தடையில்லா கல்வி வரம் தரும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி
நிரஞ்சனா
கல்விக்கு அதிபதி சரஸ்வதி. படைப்புகளுக்கு அதிபதி பிரம்மா. ஆனால் சகல லோகங்களுக்கும் தலைவர் ஈசன். படைக்கும் தலைவனான பிரம்மாவின் புதல்வர்களுக்கு குருவாக இருந்து ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியாக உபதேசம் செய்தார் சிவபெருமான். அதை பற்றி தெரிந்துக் கொள்ள இருக்கிறோம்.
குருவாக சிவபெருமான்
பிரம்மாவின் மகன்கள் சநகர், சநந்தனர், சநத்குமாரர், சநாத்சுஜாதர். இவர்கள், தங்கள் தந்தையை போல ஞானம் பெற வேண்டும் என்று எண்ணினார்கள். அதற்கு, “யாரிடம் ஞான உபதேசம் பெறுவது?. நம் தந்தையிடமே உபதேசம் பெற்றால் குருபக்தி இருக்காது. ஆகவே நாம் ஞானம் பெற நமக்கு வேறொரு குரு தேவை.” என்ற எண்ணத்தில் பல இடங்களுக்கு தேடி சென்றார்கள்.
நல்ல புத்தி சொன்னால், “நீ யார் எனக்கு சொல்வதற்கு?“ என்று கேள்வி கேட்பவர்களின் மத்தியில், தங்களுக்கு நல்ல ஞானம் கிடைக்க குருவை தேடி நான்முகனின் புத்திரர்கள் சென்றார்கள். இதை அறிந்த சிவபெருமான், ஒரு யோகி உருவம் எடுத்துக் கொண்டு, மானசரோவர் ஏரியின் அருகில் இருக்கும் ஒரு விருக்ஷத்தின் அடியில் தென்முகம் பார்த்தபடி தியானத்தில் அமர்ந்தார்.
“மரத்தின் கீழே ஒரு யோகி தியானம் செய்து கொண்டு இருக்கிறாரே, அவர் முகத்தை பார்த்தால் ஒரு தெய்வீக தேஜஸ் தெரிகிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அது இந்த யோகியிடம் தென்படுகிறது. அதனால்தான் இவர் தியானத்தில் இருக்கும்போதும் ஒரு கம்பீரம் தெரிகிறது. இவரே நமக்கு சரியான குரு.” என்று பிரம்ம தேவரின் புதல்வர்கள் ஒருவருக்கொருவர் பேசிகொண்டார்கள்.
அதனால் அந்த யோகியின் அருகில் சென்று அவர் தியானம் முடிந்த பிறகு, “குருவே” என்று சொல்லி வணங்கினர் பிரம்ம புத்திரர்கள். குருவாக தோன்றிய சிவபெருமான், பிரம்மாவின் மகன்களை தன் மாணவர்களாக ஏற்றார்.
தாய் எட்டடி; குட்டி பதினாறடி
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்ற சொல்லுக்கேற்ப, பிரம்மனின் புதல்வர்கள் தங்கள் தந்தையை விட நல்ல ஞானத்தை பெற்றவர்களாக திகழ்ந்தார்கள். அதனால் குருவிடம் பல சந்தேக கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி சொல்லியே சலித்துவிட்டார் சிவபெருமான். இப்படியே பல வருடங்கள் ஓடியது. கற்றது கையவு. கல்லாதது உலகளவு என்று உணர்ந்தவர்கள்தான் தேடுதலை விட மாட்டார்கள். கேள்விகளையும் விட மாட்டார்கள். எதுவும் தெரியாதவனுக்கு எதையும் சொல்லி தந்து விடலாம். எல்லா தெரிந்துவிட்டவனுக்கு இன்னும் எவ்வளவு சொல்லி தந்தாலும் அவனுக்கு அது போதாது.
அப்படியே, குருவாக இருந்த சிவபெருமானும் இந்த நான்முகனின் புதல்வர்களான இந்த சகோதரர்களிடம் மாட்டிக் கொண்டு முழித்தார். இருந்தாலும் தன் மாணவர்கள் இந்த அளவுக்கு கேள்வி ஞானம் கொண்டவர்களாக இருப்பதை நினைத்தும் மகிழ்ந்தார்.
“ஏன் தியானம், பிராணாயாமம் யோகப்பயிற்சி செய்ய வேண்டும்.?” போன்ற பல கேள்விகள் கேட்டார்கள் மாணவர்கள்.
“இவைகளை முறைப்படி செய்தாலே உங்கள் கேள்விகளுக்கு அதுவே விடை தந்து விடும். ஆழ் மனத்திற்கு ஒரு ஆற்றல் இருக்கிறது. சக்தி இருக்கிறது. அந்த ஆழ் மனமே குரு. உங்களுக்குள்ளேயே இருக்கும் அந்த ஞானகுருவை வெளிப்படுத்த தியானம், தவம், பிராணாயாமம், யோகப்பயிற்சி போன்றவை தேவைப்படுகிறது.” என்று இப்படி பல கேள்விகளுக்கு விரிவாக பல வருடங்கள் பொறுமையாக தன் மாணவர்களுக்கு விளக்கினார் சிவபெருமான். அத்துடன் சிவபெருமானே அந்நிலையில் இருந்தும் காட்டினார். இதன் பிறகுதான் பிரம்மனைவிட பல மடங்கு ஞானத்தை பெற்றார்கள் நான்முகனின் புதல்வர்கள்.
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி என்றாலே ஞானத்தை தருபவர் என்ற பொருள் உண்டு. ஞானத்தை தந்த அந்த ஞானகுருவுடனே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், நான்கு சகோதரர்களும் நான்கு முனிவர்களாக ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியின் பாதத்தின் அடியிலேயே அமர்ந்துவிட்டார்கள்.
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி கடலை மாலை அணிவித்தால் கல்வி தடை விலகும். கல்வி கற்று தர ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியை போன்ற நல்லாசிரியர்கள் கிடைப்பார்கள். ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு மஞ்சல் வஸ்திரம் அணிவித்தால் ஞானமும், அதனுடன் யோகமும் கிடைக்கும். மூன்று அல்லது பன்னிரெண்டு அல்லது இருபத்தி ஒன்று தீபங்கள் ஏற்றினால், கல்வி தடை விலகும். உயர் கல்வி படிக்க வழி வகுக்கும்.
“குருவே சரணம்”
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
CLICK FOR VIDEO PAGE
editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved
தமிழ் – ஆங்கில இணையதள பத்திரிக்கையான நமது பக்திபிளானட்.காம், வளரும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்தவும், புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு அறிமுக மேடையாகவும் இருந்து வாய்ப்பு தருகிறது. கதை, கவிதை, கட்டுரை போன்ற உங்கள் படைப்புகள் பக்திபிளானட்.காம் இணையதளத்தில் பிரசுரமாக விரும்பினால் editor@bhakthiplanet.com க்கு அனுப்புங்கள். படைப்புகள் தமிழில் மட்டுமே அனுப்ப வேண்டும். ஏற்கெனவே பிரசுரமாகியிருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புகளை திருத்தவோ, சுருக்கவோ ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.