தண்ணீயில கண்டம்
தண்ணீயில கண்டம்
என்றார் ஜோஸியர்.
கடல் இல்லாத ஊரை
தேடி பிடித்தான்.
ஆறு இல்லாத பகுதியில்
வீடு பிடித்தான்.
குளம் இல்லாத கோயிலில்
சாமி பிடித்தான்.
ஆனாலும் –
செத்து தொலைந்தான் –
டாஸ்மாக் பாரில்.!
கவிதை எழுதியவர் –
-விஜய் கிருஷ்ணாராவ்