வாழ்வின் இருள் நீக்கி வழிகாட்டும் ஓதிமலையாண்டவர்
சிவபெருமானும் முருகனை சந்தித்து, ஒரு மாணவன் நிலையில் இருந்து பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் கேட்டு, பிரம்மனையும் விடுவித்தார். இந்த சம்பவம் சுவாமிமலையில் நடந்தது.
ஓதிமலையாண்டவருக்கு ஐந்த தலை ஏன்?
இதுபோல முருகப் பெருமானின் சிறப்பை சொல்லும் இன்னொரு மலை இருக்கிறது. அதுதான் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள ஓதிமலை. ஒருசமயம் இந்த மலையிலும் வேதம் ஆகமங்களை ஓதி சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார் முருகப்பெருமான். இதனால்தான் இந்த மலைக்கு ஓதிமலை என்று பெயர் வந்தது. அத்துடன் முருகன், ஓதிமலையாண்டவர் என்று அழைக்கப்பெற்றார்.
பொதுவாக முருகப்பெருமானுக்கு ஆறு தலை இருக்கும். ஆனால் இங்குள்ள சிறப்பு என்னவென்றால், முருகப் பெருமானான ஓதிலையாண்டவருக்கு ஐந்துதலைதான் உள்ளது.. இதன் காரண விபரத்தை தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்.
ஐந்து முகன்
கன்னிவாடி என்ற ஒருமலை பகுதியில் பல வருடங்கள் தவம் செய்துக்கொண்டு இருந்தார் போகர். அத்துடன் யாகங்களும் செய்து வந்தார். அந்த நேரத்தில் அம்மன் தோன்றி, ஏதோ கோபம் அடைந்து போகரை சபித்து விடுகிறார். பிறகு போகரின் சக்தியையும் நீக்கி விடுகிறார் அன்னை சக்திதேவி. “எனக்கு இப்படி ஒரு நிலை வந்ததன் காரணம் என்னவென்று நான் கேட்க மாட்டேன். ஆனால் இதற்கு பரிகாரம் இருக்கிறதா தாயே.?” என்று கேட்டார் போகர்.
அதற்கு அன்னை சக்திதேவி, “பழனிக்கு செல். உன் கர்ம வினையை முருகன் நீக்குவான்.” என்றார் சக்திதேவி. அதனால் அன்றே பழனிக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்து பழனியை நோக்கி பயணம் செய்தார் போகர்.
வெகு தூரம் பயணம் செய்ததால் களைப்படைந்தார் போகர். பழனிக்கு எப்படி செல்வது.? நம்முடைய சக்தியை அம்மன் நீக்கி விட்டாரே. முருகா… உன்னை காண வருகிறேன். இந்த சித்தனுக்கு பித்தம் பிடிப்பதற்குள் பழனிக்கு செல்ல வழிகாட்டு.” என்று வேண்டினார் போகர். அத்துடன் இந்த இத்தலத்தில் தங்கி முருகனை வேண்டி, யாகம் நடத்தினார்.
அழைத்த குரலுக்கு வருபவர் நம் முருகப்பெருமான். அதனால் போகர் அழைத்தவுடன், “வா. நான் உனக்கு வழிகாட்டுகிறேன்.” என்றார் ஓதிமலை கந்தன்.
“நீ என்னோடு வந்துவிட்டால் இந்த மலையை யார் காப்பார்?” என்று போகர் கேட்க, அதற்கு ஓதிமலை முருகன், “நமக்கு ஆறு தலை. அதனால் மக்கள் எம்மை வணங்கினால் அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கும். அது உனக்கும் கிடைக்கும். கலங்காதே. உனக்காக நான் ஒருமுகமாக உன்னுடன் வருகிறேன். வா புறப்படுவோம்.” என்று கூறி குமாரபாளையம் வரை போகருடன் வந்து பழனிக்கு செல்ல வழி காட்டினார் முருகன். அத்துடன், பழனியில் நவபாஷணத்தில் சிலை உருவாக்கி பிரதிஷ்டை செய். உலகம் உள்ளவரை போற்றப்படுவாய். உலக மக்களின் பிணி உன்னால் தீரும்.” என்றார் போகரிடம் முருகப்பெருமான்.
இதனால் போகருக்காக ஓதிமலையில் ஐந்தமுகம் முருகனாகவும், குமரபாளையம் நாகநாதேஸ்வரர் கோயிலில் ஒரு முகத்துடனும் பக்தர்களுக்கு காட்சி தருகிறார் ஆறுமுகன்.
வரம் தருவான்
ஒரு செயலை தொடங்குவதற்கு முன்னதாக ஓதிமலையாண்டவரை வணங்கி பூ வைத்து உத்தரவு கேட்கிறார்கள் பக்தர்கள். முருகப்பெருமான் என்ன உத்தரவு தருகிறாரோ அதன்படிதான் நடக்கிறார்கள். ஒதிமலையாண்டவரிடம் உத்தரவு வாங்குவதற்கு பெயர், “வரம் கேட்டல்” என்று அழைக்கிறார்கள்.
ஓதிமலையாண்டவரை வணங்கினால் கல்வி தடை விலகும். நல்ல உயர் கல்வி பெறுவார்கள். எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். வேலை வாய்ப்பு கிடைக்கும். சமுதாயத்தில் நல்ல செல்வாக்கு ஏற்படும். போகருக்கு வழிகாட்டிய ஓதியாண்டவர், தன்னை நாடிவரும் பக்தர்களுக்கும் வழிகாட்டுவார். நேரம் கிடைக்கும் போது ஓதிமலையாண்டவரை தரிசியுங்கள். உங்களுக்கு வழிகாட்டும் குருவாக இருந்து நல்வழி காட்டுவார் முருகப் பெருமான்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved
தமிழ் – ஆங்கில இணையதள பத்திரிக்கையான நமது பக்திபிளானட்.காம், வளரும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்தவும், புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு அறிமுக மேடையாகவும் இருந்து வாய்ப்பு தருகிறது. கதை, கவிதை, கட்டுரை போன்ற உங்கள் படைப்புகள் பக்திபிளானட்.காம் இணையதளத்தில் பிரசுரமாக விரும்பினால் editor@bhakthiplanet.com க்கு அனுப்புங்கள். படைப்புகள் தமிழில் மட்டுமே அனுப்ப வேண்டும். ஏற்கெனவே பிரசுரமாகியிருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புகளை திருத்தவோ, சுருக்கவோ ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.