Saturday 24th February 2018
Breaking News:
Kubera worship will give wealth | செல்வந்தராக்கும் குபேரன் வழிபாடு.    New update : குரு பெயர்ச்சி பலன்கள் 2017- 2018    New Update : Rahu-Ketu Transit Predictions 2017-2018 (Rahu-Ketu Peyarchi) ENGLISH VERSION.    New Update : இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017-2018    New Update : Astrological titbits that you should know    New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் !    New update : DOES BLACK-MAGIC AFFECT YOU?    New update : செய்வினை பாதிப்பு யாருக்கு ஏற்படும் ?    QR Codes: USE THIS QR CODES FOR BhakthiPlanet.Com Horoscope Consultation payment transaction. Click HERE    Our Virtual Payment Address (VPA) UPI Payment Address : bhakthiplanet@upi     New update: Saturn Transit Predictions (Sani Peyarchi) 2017-2020 (English Version)    இரும்பு அணிகலன் அணியலாமா? கண் திருஷ்டி அகல செம்பு அணிகலன் பயன்படுத்தலாமா? - இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி

வீட்டில் எந்த பகுதி சமையலறைக்கு என்ன பலன்?

Click & Read Previous Part 

Vijay krishnarau G

சென்ற பகுதியில்…

“…மனையடி சாஸ்திரத்தில் ஒரு செய்யுள் வருகிறது. அதில் “ஈசான்யம் என்னும் வடகிழக்கில் சமையலறை அமைந்தால் மன்னருக்கு இணையான வாழ்க்கை அமையும் என்றும், பாக்கியங்கள் பல சேரும்” என்றும் அதன் பொருள் சொல்கிறது. இது மட்டுமல்ல இதைபோன்ற பல கட்டடகலை சாஸ்திர விஷயங்கள் செய்யுள் வடிவில் நூல்களாக வெளிவந்திருக்கிறது.

அவர்கள் சொன்னதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும் என்றில்லை. அனுபவ ரீதீயாக ஆராய்ந்தும் சிலர் திருத்தி உள்ளனர். ஆனால் அன்றைய காலத்தில் புதிய திருத்தங்களை ஏற்றுகொள்ளாமல் அனுபவப்படி ஆராய்ந்து செய்யாமல் கடைப்பிடித்து வந்தனர். அவ்வளவு ஏன், மயன் நூலிலேயே வடகிழக்கில் சமையலறை வைக்கலாம் என சொல்லி இருக்கிறார். ஆகவே வீட்டை கட்டுபவர்கள் அங்கேதான் சமையலறை வைக்கவேண்டும் என்பார்கள். ஆனால் வடகிழக்கில் சமையலறை அமைப்பது முற்றிலும் தவறு.”

சரி- இப்போது ஒரு வீட்டுக்கு எந்த இடத்தில் சமையலறை இருந்தால் என்ன பலன் என்பதை விரிவாக பார்ப்போம்.

வடகிழக்கு : – இது ஈசான்ய மூலை சமையல் அறை. ஈசான்யத்தின் புகழை பல சமயம் குறிப்பிட்டு இருக்கிறேன். இது மகாலஷ்மிக்கு உரிய இடமாகவும், ஈசனின் சிரசில் இருக்கும் கங்கையின் ஸ்தானம் எனவும் அழைக்கலாம். ஆக இது தண்ணீருக்கு மட்டும் ஏற்ற இடம். இங்கே சமையலறை இருப்பது தோஷம்.

அக்னியில் தண்ணீர் எப்படி கொதிக்குமோ அதுபோல இங்கே சமையலறை அமைத்துவிட்டால் அந்த குடும்பத்தின் பொருளாதர நிலையும் பாழ்படும். இந்த வடகிழக்கில் சமையலறை சிறப்பாகாது. ஆண்பிள்ளையின் கல்வியறிவு அல்லது அவனது வளர்ச்சிகள் கெடும். சிலர் இந்த பகுதி சமையல் அறைதான் தங்களுக்கு யோகமே செய்தது என்பார்கள். ஆனால் அது தவறு.

கிழக்குமையம் : – இது, வடகிழக்கு சமையலறையை போன்று பெரும் கெடுபலன்கள் செய்யாது என்றாலும், இதுவும் விரும்பதகுந்ததல்ல. காரணம் கிழக்குமையத்தில் அமைப்பதால் ஒரு பக்கம் வடகிழக்கையும் மறுப்பக்கம் தென்கிழக்கையும் சார்ந்து பலன்களை ஏற்ற தாழ்வோடு தந்து கொண்டிருக்கும்.

தென்கிழக்கு : – இது சமையலறைக்கு நல்லதொரு இடமாகும். இந்த பகுதியில் சமையலறை அமையும் போது, அந்த அறைக்கு தென்கிழக்கில் அடுப்பை வைக்க வேண்டும். அத்துடன் பாத்திரங்களை கழுவ தண்ணீர் குழாய் அமைக்கும் போது சமையலறையில் வடகிழக்கில் அமைத்தால் நல்லது. ஆனால் இந்த தண்ணீர் குழாய்யை தென்கிழக்கில் அமைத்துவிடக்கூடாது. இதனால் உடல்நல பாதிப்பும், கருத்து வேறுபாடும் உண்டாகும். ஆகவே தண்ணீர் குழாய்யை தென்கிழக்கு சமையலறைக்குள், வடகிழக்கு மூலையில் அமைத்து முழுமையாக பலனை காணுங்கள்.

தெற்கு மையம் : இந்த பகுதி சமையலறை நல்லதல்ல. பெண்களால் சோதனைகள் உண்டாகும். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படாது. நிறைய மருத்துவ சிகிச்சைகளும் உண்டாகும்.

தென்மேற்கு : – சமையல் அறை வர கூடாத பகுதியாக வடகிழக்கையும், வரவே கூடாத பகுதியாக இந்த தென்மேற்கு மூலையையும் சொல்ல வேண்டும். மருத்துவத்துக்கு கட்டுப்படாத உடல்நல சீர்கேடு, துஷ்ட சக்திகளால் பாதிப்பு, கடன் வழக்குகள், திருமண தாமதம் அல்லது மண வாழ்வில் தீராத துயரம் போன்ற விரும்பதகாத பலன்களையே தென்மேற்கு சமையலறை தந்திடும். இந்த தென்மேற்கு சமையலறை எப்படியும் ஒருநாள் தீமையே செய்யும்.

மேற்கு மையம் :.- இது மிக சுமாரான பலன்களையே தரும். கிழக்கு மையத்திற்கு சொன்ன பலன்களே இதற்கும் பொருந்தும். வரவுகேற்ற செலவாகவே வாழ்க்கை நிலை நகரும். உத்தியோகஸ்தர்களுக்கு ஒரளவு நன்மை செய்தாலும் வியபாரிகளுக்கு இது ஏற்றதல்ல. நண்பர்களும் விரோதியாகும் நிலை, நல்ல வாய்ப்புகளும் கைநழுவும் சூழ்நிலை உண்டாகும்.

வடமேற்கு : – இது சமையலறைக்கு நல்லதொரு இடம் என்று ஒரே வரியில் சொல்லலாம். புதிய நண்பர்களும் அவர்களால் தொழில் முன்னேற்றமும் அமையும். கட்டட வடிவமைப்பில் தோஷம் எதுவும் இல்லாமல் இருந்தால் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறலாம்.

வடக்கு மையம் : – இங்கே சமையலறை கூடாது. இதனை குபேர திசை என்கிறது வாஸ்து கலை.  (சிலர் தென்மேற்கை குபேர மூலை என்கிறார்கள் அது தவறு. தென்மேற்கு கன்னி மூலையாகும்) வடக்கு மையத்தில் சமையலறை அமைந்தால் பொருளாதரம் கருகும். எதிலும் சுபிச்சத்தை தராது. தொழில் தடங்கள் உண்டாகும். எப்போதும் உறவினர்களின் வருகையும் அதனால் வீண் சச்சரவுகளும் ஏற்படும்.

அடுத்ததாக –

நான், தென்கிழக்கு சமையலறைக்கும் வடமேற்கு சமையலறைக்கும் மாறுபட்ட ஒருசில பலன்கள் இருப்பதாக சொல்லி இருந்தேன் அல்லவா?

அதனை பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

Click & Read Next Part

Send your Feedback to: editor@bhakthiplanet.com

For Vaasthu Consultation Contact: K.Vijaya krishnarau,

Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

More Vaasthu Articles in English

More Vaasthu Articles in Tamil

More Astrology Articles in English

More Astrology Articles in Tamil

2012-2013 Guru Peyarchi Article in Tamil

2012-2013 Guru peyarchi-palan Video

CLICK FOR VIDEO PAGE

http://www.youtube.com/bhakthiplanet

For Vaasthu consultation Click Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

BHAKTHI PLANET
BHAKTHI PLANET

Posted by on Jul 28 2012. Filed under வாஸ்து. You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2018. All Rights Reserved.| designed & developed by Green Site Tech