நிரஞ்சனா ஜீவராசிகள் அனைத்துக்கும் ஒரு குணம், உடல் அமைப்பு இருக்கும். உதாரணத்திற்கு ஆண் யானைக்கு தந்தம் இருக்கும், பெண் யானைக்கு தந்தம் இருக்காது என்பது பொதுவான கருத்து. ஆனால் ஆப்பிரிக்கா யானைகளில் ஆண் மற்றும் பெண் யானைகளுக்கும் தந்தங்கள் இருக்கின்றன என்ற தகவல் இருக்கிறது. ஆனால் குணங்களை மட்டும் அந்தந்த ஜீவராசிகளுக்கு ஏற்ப இறைவனின் தந்துள்ளான். மனிதன் என்ற ஜீவனுக்கு உடல் அமைப்பு ஒரே மாதிரியாக இருந்தாலும், உருவ அமைப்பும், குணமும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். […]
கேரள மாநிலம் செங்கன்னூர் இலஞ்சி மேலியில் ஒரு யானை திடீரென்று மிரண்டு ஓடியது. அப்போது மயக்க ஊசியை செலுத்தி பிடிக்கச் சென்றவர்களை பின்னங்காலால் எட்டி உதைக்கிறது அந்த யானை.
Niranjhana வைகுண்டமூர்த்தி சுவாமி ஆலயம், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டத்தில் உள்ள சுந்தரபாண்டியம் என்ற ஊருக்கு 1கி.மீதொலைவில் கோட்டையூர் மெயின் சாலையில் உள்ளது. இறைவனின் படைப்பில் அனைத்து ஜீவராசிகளும் உருவாகிறது. அப்படி இருக்கும்போது ஏன் சிலர் தெய்வ நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள்? என்று பலருக்கு சந்தேகம் இருக்கிறது. அந்த சந்தேகத்தை ஒரு மகானிடம் கேட்டார் ஒருவர். “ஒரு மரத்தில் எத்தனையோ பழங்கள் இருக்கிறது. அத்தனை பழங்களிலும் விதைகள் இருக்கிறது. அத்தனை விதைகளும் மரங்களாக மாறியா விடுகிறது? இல்லை. […]
இறைவனுக்காக வேண்டிக்கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல்வார்கள் பக்தர்கள். சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பக்தர்கள் ஆண்டுதோறும் சிவாலய ஓட்டம் ஓடுவார்கள். இதனால் இறைவனின் அருளும் அத்துடன் காலணி அணியாமல் வெறுங்காலில் நடப்பதால் கால்பாதத்திற்கு நன்மையும் கிடைக்கிறது. வெறுங்காலில் நடப்பதிலும் ஓடுவதிலும் மருத்துவ நன்மையும் உள்ளதாக இப்போது ஆராய்சியாளர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதை பற்றி 2009-ம் ஆண்டில் கிறிஸ்டோபர் மெக்டோகால் என்பவர் பான் டு ரன் என்ற புத்தகம் எழுதி உள்ளார். அந்த […]