இன்று மார்கழி 30-ம் நாள் / திருப்பாவை – திருவெம்பாவை
திருப்பாவை–முப்பதாவது பாசுரம் பாசுரம்
வங்கக்கடல்கடைந்த மாதவனைக்கேசவனைத்
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப்றைகொண்டவாற்றை அணிபுதுவைப்
பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால்வரைத்தோள்
செங்கண்திருமுகத்துச் செல்வத்திருமாலால்
எங்கும்திருவருள்பெற்று இன்புறுவர்ரெம்பாவாய்.
திருப்பள்ளியெழுச்சி
பாடல் 10
புவனியில்போய்ப் பிறவாமையில் நாள்நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப்பூமி
சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந்துறை உறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும் நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே.
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here