Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

இனிப்பு சிலருக்கு இனிப்பல்ல…

Article by

Niranjana

பல வருடங்களுக்கு முன்பு நீரிழிவு நோய் என்பது பணக்காரர்களுக்கு மட்டும்தான் வரும் என்றும் அது பணக்கார நோய் என்றும் சொல்வார்கள். ஏன் அப்படி கூறினார்கள் என்றால், அவர்களுக்கு உடல் உழைப்பு இருக்காது, உணவு கட்டுப்பாடும் இருக்காது என்கிற காரணமும் இருக்கலாம். ஆனால் இன்று இந்த நீரிழிவு பிரச்னை, ஏழை-பணக்காரன், பெரியவர்கள் சிறியவர்கள் என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பதில்லை. இன்று இந்த நீரிழிவு, பலருக்கு வருகிறது.

பிறந்த பஞ்சிளம் குழந்தையும் நீரிழிவு தொல்லையுடன் பிறக்கிறது.

நீரிழிவு பிரச்னையை, சர்க்கரை வியாதி – சர்க்கரை நோய் என்று அழைத்தாலும் அடுத்தவர்களுக்கு பரவக்கூடியதல்ல. இது பரம்பரை சொத்து. அல்லது அதிக மனஉளைச்சல், அதிக உடல் எடை போன்ற காரணங்களால் வருவதுதான் நீரிழிவு.

நீரிழிவு வருவதற்கு காரணம் 50 சதவிகிதம் பாரம்பரியம் காரணமாக சர்க்கரை வியாதி வருகிறது. மீதம் உள்ள 50 சதவிகிதம் மனஅழுத்தம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால், உணவு பழக்கம் சரியாக இல்லாததால், சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பதாலும் இந்த சர்க்கரை வியாதி உண்டாகுகிறது.

தற்போது இந்தியாவில் 6 கோடியே 20 லட்சம் பேர் சர்க்கரை நோயாளியாக இருக்கிறார்கள். 7.40 கோடி பேர் சர்க்கரை நோய் வருவதற்க்கான அதிக வாய்ப்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பெற்றோர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியாது. ஆனால் சரியான உடற்பயிற்சி. உணவு கட்டுப்பாடு, நார்சத்து உள்ள உணவு, சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது, நல்ல பழக்கங்களை கடைபிடிப்பது போன்ற கட்டுப்பாடுகள் இருந்தால், நீரிழிவு நோய் அவர்களுக்கு அத்தனை சுலபத்தில் தாக்காது. ஆனால் இந்த கட்டுப்பாடுகளால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியுமே தவிர முழுமையாக பிள்ளைகளுக்கு வராது என்று கூற முடியாது.

ஒரு வேலை, வயதான பிறகு வருவதற்கும் வாய்ப்பு இருக்கலாம்.

கர்ப்பிணி பெண்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை எடுத்து சரியான மருந்து உட்கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோய் வருவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று மன அழுத்தம்.

எது நடந்தாலும் கவலையடையாமல் இருக்க வேண்டும். மாற்றங்கள் வாழ்வில் நிகழ்வது சகஜம்தான். பனி காலத்தில் மரத்தில் இருக்கும் இலைகள் உதிர்ந்து பட்டமரம்போல் காட்சி தரும். அதே மரம் சில மாதங்கள் கழித்து பசுமையாக வளரும். அதுபோல்தான் வாழ்க்கை என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும்.

இதைவிடுத்து, நடந்த கஷ்டங்களை நினைத்து மனக்கவலை அடைந்தால், அட்ரினலின், ஸ்டேராய்ட் ஆகிய ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கும். இவை இன்சுலினுக்கு எதிராக செயல்படுபவை. இதனால் இன்சுலினை இவை பலவீனப்படுத்திவிடும். ஆகவே மனகவலை உங்கள் நிம்மதியை மட்டும் கொள்ளாது, உடல் நலத்தையும் சேர்த்துகொன்றுவிடும்.

பரம்பரை சார்ந்து பலருக்கு சர்க்கரை நோய் வருவதற்கு காரணம் இருப்பதுபோல், மது பழக்கம்  கொண்டவர்களுக்கு ஈரல், கனணயம் ஆகியவை பாதிக்கப்படும். கனணயம் பாதிக்கப்பட்டால் சர்க்கரை நோய் வரக்கூடும். அதுபோல், புகைபிடிப்பால் உடலில் இருக்கும் பல உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகிறது. இதனால் ஆரோக்கியம் குறைகிறது. சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது.

இந்த சர்க்கரை வியாதியில் இருந்து விடுபட முடியாவிட்டாலும் பெரிய அளவில் பாதிப்புகள் வராமல் தடுக்கலாம். இதற்கு உணவு பழக்கம் மிக அவசியம். நார்சத்து உள்ள உணவு போன்றவை எடுத்துக்கொள்ளலாம். பாவக்காய், வாழைப்பூ, வெந்தயம், வெந்தயகீரை, சிறுகீரை, ஓட்சு, போன்றவை தினமும் சாப்பிடவேண்டும். பாவக்காய், வெந்தயகீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் கண்டிப்பாக சாப்பிடவேண்டும்.

நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்யலாம். வயதானவர்கள், மருத்துவர் ஆலோசனைபடி எளிய உடற்பயிற்சி செய்யலாம்.

தாய் அல்லது தந்தைக்கு சர்க்கரை வியாதி இருந்தால் பிள்ளைகளுக்கு இனிப்பை குறைவாக சாப்பிட கொடுக்க வேண்டும். முடிந்தால் இனிப்பு சாப்பிடுவதை குறைத்துக்கொண்டால் குழந்தைகளின் எதிர்காலத்தில் சிறிய வயதினிலேயே நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கலாம்.

பிள்ளைகளுக்கு சரியான உடற்பயிற்சி தேவை. நன்றாக விளையாடவிடுங்கள். விளையாட்டு என்றால் உட்கார்ந்துக்கொண்டு கேரம்போடு, வீடியோ கேம் போன்ற நோகாமல் நோம்பு கும்புடுகிற விளையாட்டுகள் அல்ல. நன்றாக வியர்வை வடியும் அளவுக்கு ஓடி ஆடி விளையாடும் கிரிக்கெட், புட்பால், ஸ்கிப்பிங் போன்ற சுறுசுறுப்பான விளையாட்டுகளை விளையாட விடுங்கள். இதனால் நீரிழிவு நோயிலிருந்து தப்பிக்க வாய்ப்பு  இருக்கிறது.

நீரிழிவு நோய்க்கு இன்சுலின் ஊசி போடுபவர்கள் மருத்துவர் கூறியபடியே சரியான நேரத்தில் ஊசி போட்டுக் கொள்ளவேண்டும். தினமும் இன்சுலின் ஊசி போடுபவர்கள் வெளியூர் – வெளிநாடு செல்வதாக இருந்தால் கண்டிப்பாக கையோடு இன்சுலின் ஊசி மருந்தை எடுத்துக்கொண்டு சரியான நேரத்தில் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். அதுபோல, சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும். விரதங்கள் இருப்பதாக சொல்லிக்கொண்டு சாப்பிடாமல் இருப்பதால் உங்கள் உடலுக்கு அது விரோதம் ஆகிவிடும்.

“நீ பட்டினி இருந்தால்தான் நான் உனக்கு வரங்கள் தருவேன்” என்று இறைவன் ஒருகாலமும் சொல்லவில்லை. ஆகவே உடல் நலமாக இருக்க, சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். இறைவனை உண்மையாக நம்பினாலே போதும். இதைவிட மிக பெரிய விரதங்கள் தேவையில்லை. ஆகவே மருத்துவர் ஆலோசனைபடி சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக்கொண்டு, ஆரோக்கியத்திற்கு தேவையான உணவுகளை சாப்பிட்டு, சரியான உடற்பயிற்சிகளை செய்து வர வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் கசப்பாக இருந்தாலும் வாழ்க்கை இனியதாக இருக்கும். நீரிழிவு என்பதும் உங்களுக்கு ஒரு நோயாக இருக்காது..!

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation CLICK Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

BHAKTHI PLANET
BHAKTHI PLANET

Posted by on Nov 25 2012. Filed under Home Page special, Photo Gallery, செய்திகள், மருத்துவம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »