மாமனாரின் செல்வ நிலை சொல்லும் கிரக அமைப்புகள்
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.
தன் மருமகனை பல நாட்களாக “வீட்டுக்கு வாங்க மாப்ளே” என்று அழைத்துக்கொண்டே இருந்தார் அந்த மாமனார். மனைவியும், “எங்கப்பா எவ்வளவு நாளா கூப்பிடுகிட்டே இருக்காரு. போய்தான் தங்கிட்டு வருவோமே” என்றாள்.
இதனால் அந்த மாப்பிள்ளை, தன் அம்மாவிடம், “நான் மாமனார் வீட்டில் சில நாட்கள் தங்கிவிட்டு வரட்டுமா?.” என கேட்டான்.
அதற்கு அவன் தாய், “தாராளமாக போ. ஆனால் உன் மாமனார் வீட்டில் நீ சாப்பிடும்போது அந்த உணவில் உன் முகம் எப்போது தெரிகிறதோ அன்றிலிருந்து நீ அங்கே தங்கக் கூடாது. அப்போதே உன் மனைவியுடன் நீ இங்கே திரும்பி வந்துவிட வேண்டும்.” என்றாள் அந்த தாய்.
தாய் சொல்லை தட்டாத அவன், அம்மா ஏன் அப்படி சொல்கிறாள் என காரணத்தை கேட்கவில்லை.
மறுநாள் தன் மனைவியுடன் மாமனார் வீட்டுக்கு சென்றான். வரவேற்பு அமர்களமாக இருந்த்து.
முதல் நாள் – கறி சோறு.
“அடடா… என்ன ஒரு அற்புதமான விருந்து. ஆண்டவன் ஒரே ஒரு வயிற்றை தந்துவிட்டானே… இவ்வளவும் சாப்பிட இன்னொரு வயிறு கூட போதாதே” என மாப்பிள்ளை, அந்த சுவையான அசைவ உணவில் மயங்கி போனான்.
மறுநாள், மதிய அசைவ உணவை ஒரு பிடிபிடிக்க வேண்டும் என்ற ஆவலில் காலையில் இருந்தே வயிற்றை காலியாக வைத்திருந்தான்.
சாப்பாடு நேரம் வந்தது. யாரும் அழைப்பதற்கு முன்னதாகவே சாப்பிட உட்கார்ந்தான். ஆனால் அன்று அவனுக்கு ஒரே ஒரு காய்கறியுடன் சாம்பார் சாதமும், ரசமும் ஊற்றினாள் மனைவி.
அவன் காரணம் கேட்பதற்கு வாய் திறப்பதற்குள்ளே, “எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லீங்க. அதனால இன்னிக்கு இதுதான் சமையல்.”
“உன் அம்மா சமைக்கவில்லை என்றால் என்ன? நீ வாய்க்கு ருசியாக சமைக்க வேண்டியதுதானே” என வாய் திறந்து கேட்க முடியவில்லை. காரணம் கடுமையான பசி அவனை மௌன சாமியார் ஆக்கியது. தட்டில் இருந்ததை வேறு வழி இல்லாமல் சாப்பிட்டு முடித்தான்.
மாமனார் வந்தார்.
”சாப்டீங்களா மாப்ளே? உங்க மாமியாருக்கு இன்னிக்கு என்னமோ உடம்பு சரியில்ல அதனால காய்கறி சாப்பாடுதான்.” என்றார் மாமனார்.
“பரவாயில்ல மாமா.” என்றான்.
மூன்றாம் நாள்.
இன்றைய மதிய உணவு – ரசம் சாதம்.
“எங்க அம்மாவுக்கு கை-கால் எல்லாம் ஒரே வலி. அதனால் இன்னிக்கு ரசம் சாதம்தான். பாவம் எங்க அம்மா. உடம்பு முடியாம இருந்தாலும் ரசம் சாதம் செஞ்சி இருக்காங்க.” என்றபடி சாதத்தில் புளி ரசத்தை ஊற்றினாள்.
ஒன்றும் சொல்ல முடியாமல் சாப்பிட்டுக்கொண்டே அவன் கண்கள் மாமனாரை தேடியது. கண்கள் எட்டும் தூரம்வரை மாமனாரை காணவில்லை.
நான்காவது நாள்.
மாமனாருடன் சாப்பிட அமர்ந்தான். “ஒரே தலைவலி மாப்ளே. இன்னிக்கு சமைக்கவே முடியல” என்ற மாமியார், தட்டில் சாதத்தை கொட்டினாள். அவன் மனைவியோ, அந்த சாத்த்தில் தண்ணீரை ஊற்றி உப்பை அளவாக போட்டாள்., ”சாப்பிடுங்க மாப்ளே” என்றார் மாமனார்.
சாதத்தை பார்த்தான் மாப்பிள்ளை.
தண்ணீர் நிறைந்த சாதத்தில் அவன் முகம் தெரிந்தது. அம்மா சொன்னது புரிந்தது. அன்று மாலையே தன் மனைவியுடன் மாமனார் வீட்டில் இருந்து புறப்பட்டு தன் வீடு வந்து சேர்ந்தான்.
ஒரு ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி. நல்ல குணம் நிறைந்த மாமனார் அமைய ஜாதக சிறப்பு வேண்டும்.
மாமனார் டாப்பா கொடுப்பாரா? டாட்டா காட்டுவரா என்று தெரிந்து கொள்ள ஆண் அல்லது பெண்ணின் ஜாதகத்தில் 3-வது இடத்தை பார்க்க வேண்டும்.
லக்கினத்திற்கு 3-ம் இடம் ஆட்சி, உச்சம் பெற்று இருந்தாலும், 3-ம் அதிபதி 2,5,9,11-ல் இருந்தாலும், 3-ம் அதிபதியுடன் மேற்கண்டவர்கள் சேர்ந்து இருந்தாலும், 3-ம் அதிபதி இராகு-கேதுவுடன் சேராமல் இருந்தாலும், குருபார்வை – குரு சேர்கை இருந்தாலும் வசதியான மாமனார் அமைவார்.
அதுவே, மூன்றாம் அதிபதி, 6-8-12-ல் இருந்தாலோ, இராகு-கேதுவோடு சேர்ந்திருந்தாலோ, 6-8-12-ம் அதிபதிகளுடன் இணைந்திருந்தாலோ, 6-8-12-ம் கிரகங்களின் சாரத்தில் இருந்தாலோ, மாமனாருக்கு நீங்கள்தான் வசதியை செய்து தர வேண்டிய சூழ்நிலை உண்டாகும். !
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
http://www.youtube.com/bhakthiplanet
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Astrology Consultation CLICK Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved