வங்கிக் கிளை மாறும் போது கணக்கு எண் மாறக் கூடாது : ரிசர்வ் வங்கி
ஒரு வங்கியில் கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர், அதே வங்கியின் வேறொரு கிளைக்கு தனது கணக்கை மாற்றும் போது, பழைய வங்கி கணக்கு எண்ணையே பராமரிக்க வேண்டும் என்றும், புதிதாக கணக்கு தொடங்குவது போன்ற நடைமுறைகளைப் பின்பற்றக் கூடாது என்றும் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.