Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

நீங்கள் நான்காம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவரா?

Astrologer, 

V.G. KrishnaRau  

4 –  ராகு

பிறந்த நேரம் நல்ல நேரமாக இருந்தால் வாழ்க்கையில் எந்த விஷயத்திலும் யோகசாலியாக இருப்பார்கள். ஆனால் அதற்காக மறுபடியும் நல்ல நேரம் பார்த்தா பிறக்க முடியும்.? சரியில்லாத நேரத்தை சரியாக்குவதுதான் எண்கணித சாஸ்திரம். நமது பெயர் என்கிற இயந்திரத்தை இயங்க செய்கிற மின்சாரம்தான் எண்கணித சாஸ்திரம்.

பிறந்த ஜாதகத்தை மாற்ற முடியாது. நாமாக மாற்றினாலும் அதனால் எந்த பலனும் கிடைக்காது. ஆனால் அவரவர்களின் பெயரையோ அல்லது எண்கணித முறைப்படி பெயரில் உள்ள எழுத்துகளை மட்டும் மாற்றி அமைத்து நல்ல முன்னேற்றத்தை பெற முடியும்.

இப்போது நான்காம் தேதியில் பிறந்தவர்களுக்கான பலனும், பெயரின் கூட்டு தொகை எண் நான்கு (Name Number 4) அமைந்தவர்களுக்கான பலனையும் பார்க்கலாம்.

4,13,22,31 தேதிகளில் பிறந்தவர்கள் 

4-ம் தேதி பிறந்தவர்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள். நிதானமே பிரதானம் என்பதை அவ்வப்போது இவர்களுக்கு சொல்லி கொண்டே இருக்க வேண்டும். எல்லோரிடத்திலும் அன்பாக பேசவேண்டும் என்று நினைத்தாலும் நீங்கள் வெடுங்கென மற்றவர்களின் மனதை புண்படும்படி பேசுவீர்கள் பிறகு மனம் வருந்தவீர்கள்.

13-ந் தேதி பிறந்தவர்களான நீங்கள், எதை செய்ய நினைத்தாலும் அதற்கு திட்டம் போட்டு செய்ய வேண்டும் என்று நினைப்பதற்குள் அந்த காரியத்தில் அவசர அவசரமாக இறங்கிவிடுவீர்கள். திட்டம் போட்ட வாழ்க்கை என்பதே உங்கள் வாழ்க்கை சரித்திரத்திலேயே இருக்காது.

22-ந் தேதி பிறந்தவர்களான நீங்கள், நல்ல சிந்தனையாளராக இருப்பீர்கள். அந்த சிந்தனைக்கு ஏற்ப உங்களுடன் பழகும் நண்பர்களுக்கு இருக்காது உங்களை விட நற்கணத்தில் குறைந்தவர்களின் சகவாசம்தான் அதிகம் இருக்கும் இதனால் அவ்வப்போது பிரச்னைகளும் மனசஞ்சலங்களும் ஏற்படும். ஒருவருடன் பழகும்போது அவர்களின் குணத்தை விசாரித்து பழகினால் எந்த பிரச்சினையும் ஏற்படாது.

31-ந் தேதி பிறந்தவர்களான நீங்கள், அவ்வப்போது உடலில் அலர்ஜி ஏற்படும். உஷ்ண சம்மந்தமான தொல்லையும் ஏற்படும். எதை செய்தாலும் பலமுறை சிந்தித்து முடிவெடுப்பவர் நீங்கள். பலமுறை சிந்தித்து முடிவெடுத்தாலும் அதிலும் திருப்தி இருக்காது. ஒவ்வொரு காரியத்திற்கும் போராடிதான் வெற்றி பெறுவீர்கள்.

பிறந்த தேதிக்கான பலனை பார்த்தோம் இப்போது பெயர் எண்ணுக்கான பலனை படிக்கலாம்.  

பெயர் எண் நான்கு அமைந்தால்,  அத்தனை சிறந்த பலனை பெற முடியாது.

பெயர் எண் 13 என்று அமைந்தால்,  இதுவும் சிறந்த பலனை தராது துன்பமே வாழ்க்கையாக அமையும்.

பெயர் எண் 22 அமைந்தால்,  பிரகாசம் இல்லாத வாழ்க்கை அமையும். சிந்தனை எந்நேரமும் தீயவழிலேயே செல்லும். இதனால் பொருள் இழப்பு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. திடமனம் இருந்தாலும் தோல்வியே பாதையாக அமையும். திடீர் துன்பம் தரும்.

பெயர் எண் 31 அமைந்தால், சாதாரண விஷயங்களுக்கு கூட அதிக ஈடுபாடுவுடன் செய்வீர்கள். தோல்விகளை கண்டாலும் கீழ்தரமான குணத்தை கொடுக்காமல் நல்ல குணத்தை கொடுக்கும். ஆனால் எந்நாளும் சிந்தனையிலேயே வாழ்வை நடத்துபவராக இருப்பீர்கள். இந்த எண் சுமாரான எண்ணாகதான் இருக்கும்.

பெயர் எண் 40 அமைந்தால்,  எப்படி பூஜியத்தில் இருந்த ராஜ்ஜியத்தை ஆரம்பித்து மறுபடியும் பூஜியத்திலேயே முடிவதுபோல வாழ்க்கை அமையும்.  என்னதான் சிறப்பாக வாழ்ந்தாலும் கடைசியில் எந்த லாபமும் இல்லாமல் பரமபதத்தில் பாம்பு கொட்டியதுபோல் மறுபடியும் ஆரம்ப நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.

பெயர் எண் 49 அமைந்தால்,  சின்ன முயற்சிக்கும் கைமேல் பலன் கிடைக்கும். அவ்வப்போது வீண் சண்டைகளை சந்திக்க நேரும். எதுவும் எதிர்பாராமல் கிடைக்கும். அது நன்மையாகவும் இருக்கலாம் – தீமையாகவும் இருக்கலாம்.

பெயர் எண் 58 அமைந்தால், தடாலடியாக வாழ்க்கை உன்னத நிலைக்கு எகிறும். அதேபோல் சிரமத்தையும் சந்திப்பீர்கள். அறிவினால் பிரச்னைகளை சமாளித்தாலும் அதிக போராட்டங்களை சமாளித்தே 75 சதவீத வாழ்க்கை முடிந்து விடும்.

பெயர் எண் 67 அமைந்தால்,  உடல் உபாதைகள் ஏற்படும். கற்பனைதிறன் அதிகரிக்கும். கலைகளில் ஆர்வம் இருந்தாலும் அதற்கான லாபத்தை பெறமுடியாது. தேவையில்லா நண்பர்களின் நட்பால் அவபெயர் ஏற்படும்.

பெயர் எண் 76 அமைந்தால்,  பிறரின் அறிவுரைகளின்படிதான் வாழ்க்கை நடத்துவீர்கள். எதிலும் சிந்தித்து முடிவெடுக்கும் திறன் அமையாது. தன்வேலையை விட பிறருக்கு உழைப்பதே லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள்.

பெயர் எண் 85 அமைந்தால்,  நல்ல குணத்தை கொடுக்கும். அந்த குணத்தாலேயே பல நன்மைகளை அடைவீர்கள். கஷ்டத்தை கண்டாலும் அதை இஷ்டபட்டு ஏற்று கொள்வீர்கள். நல்ல சிந்தனைகளும் அறிவாற்றலும் உண்டாகும்.

பெயர் எண் 94 அமைந்தால்,  மன தைரியத்தை கொடுக்கும். எதையும் சமாளித்து வெற்றிபெறுவீர்கள். திடீர் என்று அதிர்ஷ்டம் உண்டாகும். உழைப்புக்கேற்ற பலனை அனுபவித்தே தீருவீர்கள்.

பெயர் எண் 103 அமைந்தால்,  ஏணிபடிபோல் ஏற்றத்தை கொடுக்கும். அதே சமயம் உடலில் அவ்வப்போது அலர்ஜியையும் உடல் உஷ்ணத்தையும் கொடுக்கும். லட்சியம் எதுவோ அதை சாதிக்காமல் விடமாட்டார்கள். ஏற்றம் – இறக்கம் இருந்தாலும் எதையும் டேக்கிட் ஈசி என்ற மனநிலையை கொடுக்கும்.

நான்காம் எண்ணில் இருந்து  103 எண்களுக்கும் என்ன பலன் என்பதை தெரிந்து கொண்டீர்கள் அல்லவா. இந்த பெயர் எண்களின் பலன்கள் எல்லா தேதிகளில் பிறந்தவர்களுக்கும் பொறுந்துமா என்றால் இல்லை. உணவுக்கு தக்காளி ருசியை அதிகபடுத்தும். ஆனால் பீட்ரூட்டுக்கு தக்காளி போட்டால் ருசியை தக்காளி கெடுத்துவிடும். அதுபோல அவரவருக்கு ஏற்ற எண் எது என்பதை கண்டறிந்து பெயர் அமைய வேண்டும். அதுவே அதிர்ஷ்ட எண் ஆகும். பிறந்த தேதியை உடல் எண் என்றும், பிறந்ததேதி – மாதம் – வருடத்தை ஒன்றாக கூட்டினால் வரும் எண்ணை உயிர் எண் என்றும் அழைக்கப்படுகிறது. ஆகவே  உடல் எண், உயிர் எண் போன்றவற்றை பார்த்துதான் எந்த பெயரும் அமைய வேண்டியது அவசியம்.

ஜாதகம் இருப்பவர்கள் உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் சாதகமாகவும் – யோகமாகவும்  இருக்கிறது? எந்த கிரக நிலைகள் கெடுதலும் – நீச்சமும் பெற்று உள்ளது? என்பதை தெரிந்து கொண்டு பெயர் எண் அமைத்து உபயோகப்படுத்தினால் சரியான பலனை பெற முடியும்.

அதிர்ஷ்ட நிறம் –    மெரூன்- பிரவுன்

அதிர்ஷ்ட ராசி கல் –   கோமேதகம்

அதிர்ஷ்ட எண்  – 1, 6.

 அடுத்த பகுதியில் 5 எண் பலன்களை அறியலாம்.

 மேலும் எண் கணிதத்திற்கான பலன்களை அறிய கிளிக் செய்யவும்.  

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jul 2 2012. Filed under Photo Gallery, எண்கணிதம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »