சிவபுராணம் சொல்லும் சிறப்பான பரிகாரங்கள்
Niranjana
இறைவனை வணங்கிட நாள்-நேரம் பார்க்க தேவையில்லை. எந்த சமயத்திலும் இறைவனை வணங்கலாம். ஆனாலும் இறைவனுக்குரிய மிகவும் விசேஷமான தினங்களில் வணங்கினால், வேண்டியது வேண்டியபடி விரைவில் கிடைத்திட வழிவகுக்கும்.
எந்தெந்த தெய்வங்கள் என்னென்ன பலன்களை நமக்கு தந்திடும்? என்னென்ன தானங்கள் செய்வதினால் என்னென்ன நற்பலன்கள் கிட்டிடும்? காலையில் எந்த திசையை நோக்கி கண் விழித்திட வேண்டும்? எந்த திசையை முதலில் பார்க்கக் கூடாது.? போன்ற சாஸ்திர விஷயங்களை சிவபுராணத்தில் சூதமா முனிவர் அழகாக சொல்லி இருக்கிறார். அவற்றை நம்பிக்கையுடன் நாம் அனுசரித்தோம் என்றுச் சொன்னால், நிச்சயம் நல்ல எதிர்காலம் நம்மை தேடி வந்தமையும்.
இத்தகைய சாஸ்திர அனுஷ்டானங்களை – பரிகாரங்களை, முன்ஜென்ம கர்ம வினைகள் எவருக்கு நீங்கிட வேண்டும் என விதித்திருக்கிறதோ அவர்கள் மட்டுமே அவற்றை கடைப்பிடிக்க இயலும் என்பதும் விதி.
நல்வினை நமக்கு இருப்பதால்தான் என்னவோ பல முனிவர்கள், சூதமா முனிவரிடம் கேட்டு தெரிந்துக் கொண்ட ரகசியத்தை நாம் இப்போது தெரிந்துக் கொள்ள இருக்கிறோம்.
எந்த கிழமையில் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?
ஞாயிற்று கிழமையில் சூரிய பகவானை வணங்கிட வேண்டும். இதனால் என்ன பலன் என்றால், நம்மை அறியாமல் செய்த பாவங்கள் ஒழியும். அரசாங்க ஆதரவு கிடைக்கும்.
திங்கள் கிழமை சிவபெருமானையும், ஸ்ரீமகாலஷ்மியையும் வணங்க வேண்டும். நல்ல அந்தஸ்து உண்டாகும்.
செவ்வாய் கிழமை முருகப்பெருமானையும்,சக்திதேவியையும் வணங்கினால், நோய்கள் குறையும். விரோதங்கள் ஒழியும். கடன்கள் குறையும். இன்னல்கள் மறையும்.
புதன் கிழமை ஸ்ரீமகா விஷ்ணுவை வணங்கினால், நல்ல நண்பர்கள், நல்ல புத்திரர்கள் அமைவார்கள். இல்வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும்.
வியாழ கிழமையில் மகான்களையும், தேவர்களையும் வணங்கினால் இன்னல்கள் மறையும். மனநிம்மதி உண்டாகும். திருமண தடை விலகும். கல்வி மேன்மை பெறும்.
வெள்ளி கிழமையில் உங்களுக்கு தெரிந்த இறைவனின் மந்திரங்களை உச்சரித்து வணங்கினாலும், வெகு சுலபத்தில் நாம் எடுக்கும் வேலையில் வெற்றி கிட்டும்.
சனிக்கிழமையில் சிவனை வணங்கினால் விரோதிகள் ஒழிவார்கள், உடலில் உள்ள ரோகங்கள் நீங்கும்.
எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்னென்ன பலன்?
அன்னதானம், பால், தயிர் இவற்றை தானம் செய்தால் மனம் நிம்மதியடையும், வாக்கு பலிதம் உண்டாகும், உடல் ஆரோக்கியம் பெரும். தீவினை கர்மாக்கள் நீங்கும்.
வஸ்திர தானம் செய்தால், ஆயுள் விருத்தி உண்டாகும். மானம் காக்கப்படும்.
உப்பு. வெல்லம் இவைகளை தானம் செய்தால், சாப்பாட்டுக்கு பஞ்சம் வராது.
பூசணிக்காயை தானம் செய்தால், சகல வியாதிகளும் விலகும். பித்ருக்களின் ஆசி பரிபூரணமாக கிட்டும், இஷ்ட சித்தி கைக்கூடும்.
ஏழை கன்னிப் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தால், இதுவரையில் எடுத்த அனைத்து ஜென்மங்களின் பாவங்கள் நிவர்த்தியாகும்.
இசை வாத்திய கருவிகளை தானம் செய்தால், இந்திரனுக்கு நிகரான சுகபோகமான வாழ்க்கை அமையும்
பொன் தானம், மோச்சத்தை கொடுக்கும்.
தைலம், பருத்தி, துணி,பால் போன்றவை தானம் செய்தால், குஷ்ட ரோகம் உட்பட உடலில் இருக்கும் அனைத்து ரோகங்களும் நீங்கும்.
தீப தானம் செய்தால் கண் பார்வை பலப்படும். நல்ல எதிர்காலம் தேடி வரும். பிரச்னைகளுக்கு விடிவு காலம் பிறக்கும்.
தயிர்சாதம் தானம் செய்தால் நல்ல பிள்ளைகளை பெறுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலமும் மகிழ்சியாக அமையும்.
தேன், பொன், நெய்தானம் செய்தால் சகல போகங்களையும் அனுபவிப்பார்கள்.
இரும்பு, எண்ணை, உளுந்து, பழங்கள், நீர் இவைகளை தானம் செய்தால், கஷ்டங்கள் விலகும், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
காலையில் விழித்தவுடன் எந்த திசையை பார்த்து விழித்தால் யோகம்?
கிழக்கு முகம்பார்த்தால் ஆயுள் விருத்தி.
தென்கிழக்கு மூலையை பார்த்தால் துவேஷம்.
தெற்கு முகம் பார்த்தால் மரண பயம் உண்டாகும்.
தென்மேற்கு மூலை பார்த்தால், பாவங்கள் சேரும்.
மேற்கு முகம் பார்த்தால், நல்ல விஷயங்கள் நடக்கும்.
வடமேற்கை பார்த்தால், புஷ்டியுண்டாகும்.
வடகிழக்கு மூலையை பார்த்தால், உடலிலும் – உள்ளத்திலும் சக்தி கிடைக்கும். சிந்தனை தெளிவாக இருக்கும்.
இவ்வகையான எளிய சாஸ்திர பரிகாரங்களை நம்பிக்கையுடன் கடைபிடித்தால் இன்னல்கள் மறையும். இறைவனின் ஆசியால் நன்மைகள் நம்மை தேடி வரும் என்கிறார் சிவ புராணத்தில் சூதமா முனிவர்.!
http://www.youtube.com/bhakthiplanet
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
© 2012 bhakthiplanet.com All Rights Reserved