பணத்தில் புரள்பவர்கள் யார்? கடனில் மூழ்குபவர்கள் யார்?
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.
கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன். இராவணனின் மன நிலையை சரியாக எடுத்துச் சொல்ல கம்பன் எழுதிய அற்புத வரிகள் இது. கடன்பட்டவனுக்கு நிம்மதி இருக்காது. கடன் வாங்கினாலே எவருக்கும் தலை வணங்காதவனையும் கடன்காரனிடம் தலை குனிந்து நிற்கச்செய்யும். “கடன் வாங்கி அதில் நிலம் வாங்கி, அந்த கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் வாங்கிய நிலத்தை விற்றேன், ஆனால் வாங்கிய கடன் மட்டும் இன்னும் அப்படியே நிற்கிறது“ என்று சொல்பவர்கள் இருக்கதான் செய்கிறார்கள். இது உண்மையும்கூட. கடன் வாங்கினாலே அந்த கடனை அடைப்பது என்பது சுலபமில்லை. கடன் தொகை சிறிய அளவில் இருந்தாலும் அதற்கான வட்டியோ பல மடங்கு அனகோண்டாவை போல நீண்டுக்கொண்டே இருக்கும்.
கடன் இல்லாமல் யாராலும் இருக்க முடியாது. வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல கடனும் இருந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் வரவுக்கு மேல் கடன் இருந்தால், இதனால் அந்த தலைமுறைகூட பாதிக்கப்படுகிறது. கடன் தொல்லையில் இருந்து விரைவில் விடுதலை கிடைக்க சுலபமான பரிகாரம் என்ன? என்பதை பற்றி தெரிந்துக்கொள்வதற்கு முன், கடன்படும் ஜாதகம் எது? என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 6-க்குரியவன், 2-ல் அல்லது 9-ல் இருந்தாலும், லக்கினத்திற்கு 12-ம் அதிபதி, 9-ல் இருந்தாலும், லக்கினத்திற்கு 2-ம் அதிபதி, 9-ம் அதிபதி, 6 அல்லது 8-ம் இடத்தில் இருந்தாலும், லக்கினத்திற்கு 6-ம் இடத்தில் பாவ கிரகங்கள் என்று சொல்லக் கூடிய சூரியன், ராகு, கேது, செவ்வாய் இருந்தாலும், கடனுக்கு வட்டி கட்ட இன்னொரு கடன் வாங்கி, அதற்கும் சேர்த்து வட்டி கட்டும் நிலையில் இருப்பார்கள்.
சரி. வாட்டி வதைக்கும் கடன் தொல்லையில் இருந்து விடுபட என்ன பரிகாரம்?
கடன் வாங்கியவரிடம் செவ்வாய்கிழமை அன்று வாங்கிய கடன் தொகையில் ஏதாவது ஒரு சிறு தொகையை தந்துவிடுங்கள். கடன்கள் அத்தனையும் படிபடியாக ஒழிய நல்வழி கிடைக்கும்.
அல்லது –
வாங்கிய கடனுக்கு மாதா மாதம் சரியாக வட்டி கட்டும் நபர்களாக நீங்கள் இருந்தால், வட்டி செலுத்தும் நாளை செவ்வாய்கிழமையாக தேர்ந்தெடுங்கள். கடனை விரைவில் அடைப்பீர்கள்.
ஒருவர் ஜாதகத்தில் 6-ம் அதிபதி யார் என்று கவனியுங்கள். உதாரணமாக கடக லக்கினம் என்று வைத்துக்கொள்வோம். 6-ம் அதிபதி குரு 2-ல், 9-ல், 11-ல் இருந்தால் அந்த ஜாதகர் கடன்காரர் ஆவார். ஆகவே, அப்படிபட்ட ஜாதகர்கள், மஞ்சல் நிறம் கொண்ட ரத்தின கல், அல்லது புஷ்பராக ரத்தினத்தை வெள்ளியில் மோதிரமாக ஆள்காட்டி விரலில் அணிந்தால் கடன் என்கிற தரித்திரம் விலகும். வளங்கள் பெருகும்.
பணத்தில் புரள்பவர்கள் யார் ?
எதற்கும் ஒரு லக் வேண்டும் என்பார்கள். அந்த லக்கை எப்படி தெரிந்துக்கொள்வது? அதுவும் ஜோதிடசாஸ்திரபடி எப்படி அறிவது என்றால், ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்தை வைத்து அவர்களுடைய அதிர்ஷ்டத்தை அறியலாம். ஒருவரின் லக்கை அறிவதற்கு காரணமாக இருப்பதால்தான் என்னவோ அதனை (லக்)கினம் என்று அழைக்கிறோம் ?
ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2-ம் அதிபதி 9-ல் இருந்தாலோ, 11-ல் இருந்தாலோ அல்லது 9-11க்குரியவருடன் சேர்ந்து 9-11 இருந்தாலோ அல்லது 9-ம் அதிபதி 2.ல் இருந்தாலோ அல்லது 9-ம் அதிபதியும் 11-ம் அதிபதியும் சேர்ந்து 5-ல் இருந்தாலோ, 2-ம் அதிபதியும், 9-ம் அதிபதியும் “சார பரிவர்த்தனை” பெற்று இருந்தாலோ அப்படிபட்ட ஜாதகர்கள் பணத்தில் புரள்வார்கள். கீரை கட்டுபோல இவர்களிடத்தில் பணக்கட்டு இருக்கும். அது மட்டும் அல்ல, லக்கினாதிபதி – இரண்டாம் அதிபதி 9-ல் அல்லது 11-ல் இருந்தாலும் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது.!
Send your Feedback to: editor@bhakthiplanet.com
இலவச கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
More Astrology Articles in English
More Astrology Articles in Tamil
http://www.youtube.com/bhakthiplanet
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved
பொது அறிவிப்பு: