Friday 15th November 2024

தலைப்புச் செய்தி :

விரோதிகளின் தொல்லை தீர்க்கும் வைகுண்டமூர்த்தி சுவாமி

Niranjhana

வைகுண்டமூர்த்தி சுவாமி ஆலயம், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டத்தில் உள்ள சுந்தரபாண்டியம் என்ற ஊருக்கு 1கி.மீதொலைவில் கோட்டையூர் மெயின் சாலையில் உள்ளது.

இறைவனின் படைப்பில் அனைத்து ஜீவராசிகளும் உருவாகிறது. அப்படி இருக்கும்போது ஏன் சிலர் தெய்வ நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள்? என்று பலருக்கு சந்தேகம் இருக்கிறது. அந்த சந்தேகத்தை ஒரு மகானிடம் கேட்டார் ஒருவர்.

“ஒரு மரத்தில் எத்தனையோ பழங்கள் இருக்கிறது. அத்தனை பழங்களிலும் விதைகள் இருக்கிறது. அத்தனை விதைகளும் மரங்களாக மாறியா விடுகிறது? இல்லை. அதில் சில பழங்களின் விதைகள் மட்டும்தான் மரமாகிறது. அதுபோல்தான் இறைவனின் படைப்பில் பல கோடி ஜீவராசிகள் உருவானாலும், யாருடைய கர்மவினை நீங்கி மறுபிறவில் புகழோடு, குடும்பத்தில் மகிழ்சியோடு இருக்க வேண்டும் என்ற விதி இருக்கிறதோ அவர்களுக்கு மட்டும்தான் இறைவனின் மேல் உண்மையான பற்றும் பக்தியும் உண்டாகும்” என்றார் அந்த மகான்.

இப்படி முன் ஜென்ம கர்மவினை தீர வேண்டும் என்று ஒருவருக்கு விதி இருந்தால், தமக்கு எப்படி தெய்வ நம்பிக்கை வந்தது என்று அவர்களே அறியாதபடி இறைவனின் பக்தர்களாக மாறி விடுகிறார்கள். ஆரம்பத்தில் அலட்சியம் செய்து பிறகு மனம் திருந்தி இறைவனுக்கு திருப்பணிகள் செய்தவர்களும் உண்டு.

ஆங்கிலேயர் ஆட்சியில் ஒரு வெள்ளைகார அதிகாரி இருந்தார். அவர் கிராமத் தெய்வங்களின் ஒன்றான வைகுண்டமூர்த்தி சுவாமியை அலட்சியம் செய்து வந்தார். பிறகு அவரே வைகுண்டமூர்த்தி சுவாமியின் பக்தராக மாறினார். அந்த சம்பவத்தை தெரிந்துக்கொள்வோம்.

ஆங்கிலேயரை தன் பக்தனாக்கிய சுவாமி

வைகுண்டமூர்த்தி சுவாமி, தன் ஆலயத்தில் தர்மசாஸ்தாவாகவும், அய்யனாராகவும்  இப்படி இரு வேறுபட்ட அவதாரங்களோடு  இக்கோயிலில்  இருந்து தன் பக்தர்களை காக்கிறார்.

வைகுண்டமூர்த்தி சுவாமியின் மகிமையை உணர்ந்த பக்தர்கள் அவரை போற்றி வழிபட்டு வந்தனர். மக்களின் வழிபாடும் நம்பிக்கையும் ஆங்கிலேயே அதிகாரிகளுக்கு வேடிக்கையாக இருந்தது. அவர்களின் ஒரு அதிகாரி, வைகுண்டமூர்த்தி சுவாமியின் மகத்துத்தை எப்போதும் அலட்சியமாக பேசி வந்தார்.

ஒருநாள் அந்த வெள்ளைக்கார அதிகாரி குதிரையில் சென்றுக்கொண்டு இருந்தார். அந்த சமயம் திடீரென்று அவரை தூக்கி வீசியது அந்த குதிரை. எப்போதும் தன் கட்டுப்பாட்டுக்குள் அடங்கும் தன் குதிரை, இன்று ஏன் இப்படி செய்தது? என குழம்பி போனார் அந்த ஆங்கிலேயே துரை. இதன் பிறகும் பல தடவை அவர் குதிரையில் சவாரி செய்யும் போதெல்லாம் அந்த குதிரை அடங்காமல் ஆங்கிலேயே துரையை தூக்கி வீசியது.

அப்போது ஒரு விஷயத்தை கவனித்தார் அந்த ஆங்கிலேயே துரை. அதாவது, வழியெங்கும் எந்த தொந்தரவும் செய்யாமல் வரும் அந்த குதிரை, வைகுண்டமூர்த்தி சுவாமியின் கோயில் வழியாக வரும்போது மட்டும் இப்படி செய்கிறது. நாம் இந்த கோயிலில் இருக்கும் தெய்வத்தை கேலியாக பேசுவதால்தான் தன் குதிரை இப்படி செய்கிறதோ?, தாம் செய்தது தெய்வ குற்றம் என்பதை உணர்ந்த துரை, தன் குதிரையை இந்த ஆலயத்திலேயே காணிக்கையாக விட்டு சென்றார். அத்துடன் குதிரை பீடத்தை 21 அடி உயரத்தில் கட்டி கொடுத்தார்.

அந்த வெள்ளைகார துரை கட்டி தந்த குதிரை பீடத்தில்தான் வைகுண்டமூர்த்தி சுவாமி சாஸ்தா வடிவில் அமர்ந்து பாரிவேட்டைக்கு செல்கிறார் என்று ஸ்தலபுராணம் சொல்கிறது.

மாசி மாதம் பாரிவேட்டை திருவிழா இங்கு விசேஷம். நள்ளிரவு பூஜையில் 12 மணியளவில் படையல் சாதத்தை காளி பீடம் அருகில் உள்ள புளியமரத்தின் மீது அந்த படையல் சாதத்தை வீசுவார்கள். வீசிய அந்த சாதம் கீழே விழாது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வைகுண்ட மூர்த்தி சுவாமி இன்றுவரை தன் பக்தர்களுக்கு துணையாக இருக்கிறார். இவரை நினைத்தாலே போதும் நிம்மதி கிடைக்கும். நம்பிக்கை இல்லாதவர்கள் இவரை அலட்சியம் செய்தாலும் பிறகு இவருடைய மகிமை தெரிந்து இவருடைய பக்தர்களாக மாறுவார்கள். மிகுந்த சக்தி படைத்தவர் வைகுண்ட மூர்த்தி சுவாமி என்கிறார்கள் பக்தர்கள்.

வேட்டைக்கு போகும் சாஸ்தாவாக கோயிலுக்கு வெளியேயும், பூரண, புஷ்கலா என்கிற இரண்டு பெருந்தேவியருடன் தம்பதி சகிதமாக கோயிலுக்கு உள்ளே அய்யனாராகவும் காட்சி தருகிறார் வைகுண்டமூர்த்தி சுவாமி. இவர்களை தரிசித்தாலே, பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவார்கள் – குழந்தை பாக்கியம் கிட்டும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். அத்துடன், பில்லி சூனிய பாதிப்புகள், கண் திருஷ்டி பாதிப்புகள் அகலும். விரோதிகளால் உண்டாகும் தொல்லைகள் நீங்கி நல்வாழ்க்கை அமையும்.!

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation CLICK Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW<br

www.goodlifematrimony.com

 

Ads by bhakthiplanet.com

Posted by on Dec 6 2012. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech