Thursday 26th December 2024

தலைப்புச் செய்தி :

திருப்பங்கள் தரும் ஸ்ரீஆஞ்சனேயரின் ஒரு ரூபாய் பிரசாதம்




நிரஞ்சனா

புதுடெல்லி கன்னாட் பிளேஸில் இருக்கிறது அனுமான் மந்திர்.

ஸ்ரீ இராமரின் பக்தர் ஆஞ்சநேயர். அனுமனை வணங்கினாலே ஸ்ரீ இராமரின் அருள் கிடைத்துவிடும். அதேபோல் ஸ்ரீ இராமரை வணங்குபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருள் துணை கிடைக்கும்.

பாண்டவர்களுக்கு ஸ்ரீ அனுமனின் அருள் 

பாண்டவர்கள் பகடை விளையாட்டில், துரியோதனனிடம் தோற்றார்கள். இதனால் பாண்டவர்கள் நாட்டை இழந்து காட்டில் தங்கினார்கள். அப்போது ஒருநாள் திரௌபதி பீமனிடம் ஒரு தாமரை பூவை காட்டி, “இதுபோல் இன்னொரு தாமரை பூ வேண்டும்” என்றார். அதனால் பீமன் அதேபோல் ஒரு தாமரை மலரை தேடி சென்றபோது,  அந்த நடுகாட்டில் ஸ்ரீஅனுமன் தவத்தில் இருந்தார்.  அவரது நீண்ட வால் பீமனின் பாதையை தடுத்தப்படி இருந்தது. இதனால் பீமன், தவத்தில் இருப்பவர் ஸ்ரீஅனுமன் என்று தெரியாமல், “ பாதையை தடுக்கிறது. உன் வாலை எடு.” என்றார். பிறகு அவர் ஸ்ரீஅனுமன் என்பதை தெரிந்துக்கொண்டு மன்னிப்பு கேட்டார். ஸ்ரீஅனுமன் பீமனை மன்னித்தார். அத்துடன், “பீமா.. நீ கவலைப்படாதே. ஸ்ரீராமரும் உங்களை போல் காட்டில் இருக்கம் போதுதான் என்னை சந்தித்தார். அவருக்கு வெற்றி கிடைத்தது. அதுபோல் உங்களுக்கும் வெற்றி கிடைக்கும்.” என்றார் ஸ்ரீஅனுமன்.

ஸ்ரீஇராமபக்த ஆஞ்சநேயர் கூறியது போல், பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த பாண்டவர்கள் ஸ்ரீஅனுமனுக்கு ஐந்து கோயில்கள் கட்டினார்கள். அந்த கோயில்களை துளசிதாஸ் தரிசித்து வந்த போது இந்த ஆலயத்திற்கும் வந்தார்.

பிறகு இந்த பகுதியின் புராண சிறப்பை அறிந்து அம்பர் மகாராஜா மான்சிங் என்ற அரசர் கோயிலை சிறப்பாக கட்டினார். முகலாயர்களால் இந்த கோயிலுக்கு ஆபத்து நேரக்கூடாது என்று கருதிய  அக்பர்,

TamilMatrimony.com
A part of BharatMatrimony.com
1000s of Tamil Brides & Grooms
www.tamilmatrimony.com/Register FREE
கோபுர கலசத்தின் உச்சியில் பிறைச் சந்திரன் வடிவில் ஒரு உலோகத் தகட்டையும் செய்துவைக்க சொன்னாராம். அந்த பிறை சந்திரனை இன்றும் கலசத்தின் உச்சியில் காணலாம்.

கின்னஸ் சாதனை  

ஆகஸ்ட் 1, 1964-ம் ஆண்டு, “ஸ்ரீ ராம், ஜெய் ராம், ஜெய் ஜெய் ராம்” என்று 24 மணி நேரமும் தொடர்ச்சியாக  பக்தியோடு மந்திரத்தை பக்தர்கள் உரக்க உச்சரித்ததால் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில்    பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.

இந்த ஸ்ரீஅனுமார் கோயிலை சக்திபீடம் என்ற அழைக்கிறார்கள். காரணம், நினைத்ததை நினைத்தபடி செய்து தருவார் ஸ்ரீஅனுமார் என்கிறார்கள் பக்தர்கள்.

அதேபோல் ஒரு ரூபாயை ஒரு கவரில் போட்டு, ஸ்ரீஅனுமார் முன் வைத்து பூஜித்து அதை வாங்கி வியபாரத்தை தொடங்கினால் அந்த வியபாரம் விருத்தியடையும் என்கிறார்கள். அதேபோல் எந்த சுபநிகழ்ச்சி செய்வதாக இருந்தாலும் இங்குள்ள ஸ்ரீஆஞ்சநேயர் முன் ஒரு ரூபாயை வைத்து வணங்கி அந்த பணத்தை சுபநிகழ்ச்சிக்கு செலவு செய்தால் அந்த சுபநிகழ்ச்சிகளில் தடைகள் இருக்காது என்கிறது ஸ்தலபுராணம்.

ஸ்ரீஅனுமனுக்கு இனிப்பு படைத்து வணங்கினால் இன்னல்கள் நீங்கி பிரகாசமான வாழ்க்கை அமையும்.

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும் 

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள் 

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

தமிழ் – ஆங்கில இணையதள பத்திரிக்கையான நமது பக்திபிளானட்.காம், வளரும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்தவும், புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு அறிமுக மேடையாகவும் இருந்து வாய்ப்பு தருகிறது. கதை, கவிதை, கட்டுரை போன்ற உங்கள் படைப்புகள் பக்திபிளானட்.காம் இணையதளத்தில் பிரசுரமாக விரும்பினால் editor@bhakthiplanet.com க்கு அனுப்புங்கள். படைப்புகள் தமிழில் மட்டுமே அனுப்ப வேண்டும்.  ஏற்கெனவே பிரசுரமாகியிருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புகளை திருத்தவோ, சுருக்கவோ ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.

 

Posted by on Mar 10 2012. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், பிற கோயில், பெருமாள் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »