நோய்களை நெருங்க விடாமல் ஆரோக்கியம் காக்கும் ‘தேன்’!
Niranjana
நல்ல வாய்ப்புகளை இழக்கச் செய்யும் முதல் எதிரி – சோம்பல். யாராவது சோம்பலாக உட்கார்ந்திருந்தால், “ஏன் இப்படி இருக்கிறாய்? தேனீயை போல் சுறுசுறுப்பாக இரு.” என்பார்கள். சுறுசுறுப்பையும் உழைப்பையும் தேனீக்களிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.
தேனீயின் உழைப்பைதான் மற்றவர்களால் திருட முடியும். தேனீக்களின் திறமையை ஒருகாலம் மனிதர்களால் திருடமுடியாது.
இறைவனுக்கும் தேன் அபிஷேகம் விசேஷம்.
தேனீக்கள் நமக்கு சஞ்சிவியை போல் மிக உயர்ந்த மருந்தை தருகிறது.
தேனால் என்னென்ன பயன் என்பதை இப்போது நாம் தெரிந்துக்கொள்வோம்.
சித்த வைத்தியத்தில் மருந்தாக சில சூரணங்களை தந்திடும்போது, அந்த மருந்தை தேனில் கலந்து சாப்பிட அறிவுறுத்துவார்கள். காரணம், அப்படி செய்தால் அந்த மருந்தின் நல்ல தன்மையை தேன் மேலும் அதிகரித்து நோய் தீர உதவும்.
தேனில், வைட்டமின் B2, B6, H, K, சிட்ரிக், அமிலம், குளுகோஸ், கந்தகம், இரும்புச்சத்து, கால்சியம், அயோடின், பொட்டாசியம், இப்படி இன்னும் பல சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார உணவுகளும், இனிப்பு உணவுகளும் ஒரு சில நாட்களில் கெட்டுவிடும். ஆனால் என்றும் கெடாதது தேன் மட்டும்தான். தேனில் இருக்கும் ஒருவகை இனிப்பு சத்து, கிருமிகளை உற்பத்தி செய்ய விடாது.
தினமும் ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் அளவு தேனை கலந்து சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள ஊளைச் சதை குறையும். முகம் பொலிவாக இருக்கும், ரத்தம் உற்பதியாகும்.
உடல் மெலிந்து இருப்பவர்கள் இரவில் ஒரு டம்ளர் பாலில் இரண்டு ஸ்பூன் அளவு தேன் கலந்து 45 நாள் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
ரத்தசோகை இருப்பவர்கள் தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் தேனை தொட்டு சாப்பிட்டு வந்தால் ஹிமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
வரட்டு இருமல் இருப்பவர்கள் தினமும் இரவில் இரண்டு ஸ்பூன் அளவு தேன் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் நீங்கி விடும்.
சமைக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால், அந்த காயத்தில் தேனை தடவினால் காயம் ஆறிவிடும். தீக்காயம் அடைந்த இடத்தில் தினமும் தேனை தடவி வந்தால் அந்த காயத்தின் வடுவும் மறைந்து விடும்.
தேனை தினமும் இரண்டு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் மலசிக்கல் தீரும். குடலில் இருக்கும் அசுத்தங்கள் நீங்கிவிடும். உடலுக்குள் எந்த புண் இருந்தாலும் அந்த புண் ஆறிவிடும்.
பிரசவத்திற்கு பிறகு இரண்டு ஸ்பூன் அளவு தேனை சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கும், ரத்தம் உற்பத்தியாகும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தேனை உட்கொள்ளலாம். ஆரோக்கியம் பெறலாம்.!
மேலும் இயற்கை மருத்துவம் பற்றி அறிய மருத்துவம் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For More Articles in ENGLISH & TAMIL Visit: www.bhakthiplanet.com
http://www.youtube.com/bhakthiplanet
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
© 2012 bhakthiplanet.com All Rights Reserved