கண் திருஷ்டியை விரட்டும் குங்குமம்
நிரஞ்சனா
இறைவனுக்கு பிடித்த நிறம் சிகப்பு. அம்பிகைக்கு உகந்த நிறம் கருப்பு என்கிறது சிவபுராணம். தீய சக்திகளை அழிக்கும் ஆற்றலை சிகப்பு நிறத்திற்கு கொடுத்து இருக்கிறார் சிவபெருமான்.
நெற்றியில் குங்குமத்தை வைத்துகொண்டால் எந்த தீயசக்தியும் நெருங்காது. உடலில் எங்காவது ரத்தம் அடைப்பட்டு இருந்தால் அந்த இடத்தில் ரத்தம் சீராக பாய சிகப்பு ஒலியை வெளிப்படுத்தும் மின்சார விளக்கை ரத்தம் தடைபட்ட இடத்தில் காட்டுவார்கள். இதனால் அந்த இடத்தில் ரத்தஒட்டம் சரியான நிலைக்கு வரும் என்கிறது விஞ்ஞான மருத்துவம்.
மூளைக்கு சுறுசுறுப்பு தரும் ஆற்றல் குங்குமத்திற்கு இருக்கிறது. அதனால்தான் நெற்றியில் குங்குமத்தை கண்டிப்பாக ஆண்களும் சரி பெண்களும் சரி இட்டுக்கொள்ள வேண்டும் என்று நம் முன்னோர்கள் அறிவுறுத்தினார்கள். குங்குமம் வைத்துக்கொள்ள கூச்சப்படும் ஆண்களும் கோயிலில் பிரசாதமாக குங்குமம் தரப்படும்போது அதனை மறுக்காமல் தங்கள் நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். காரணம் குங்குமத்திற்கு இருக்கிற மிக முக்கியமான மகிமை என்னவென்றால், நல்லது எது? – தீயது எது என்று சிந்தித்து பார்க்கும் ஆற்றலை தருகிறது குங்குமம். குங்குமத்தை நெற்றியில் வைத்திருப்பவர்களை கண்டால், துஷ்ட எண்ணம், பிறருக்கு கெடுதல் செய்யும் எண்ணம் உள்ளவர்களை அச்சுறுத்தும்.
அதனால்தான் மாந்தீரிகத்தில் கூட சித்து வேலை செய்து பிறரை வசியப்படுத்துகிறவர்கள் தங்கள் நெற்றியில் திருநீறு – குங்குமத்தை வைத்துக்கொள்ள மாட்டார்கள். அதுபோல நெற்றியில் திருநீறு – குங்குமத்தை வைத்துக்கொண்டிருப்பவர்களை தீய எண்ணம் கொண்ட சித்து வேலைகாரர்கள் – மாந்தீரிகர்கள் – மெஸ்மரிசம் செய்பவர்கள் வசியப்படுத்த முடியாது.
அதனால்தான் சீதாதேவி இராவணன் சூழ்ச்சியால் கடத்தினாலும் தன் மாந்தீரிக – சித்துவேலைகளால் தம்மை வசியப்படுத்திட கூடாது என்பதற்காக அன்னை சீதா தேவி தன் நெற்றியிலும், நெற்றி வகுடிலும் குங்குமம் வைப்பதில் ஒருநாளும் தவறியதில்லை.
உஷ்ணத்தை கட்டுபடுத்தும் குங்குமம்
ஒருவர் பேசியதையே திரும்ப திரும்ப பேசினால் என்ன சொல்வோம்? அவருக்கு மூளை குழம்பிவிட்டது… அதனால்தான் அப்படி திரும்ப திரும்ப பேசுகிறார் என்று கூறுவோம் அல்லவா? இப்படி மூளை குழம்புவதற்கு காரணம் அதிக மன உலைச்சல். அந்த மனஉலைச்சல்தான் மூளைக்கு உஷ்ண தன்மையை கொடுத்து விடுகிறது. அதனால் பாதிக்கப்ட்டவர்கள் மனம் போன போக்கில் பேசுவார்கள்.
மூளைக்கு செல்லும் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் குங்குமத்திற்கு இருக்கிறது. குங்குமத்தை மஞ்சல் – படிகாரம் போன்ற பொருட்களால் தயாரிக்கிறார்கள். படிகாரம் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும். மன இருக்கத்தை தடுக்கும். அதனால்தான் நெற்றியில் குங்குமத்தை வைக்க வேண்டும். சூரியனின் ஒலி உடலில் படும்போது அந்த ஒலி நெற்றிலும் படும். அப்படிபடும் சூரிய கதிரால், நெற்றியில் இருக்கும் குங்குமத்தின் சிகப்பு ஒலி மூளைக்கு சென்று மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
துஷ்டசக்தியை போக்கும் குங்குமம்
சிலர் ஆடு – கோழிகளை பலி கொடுப்பார்கள். காரணம் ரத்த காவு வாங்க காத்திருக்கும் துஷ்ட சக்திகள், பலி தரப்படும் ஆடு-கோழிகளின் ரத்தம் குடித்து திருப்தி அடைந்து அந்த இடத்தைவிட்டு சென்றுவிடும். ஆனால் இப்படி உயிர் பலி தருவதை எதிர்த்தார் ஆதிசங்கரர். உயிர் பலி தருவது பாவம் சேர்க்கும் என்றார். அதனால் ஒரளவு உயிர் பலி தருவது குறைந்தது. இருந்தாலும் துஷ்ட சக்திகள் நம் வீட்டினுள் நுழையாமல் இருக்கவும், கண் திருஷ்டி போன்றவை தாக்காமல் இருக்கவும், உயிர் பலிக்கு ஒரு மாற்றாக எழுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, அந்த எழுமிச்சையின் இரண்டு பகுதியிலும் குங்குமத்தை தடவி, அந்த எழுமிச்சை பழத்தை வீட்டின் தலைவாசலின் அருகில் வைத்தால், அந்த இல்லத்திற்குள் துஷ்டசக்திகள் நுழையாது – கண் திருஷ்டியும் தடுக்கப்படும்.
வீட்டின் தலைவாசலில் அவரவர் குல வழக்கத்தின்படி மஞ்சல் குங்குமத்தை வைத்தால், அந்த இல்லத்தை தீயசக்திகள் நெருங்காது. ஸ்ரீமகாலஷ்மி அந்த இல்லத்தில் வாசம் செய்வாள். அத்துடன் குலதெய்வம் அந்த இல்லத்தில் தங்கி, அருள் செய்யும். நலம் தரும். சுபநிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடக்கும்.
அம்பிகையின் நெற்றி குங்குமத்தை பார்த்தால் யோகம்
“அம்பிகையின் நெற்றி குங்குமத்தை பார்த்தால், புண்ணியம் கிட்டும். தோஷம் போகும். ஷேமத்தை கொடுக்கும்.” என்றார் ஆதிசங்கரர்.
அதேபோல் அபிராமபட்டரும் சொல்கிறார் இப்படி…
“உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே“
.உதிக்கின்ற செங்கதிர்போல் நெற்றியின் சிந்தூரத் திலகத்துடன் அம்மனின் நெற்றி திலகம் சூரியனைபோல் பிரகாசமாக இருந்தது. அந்த திலகத்தை கண்ட அபிராமி பட்டர் அம்மனை மேற்கண்டவாறு வர்ணித்து பாடினார். அபிராமியின் உச்சிதிலகத்தை கண்ட பிறகுதான் அவருக்கு ஆயுள் விருத்தியானது. ஆம், அரசரின் தண்டனையில் இருந்து தப்பினார்.
குங்குமம் கை தவறி கொட்டினால் அடுத்த விசேஷம் வரபோகிறது என்ற அர்த்தம் என்றார்கள் முன்னோர்கள். குங்குமத்தால் அம்பிகைக்கு அர்ச்சனை செய்தால் கோடி புண்ணியம் ஏற்படும். அதேபோல் குத்துவிளக்கை குங்குமத்தால் அர்ச்சனை செய்தால் குலம் தழைக்கும் என்கிறது சாஸ்திரம்.
செவ்வாய் தோஷத்திற்கு சிறப்பு பரிகாரம்
செவ்வாய் தோஷம் இருப்பவர்கள், செவ்வாய்தோறும் முருகன் கோயிலுக்கு குங்குமம் வழங்கி, கோயிலில் தரும் குங்குமத்தை வீட்டில் இருக்கும் குங்குமத்துடன் கலந்து தினந்தொறும் தங்கள் நெற்றியில் இட்டு வந்தால் அவர்களுக்கு செவ்வாய் தோஷ பாதிப்புகள் குறையும். குழந்தை பாக்கியம் தடை உள்ளவர்களுக்கு அந்த தடை நீங்கி குழந்தை பாக்கியம் உண்டாகும் என்றார்கள் நம் முன்னோர்கள்.
ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் தங்கள் நெற்றில் குங்குமத்தை வைத்து வந்தால், அவர்களுக்கு வரும் கஷ்டங்கள் பனிபோல் விலகும். சிவ-சக்தியின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும்.
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved
தமிழ் – ஆங்கில இணையதள பத்திரிக்கையான நமது பக்திபிளானட்.காம், வளரும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்தவும், புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு அறிமுக மேடையாகவும் இருந்து வாய்ப்பு தருகிறது. கதை, கவிதை, கட்டுரை போன்ற உங்கள் படைப்புகள் பக்திபிளானட்.காம் இணையதளத்தில் பிரசுரமாக விரும்பினால் editor@bhakthiplanet.com க்கு அனுப்புங்கள். படைப்புகள் தமிழில் மட்டுமே அனுப்ப வேண்டும். ஏற்கெனவே பிரசுரமாகியிருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புகளை திருத்தவோ, சுருக்கவோ ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.