Saturday 16th November 2024

தலைப்புச் செய்தி :

நினைத்ததை நிறைவேற்றி தரும் சூலக்கல் மாரியம்மன்




நிரஞ்சனா

கோயம்புத்தூரில் அமைந்துள்ளது சூலக்கல் மாரியம்மன் கோவில்.

இறைவன் எப்படி காட்சி தருவார் – எவ்வாறு காட்சி தருவார் என்று யாராலும் தெரிந்துகொள்ள முடியாது. இறை நம்பிக்கை இல்லாதவர்களையும் இறைவன் தம் பிள்ளையாகவே நினைத்து அவர்களுக்கும் தன் அருள்பார்வையை செலுத்த வருடத்திற்கு ஒருமுறை வீதி உலா வருகிறார். இதனால் தம் பிள்ளைகளான எல்லா ஜீவராசிகளுக்கும் கடவுள் தரிசனம் தருகிறார். இறைவனின் அருள்பார்வை பெற்றவர்கள் பெரிய பாதகத்தில் இருந்து தப்பிக்கிறார்கள்.

பெற்றோரை மதிக்காத பிள்ளைகளை எந்த பெற்றொரும் வெறுத்து விடுவதில்லை. தாயை பார்த்து பேய் என்று ஏசியவனையும் பிள்ளை பசியோடு உறங்கினால் பிள்ளையை எழுப்பி சாப்பிடு என்று தன் பாசத்தை காட்டுகிறாள். அவர்களின் நலனை காக்கிறாள் தாய். அதுபோல்தான் தெய்வமும் தன் குழந்தைகளான பக்தர்களை காக்க ஆங்காங்கே சுயம்புவாக தோன்றுகிறார்.

சூலக்கல் மாரியம்மன்

நமக்கெல்லாம் அருள் செய்ய காட்டுபகுதியான சூலக்கலில் தோன்றினார் சூலக்கல் மாரியம்மன்.

வேலாயுதம்பாளையம் என்ற அந்த இடத்தில் ஒருவர் தன்னுடைய பசுகளை சூலக்கல் என்ற பகுதியில் மேயவிடுவார். இப்படி தினமும் மேயவிடும்போதும் பசுவின் மடியில் இருக்கும்  பால் குறைந்துவிடும். தினமும் இது நடந்தது. ஒரு பசுமாட்டின் பால் மட்டும் குறைந்தால் சரி. ஆனால் சூலக்கல் பகுதியில் மேயும் அத்தனை பசுமாடுகளின் பால் குறைந்தது.

“எவனோ பசுவின் பாலை திருடுகிறான். யார் அந்த திருடன் என்பதை அறிய வேண்டும்.” என்று தன்னுடைய பசுமாடுகளை சூலக்கல் பகுதிக்கு அனுப்பிவிட்டு சிறிது நேரம் கழித்து அந்த இடத்திற்கு சென்று பார்த்தார் மாட்டுக்கு சொந்தகாரர். அப்போது ஒர் இடத்தில் அத்தனை பசுமாடுகளும் தானாகவே பால் சுரந்துக்கொண்டு இருந்தது இதை கண்ட அந்த பசுமாட்டின் உரிமையாளர்  ஆச்சரியம் அடைந்தார். அந்த இடத்தில் ஏதோ தெய்வசக்தி இருப்பதை உணர்ந்து பால் சுரந்த அத்தனை பசுமாட்டுகளையும் விரட்டினான்.

அப்போது ஒரு மாட்டின் கால் மட்டும், பால் சுரத்த இடத்தின் மண்ணில் மாட்டிகொண்டது. மாட்டின் காலை அந்த மண்ணில் இருந்து விடுவித்து அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது அம்மன் சுயம்புவாக தோன்றினார். பசுவின் கால் அம்மனின் சிலையில் மிதிபட்டதால் அம்மன் சிலையில் பாதிப்பு உண்டாகி ரத்தம் வடிந்தபடி இருந்தது. இதை கண்ட அந்த நபர் பயந்து, தன் வீட்டில் இருந்தவர்களிடமும் ஊர்மக்களிடம் விஷயத்தை சொன்னார்.

ஊர் மக்கள் வந்து பார்த்து அம்மனை வணங்கினார்கள். அந்த அம்மனின் சிலையில் பசுவின் கால்பதிந்த இடம் இன்றுவரை அம்மனின் உருவத்தில் காணலாம். அம்மன் சூலக்கல்லில் சுயம்புவாக தோன்றியதால், அம்மனுக்கு “சூலக்கல் மாரியம்மன்” என்று பெயர் வைத்தார்கள் பக்தர்கள்.

குழந்தை செல்வம்

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், சூலக்கல் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தால், அம்மனின் உடல் குளிர்ச்சியாகி குழந்தை பாக்கியம் வேண்டும் தம்பதிகளின்  மனதையும் குளிர்ச்சியாக்குவது போல் குழந்தை செல்வம் அருளுவார். அம்மனுக்கு புடவை அணிவித்து குங்குமம் வழங்கினால், குடும்பத்தில் சுபிக்ஷம் ஏற்படும். சூலக்கல் மாரியம்மனை வணங்குவோம். அம்மன் என்றென்றும் நமக்கு துணை இருந்து காப்பாள். நினைத்ததை நிறைவேற்றி தருவார் சூலக்கல் மாரியம்மன்.   

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here

© 2011 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Dec 27 2011. Filed under அம்மன் கோயில், ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech