நீங்களும் ஜெயிக்கலாம்
நிரஞ்சனா
18-ஆம் நூற்றாண்டில் உலகில் பல இடங்களில் பெரியம்மை நோய் இருந்தது. இதனால் பலர் இறந்தார்கள். இதற்கு மருந்து ஊசி மூலமாக அம்மை நோய் கிரிமியை எடுத்து, மீண்டும் அம்மை நோய் தாக்கியவர்களின் உடலுக்கே செலுத்துவார்கள். இதற்கு “இனாகுலேஷன்” என்று பெயர். இதனால் உடலில் இருக்கும் அம்மை குணமாகும். ஆனால் இந்த மருத்துவமுறையில் ஆபத்தும் இருந்தது. அதாவது உடலுக்கு செலுத்தும் அம்மை நோயின் கிரிமியை அதிகமாகவோ குறைவாகவோ அம்மை நோயால் பாதிக்கபட்டவர்களின் உடலில் செலுத்தினால் அந்த நபர் இறக்கும் அபாயமும் ஏற்பட்டது.
இதற்கு சரியான தீர்வுதான் என்ன என்று யோசித்தார் இங்கிலாந்தின் குளூசெஸ்டர்ஷயர் பகுதியில் இருக்கும் டாக்டர் எட்வர்டு ஜென்னர். ஒருசமயம் அவர் அந்த கிராமத்தில் இருந்த மக்களிடம், உங்களுக்கும் அம்மை நோய் தாக்கும் அபாயம் இருக்கிறது. அப்படி வந்தால் ஊசி மருந்தின் மூலமாக குணப்படுத்தலாம் என்றார்.
அதற்கு கிராம மக்கள், “மாடுகளுக்கு வரும் அம்மை நோய் தாக்கிப் பலருக்கு மாட்டு அம்மை வந்துள்ளது. அப்படி மாட்டு அம்மை வந்தவர்களுக்கு சாதாரண அம்மை நோய் வராது.” என்றார்கள்.
இதை கேட்ட டாக்டர் எட்வர்டு யோசிக்க ஆரம்பித்தார். மாட்டின் அம்மை நோய் கிருமியை ஊசியினால் எடுத்து, சாதாரண அம்மை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் உடலில் செலுத்தினார். செலுத்திய சில மணி நேரத்திலேயே அந்த சிறுவனின் உடலில் இருந்த அம்மை நோய் நீங்கியது.
இவ்வாறு கிராம மக்கள் மூலமாக தாம் கண்டுபிடித்ததை 1798-ஆம் ஆண்டு ஒரு புத்தகமாக எழுதினார். அதை இங்கிலாந்து அரசின் மருத்துவப் பிரிவுக்கு அனுப்பினார்.
“பழைய மருத்துவமுறையைதான் கடைப்பிடிப்போம். உங்களது புதிய முயற்சியை நிராகரிக்கிறோம்.” என்றது இங்கிலாந்து மருத்துவ பிரிவு.
“காலம் ஒருநாள் மாறும். நிராகரித்தவரிடமே உதவி கேட்கும் நேரம் வரும்” என்பார்களே அதுதான் பிறகு நடந்தது. இங்கிலாந்து அரச குடும்பத்தினருக்கு அம்மை நோய் தாக்கியபோது, பழைய மருத்துவமுறையில் குணம் ஆகாததால் டாக்டர் எட்வர்டு ஜென்னரை அழைத்து வந்தார்கள் இங்கிலாந்து அரச குடும்பத்தினர்.
மாட்டின் அம்மை நோய் கிருமியை ஊசி மூலமாக எடுத்து, சாதாரண அம்மை நோயால் பாதிக்கப்பட்டவரின் உடலில் செலுத்தினார். சில மணி நேரத்திலேயே பூரணமாக குணம் அடைந்தார் அந்த நபர்.
டாக்டர். எட்வர்டு ஜென்னரின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. 1840-ம் ஆண்டு, “அம்மை நோய் தாக்காத வகையில் எல்லா குழந்தைகளுக்கும் எதிர் உயிரி கொடுத்தே ஆக வேண்டும்” என்று சட்டமாக்கியது இங்கிலாந்து அரசு. 1989-க்குள் பெரியம்மை நோய்க்கிருமிகளின் தாக்கம் அழிக்கப்பட்டது.
குணமாகாத பழைய மருத்துவமுறையை டாக்டர். எட்வர்டு ஜென்னர் மாற்றி யோசித்தார். இதனால் அவர் சாதனை படைத்தார். எடுக்கும் முயற்சி தோல்வி அடைந்தால், தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து மீண்டும் அதே வழியில் செல்லாமல் மாற்றி யோசித்தால் அந்த சிந்தனையே நல்ல அறிவு திறனும் தந்து வெற்றியை கொடுக்கும். அந்த அறிவு திறனே வெற்றி பாதையாகவும் உலகபுகழும் கிடைக்கச் செய்யும் என்று நிரூபித்தார் டாக்டர். எட்வர்டு ஜென்னர்.
செய்த முயற்சியில் தோல்வியா?. மாற்றி யோசியுங்கள் – நீங்களும் ஜெயிக்கலாம்.!
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved