கள் ஒன்பது. இதில் இராகு-கேது, கண்களுக்கு தெரியாத சாயா கிரகங்கள்.

Bhakthi Planetஇந்த ஒன்பது கிரகங்களும் நமது முன்ஜென்ம கர்மவினைக்கு ஏற்ப இந்த ஜென்மத்தில் பலன் தரும் பணியை செய்கிறது.

விதியை மதியால் வெல்லலாம் என்பது என்ன?

ஒருவர் துன்பத்தைதான் அனுபவிக்க வேண்டும் என விதி இருந்தால், தன் மதியை பயன்படுத்தி துன்பங்களுக்கு நிவர்த்தி தேடி அதை செய்து, அந்த துன்பங்களில் இருந்து பாதிப்பு இல்லாமல் மீண்டு வருவதே, விதியை மதியால் வெல்லலாம் என்பதற்கு பொருள்.

நல்ல திசையை நோக்கி ஒருவரின் புக்தி செல்ல வேண்டும் என்றால், ஜாதகப்படி அந்த நபருக்கு நல்ல தசா-புக்தி நடைப்பெற வேண்டும். ஒருவருக்கு தசா-புக்தி பாதகமாக இருந்தாலும் அதற்கேற்ப எளிய பரிகாரம் செய்தால், பாதகமான தசா-புக்தியும் சாதகமாக மாறும்.

அனைத்து இராசிகாரர்களும் அவரவர் ஜாதக தசா-புத்திக்கு ஏற்ப அந்தந்த கிரகங்களுக்கு வழிபாடு – பரிகாரம் போன்றவற்றை தாராளமாக செய்யலாம்.

சூரிய திசை – புக்தி நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம்

ஞாயிற்று கிழமையில் சூரியபகவானை வணங்க வேண்டும். அன்றைய தினம் சிகப்பு ஆடை அணியலாம். கோதுமையால் தயாரித்த உணவை பசுவுக்கோ அல்லது காக்கைக்கோ தர வேண்டும்.  திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்வது இன்னும் விசேஷம். மாணிக்கம் என்ற ரத்தினத்தை வலது கையில்  மோதிர விரலில் வெள்ளியில் செய்து அணியலாம். சூரியனுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை தினமும் 9 முறை ஜபித்து வர வேண்டும்.

சூரிய காயத்திரி மந்திரம்

ஓம் அச் வ த்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி
தன்நோ சூர்ய ப்ரசோதயாத்.

சந்திர திசை – புக்தி நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம்

திங்கள் அன்று அம்பாளை வணங்க வேண்டும். சந்திரனுக்கு உகந்த தெய்வம் அம்மன்தான். வெள்ளை நிற ஆடை அணியலாம் அல்லது நீங்கள் அணியும் உடையில் சிறிய அளவிலாவது வெள்ளை நிறம் இருப்பது நல்லது.  நெல் தானியத்தை ஒரு கைபிடி அளவு பறவைகளுக்கு வைக்க வேண்டும். வலது கை மோதிர விரலில் முத்து மோதிரம் அணியலாம்.  பசு மாடுக்கு உணவு தர வேண்டும். இதனால் மன அமைதி ஏற்படும். புத்தி தெளிவு பெறும் புத்தி தெளிவாக இருந்தாலே அனைத்து காரியங்களும்  நடக்கும்.

ஸ்ரீ சந்திர காயத்ரீ மந்திரம்

ஓம் பத்ம த்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி!
தந்தோ  ஸோம ப்ரசோதயாத்!

செவ்வாய் திசை நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம்

முருகப்பெருமானையும், துர்காதேவியையும் வணங்க வேண்டும். சிகப்பு ஆடை அணியலாம். சிகப்பு மலர்களை இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். பவழ மோதிரம் அணிய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் கையில் செம்பு காப்போ, மோதிரமோ அணிந்தால் நன்மை தரும். பருப்பு சாதம் அதாவது துவரம் பருப்பை சாதத்தில் கலந்து காக்கைக்கு வைக்க வேண்டும்.  செவ்வாய் பகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 9 முறை சொல்லி வர வேண்டும்.

ஸ்ரீஅங்காரக காயத்ரீ மந்திரம்

ஓம் வீர த்வஜாய வித்மஹே: விக்ன ஹஸ்தாய தீமஹி!
தந்நோ பௌம ப்ரசோதயாத்!

புதன் திசை நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம்

பெருமாளை வணங்க வேண்டும். துளசியை பெருமாளுக்கு சமர்பிக்க வேண்டும். 5 பேருக்கு புளிசாதம், தயிர்சாதம் தானமாக கொடுக்க வேண்டும் அத்துடன் காக்கைக்கும் வைக்க வேண்டும். பசுவுக்கு  கீரை தர வேண்டும். பச்சைபயிரை வேக வைத்து     இறைவனுக்கு படைத்து அதை பிரசாதமாக சாப்பிட வேண்டும். மரகத பச்சை அல்லது சாதாரண பச்சை நிறத்தில் இருக்கும் ரத்தினத்தை மோதிரம் செய்து, வலது கையில் மோதிர விரலில் அணியலாம். 9 முறை புதன் பகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை சொல்லி வர வேண்டும்.

ஸ்ரீபுத காயத்ரீ மந்திரம்

ஓம் கஜ த்வஜாய வித்மஹே: சு க ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்.

குரு திசை நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம்

ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும், பெருமாளையும் அல்லது நவகிரகங்களில் உள்ள குரு பகவானையோ வணங்க வேண்டும். வியாழ கிழமையில் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கொண்டைக் கடலையை இறைவனுக்கு படைத்து அதை பிரசாதமாக சாப்பிட வேண்டும்.  கொண்டைக் கடலையை சிலருக்கு தானம் செய்யலாம். அல்லது ஒரு கைபிடி அளவு கொண்டைக் கடலையை காக்கைக்கும் வைக்கலாம். முல்லை மலர் அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும் மலர்களை ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கோ, பெருமாளுக்கோ சமர்ப்பிக்கலாம். புஷ்பராக ரத்தினத்தை வலது கையில் ஆள்காட்டி விரலில் மோதிரமாக அணியலாம்.  9 முறை குருவுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை வியாழன்தோறும் சொல்லி வர வேண்டும்.

ஸ்ரீ குரு காயத்ரீ மந்திரம்

ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்.

சுக்கிர திசை நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம்

வெள்ளி கிழமையில் ஸ்ரீமகாலஷ்மியையும், அரங்கநாதரையும் வணங்க வேண்டும்.  இனிப்பை தானம் செய்ய வேண்டும். வெள்ளை நிறத்தில் இருக்கும் இனிப்பு வைத்து ஸ்ரீமகாலஷ்மியை வணங்க வேண்டும். மொச்சை பயிரை சாப்பிட வேண்டும். அத்துடன் மொச்சை பயிறை தானம் செய்ய வேண்டும். மல்லிகைப்பூ தாமரையை ஸ்ரீமகாலஷ்மிக்கு சமர்ப்பிக்க வேண்டும். சுக்கிர பகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 9 முறை சொல்ல வேண்டும்.

ஸ்ரீ சுக்ர காயத்ரீ மந்திரம்

ஓம் அச் வ த்வஜாய வித்மஹே: தநுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்கிர ப்ரசோதயாத்.

சனி திசை நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம்

சனிகிழமையில் அனுமாரையும் திருப்பதி பெருமாளையும் வணங்க வேண்டும். நீலம் அல்லது கறுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். எள் சாதத்தை காக்கைக்கு வைக்க வேண்டும். நல்லெண்ணை தானம் கஷ்டத்தை தீர்க்கும். ஆகவே  சனிஸ்வர ஆலயத்தில் நல்லெண்ணைய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இது சிறப்பான பலன்களை கொடுக்கும். சனிஸ்வர பகவானுக்கு நீலம் அல்லது கறுப்பு வஸ்திரத்தை காணிக்கையாக கொடுக்க வேண்டும்.  சனி பகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 9 முறை உச்சரிக்க வேண்டும்.

ஸ்ரீ சனீஸ்வர காயத்ரீ மந்திரம்

ஓம் காக த்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோதயாத்.

இராகு திசை நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம்

செவ்வாய் கிழமையில் துர்க்கை தேவியை வழிபட வேண்டும். உளுந்து வடையை தானம் செய்யலாம். உளுந்தை பறவைகளுக்கு வைக்க வேண்டும். புளி சாதத்தை ஒருவருக்காவது தானம் செய்யவேண்டும். கோமேதக ரத்தினத்தை இடது கையில் சூரிய விரலில் மோதிரமாக அணிய வேண்டும். நீல ஆடை அணிய வேண்டும். இராகுபகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 9 முறை ஜெபிக்க வேண்டும்.

ஸ்ரீ இராகு காயத்ரீ மந்திரம்

ஓம் நாக த்வஜாய வித்மஹே: பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்.

கேது திசை நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம்

வியாழ கிழமையில் விநாயகரை வணங்க வேண்டும். விநாயகருக்கு அறுகம்புள்ளை சமர்பித்து வணங்க வேண்டும். நல்லது. பறவைகளுக்கு கொள்ளு தானம் நல்லது. வைடூரிய ரத்தினத்தை மோதிரமாக இடது கையில் மோதிர விரலில் அணிய வேண்டும்.  பல நிறங்கள் கலந்த வஸ்திரம் அணியலாம்.

ஸ்ரீ கேது காயத்ரீ மந்திரம்

 ஓம் அச் வ த்வஜாய வித்மஹே சூ ல ஹஸ்தாய தீமஹி

தந்நோ கேது ப்ரசோதயாத். 

இப்படி அந்தந்த திசை மற்றும் புக்திகளுக்கு ஏற்ற பரிகாரங்களை அந்தந்த கிழமைகளில் செய்தாலே குறிப்பிட்ட கிரகங்களால் ஏற்படும் பெரிய அளவிலான பாதகங்களை தவிர்க்கலாம். நம்பிக்கையுடன் இந்த பரிகாரங்களையும், கிரகங்களுக்குரிய காயத்திரி மந்திரங்களையும் நம்பிக்கையுடன் உச்சரித்து வந்தால், காயத்ரீ தேவியின் ஆசியாலும் கிரகங்களின் அருளாலும் நன்மைகள் கிடைக்கும்.!

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

mm ads

Posted by on Jan 31 2013. Filed under செய்திகள், ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech