Saturday 4th January 2025

தலைப்புச் செய்தி :

திருமண தடைக்கு செவ்வாய் தோஷமா?

V.G.கிருஷ்ணாராவ்,

துர்கா தேவி உபாசகர்.

எனக்கு வருகிற அநேக கடிதங்களும், என்னை நேரில் சந்திக்கின்ற பெற்றோரும் கேட்கின்ற கேள்வி, தங்கள் மகன் அல்லது மகளின் திருமண தடை எப்போது நீங்கும்.? என்பதை பற்றிதான். பொதுவாக திருமண தடைக்கு ஜாதகத்தில் பல கிரகதோஷ காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய காரணமாக இருப்பது இரண்டு தோஷங்கள்தான்.  அதில் ஒன்று செவ்வாய் தோஷம், இரண்டாவது காளசர்ப்ப தோஷம்.

இதில் காளசர்ப்பதோஷம் பற்றி இன்னொரு சமயத்தில் விளக்குகிறேன். இப்போது நாம் செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பனவற்றை பார்ப்போம்.

ஒரு பெண்ணின் ஜாதகத்திலோ அல்லது ஒரு பையனின் ஜாதகத்திலோ செவ்வாய், லக்கினத்திற்கு 2-4-7-8-12-ம் இடத்தில் அமைய பெற்றிருந்தால் அது செவ்வாய் தோஷம் ஆகிறது. ஒரு பெண்ணுக்கோ அல்லது ஒரு ஆணுக்கோ செவ்வாய் தோஷம் இருந்தால், அதேபோல் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகவரன்தான் பொருந்தும்.

அதாவது – O Positive ரத்தவகையை சேர்ந்தவருக்கு அதே O Positive வகை ரத்தம் ஏற்றினால்தான் அந்த உடல் ஏற்கும் என்கிறது மருத்துவ விஞ்ஞானம்.

அதுபோலதான், செவ்வாய் தோஷம் உள்ளவருக்கு செவ்வாய் தோஷம் உள்ள வரன்தான் திருமண வாழ்க்கையை நல்லமுறையில் அமைத்து தரும்.

செவ்வாய்தோஷம் என்பதை, இராசிக்கு பார்க்கக் கூடாது. லக்கினத்திற்குதான் பார்க்க வேண்டும்.

ஆனாலும், பொதுவாக ஒரு செவ்வாய்தோஷ ஜாதகத்தில் மேஷம், கடகம், விருச்சிகம், மகரம் போன்ற இராசிகளில் செவ்வாய் இருந்தாலும் அல்லது செவ்வாயோடு குரு சேர்ந்திருந்தாலும் செவ்வாய் தோஷம் பாதிக்காது. காரணம், செவ்வாய்க்கு மேஷம் மற்றும் விருச்சிகம் சொந்த இடமாகவும், மகரம், உச்சம் பெருகிற இடமாவும், கடகம் செவ்வாய்க்கு நீச்ச இடமாவும் அமைகிறது.

ஆகவே இந்த இடங்களில் செவ்வாய் அமைந்திருந்தால் அவை லக்கினத்திற்கு செவ்வாய்தோஷ இடமாக இருந்தாலும் தோஷம் இல்லை.

அதுபோல, செவ்வாய்தோஷம் தருகிற இடமான லக்கினத்திற்கு 2-4-7-8-12-ல் செவ்வாய் அமைந்து, அந்த செவ்வாயுடன் “குரு” சேர்ந்திருந்தாலும் செவ்வாய்தோஷம் பாதிக்காது.

ஆகவே, செவ்வாய் தோஷம் என்று, தேடி வருகிற ஜாதகவரன்களை தேவை இல்லாமல் தவிர்க்க வேண்டாம். இனி உங்கள் குடும்பத்தில் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமான் அருளால் கெட்டி மேளம் கொட்டட்டும். வாழ்த்துக்கள்.

Click for ENGLISH Version

V.G.கிருஷ்ணாராவ்,

துர்கா தேவி உபாசகர்.

(M) 98411 64648

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here

© 2011 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Dec 12 2011. Filed under Headlines, Home Page special, ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »