மும்பாதேவி
நிரஞ்சனா
அசுரர்கள் வரம் பெற சிவபெருமானை நினைத்து தவம் செய்தால் உடனே அவர்களுக்கு வரத்தை தந்தவிடுவார் ஈசன். பிறகு வரம் பெற்றவர்கள் தருகிற இன்னல்கள் பெரியதாக இருக்கும். தந்த வரத்தை ஈசன் திரும்ப பெறவும் முடியாது. ஆனால் சக்திதேவி அப்படி அல்ல. தன்னை வணங்குபவர்களுக்கு வரத்தை அள்ளி தருவார். ஆனால் அதுவே வரம் கிடைத்தவர்கள் அதனை தவறாக பயன்படுத்தினால் அதோடு தொலைந்தார்கள்.
அதுபோல் அசுரர்கள் வரம் பெற்றாலும் அந்த வரத்தால் நல்லவர்களுக்கு தீங்கு ஏற்பட்டால் அந்த வரத்தை முறியடிக்கும் சக்தி ஈஸ்வரிக்கு மட்டும்தான் இருக்கிறது.
இறவா வரத்தை பெற்ற அசுரன்
மும்பாரக் என்ற அசுரன். பிரம்மாவை நினைத்து கடும்தவம் செய்தான். தம்மை நினைத்து தவம் செய்கிறானே ஒரு அசுரன் என்று மகிழ்ந்த பிரம்மா, மும்பாரக் முன்தோன்றி, உனக்கு என்ன வரம் வேண்டும்.? என கேட்டார்.
“செல்வம் இன்று இருந்தால் நாளை போய்விடும். தலைமை பதவி இருந்தால், வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு என்பார்கள், அதனால் தலைமை பதவியும் நிரந்தரம் இல்லை. அதனால் என் உடலுக்கும் உயிருக்கும் அழிவில்லாத வரம் வேண்டும். அதாவது சாகாவரம் வேண்டும்.” என்று பிரம்மாவிடம் கேட்டான்.
மற்றவர்களுக்கு எதாவது கொடுக்கும் போது, என்ன கொடுக்கிறோம் என்று தெரியாது. கொடுத்த பிறகு, “அய்யோ அவசரப்பட்டு விட்டோமே” என்று புத்தி புலம்பும். அந்த எண்ணம் மனிதர்களுக்கு மட்டும் இல்லை இறைவனுக்கும் சில சமயம் உண்டாகும்.
மும்பாரக் கேட்ட சாகா வரத்தால் வந்த சக்திதேவி
அசுரன் மும்பாரக் கேட்ட சாகாவரத்தை கொடுத்தார் பிரம்மதேவன். சிங்கத்திற்கு பறக்கும் சக்தி கிடைத்தால் என்ன செய்யும்.? தன் இஷ்டபடி பறந்து பறந்து அதன் வழியில் குறுக்கிடாத அப்பாவிகளையும் கொல்லும். அதுபோல்தான் சாகாத வரத்தை பெற்ற மும்பாரக்கும் செய்தான். தேவர்களையும், முனிவர்களையும் தொல்லை கொடுத்து வந்தான். இதனால் மனம் வருந்திய தேவர்களும், முனிவர்களும் விஷ்ணுபகவானிடம் சென்றார்கள்.
விஷ்ணுபகவான் – சிவபெருமானிடம் சென்று அடுத்து என்ன செய்யலாம்? என்று ஆலோசித்த பிறகு, ஹரியும் ஹரனும் தங்களின் சக்தியை வெளிப்படுத்தி ஒரு பெண்ணை உருவாக்கினார்கள். அந்த தேவிக்கு எட்டு கைகள். அந்த பெண்ணிடம், “நீ மும்பாரக் என்ற அசுரனை வீழ்த்தி விடு. இதுவே எங்கள் கட்டளை.” என்று சொல்லி அனுப்பினார்கள்.
தேவிக்கும் அசுரனான மும்பாரக்குக்கும் கடுமையான யுத்தம் நடந்தது. இறுதியில் மும்பாரக் பணிந்தான் – தேவி வென்றாள். பணிந்த மும்பாரக், “தாயே என்னை மன்னித்துவிடுங்கள். தவறை உணர்ந்த என்னை உங்கள் பிள்ளையாக கருதுங்கள்.” என்று கண்ணீர் வடித்தபடி கூறியதை கேட்ட தேவி மனம் இறங்கினாள். அந்த அசுரனை மன்னித்தாள்.
ஒருசமயம் சக்திதேவியின் காலை பிடித்தான் கம்சன், அடுத்த நொடியில் தேவி அங்கிருந்து மறைந்தாள். இதை கண்ட தேவர்கள் கம்சனை ஏன் கொல்லவில்லை” என்று கேட்டபோது, “எனக்கு எதிரியாக இருந்தாலும் என் காலை பிடித்தவனை கொல்லும் பழக்கம் எனக்கில்லை.” என்றாள் தேவி”
அதுபோல, அசுரன் மும்பாரக் தேவி காலில் விழுந்ததால் அவனை மன்னித்தாள். அதனால் அந்த ஆசுரன், “தாயே நீங்கள் இந்த இடத்தில் என்னுடைய பெயரிலேயே பக்தர்களுக்கு ஆசிவழங்க வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டான். அதனால் அந்த பெண் சக்தி “மும்பாரக்தேவி” என்று அழைக்கப்பட்டாள்.
மும்பாரக் தேவி, மும்பாதேவி ஆன சம்பவத்தை அறிந்துக்கொள்வோம்.
இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved
தமிழ் – ஆங்கில இணையதள பத்திரிக்கையான நமது பக்திபிளானட்.காம், வளரும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்தவும், புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு அறிமுக மேடையாகவும் இருந்து வாய்ப்பு தருகிறது. கதை, கவிதை, கட்டுரை போன்ற உங்கள் படைப்புகள் பக்திபிளானட்.காம் இணையதளத்தில் பிரசுரமாக விரும்பினால் editor@bhakthiplanet.com க்கு அனுப்புங்கள். படைப்புகள் தமிழில் மட்டுமே அனுப்ப வேண்டும். ஏற்கெனவே பிரசுரமாகியிருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புகளை திருத்தவோ, சுருக்கவோ ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.