இறைவன் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்
நிரஞ்சனா
ஹுமாயூன் போர் களத்தில் எதிரிகளால் துரத்தியடிக்கப்பட்டு, தப்பித்தால்போதும் என்ற எண்ணத்தில் கற்பவதியாக இருக்கும் தன் மனைவியை அழைத்துக் கொண்டு ரகசிய இடத்தில் தங்கினார். அது ஒரு பாலைவன பகுதி. அப்போது அவருடைய மனைவி ஹமீதா, “எனக்கு மாதுளம் பழம் சாப்பிட வேண்டும் போல ஆசையாக இருக்கிறது.” என்றாள்.
“அரசராக இருந்தும் மனைவி கேட்கும் சாதாரண மாதுளம் பழத்தை கூட வாங்கி தர முடியவில்லையே.. அல்லா… இது என்ன சோதனை?” என ஹுமாயூன் வருந்தினார். “நல்லோர் கவலைக்கு உடனே தீர்வு” என்பது விதி. அப்போது, குடிக்க நல்ல தண்ணீர் கூட கிடைக்காத அந்த பாலைவனத்தில் ஒரு ஒட்டகத்தில் மாதுளம் பழ வியபாரி ஹுமாயூன் எதிரில் வந்து கொண்டு இருந்தார்.
பழ வியபாரியை பார்த்தவுடன் இந்த பாலைவனத்தில் பழ வியபாரியா? என்று வியப்பும் ஆனந்தமும் அடைந்தார் ஹுமாயூன்.
பிறப்பும்-இறப்பும் இறைவன் செயலாக இருக்கும்போது, இடையில் நடக்கும் வாழ்க்கை சம்பவங்கள் நல்லவர்களின் உள்ளங்களுக்கு ஏற்ப தெய்வச்செயலாக அமைகிறது. எந்த நிகழ்வுகளும் நல்லவினையாக அமைய நம்மை படைத்த இறைவனை உறுதியாக நம்பவேண்டும். நாம் அனைவரும் தெய்வத்தின் குழந்தைகள். அதனால் ஒவ்வொரு வினாடியும் நம்மை இறைவன் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
பல சமயம் கோவிலில் தீ மிதி விழா நடக்கும்போது, பக்தர்கள் தீயில் கால் வைக்கும் முன்னதாக கொஞ்சம் மழை வருவதை பார்த்திருக்கிறோம். இதில் இருந்து என்ன தெரிகிறது? நம்மையும், நம்முடைய ஒவ்வொரு செயலையும், இறைவன் பார்த்து கொண்டேதான் இருக்கிறார்.
நீங்களும் ஜெயிக்கலாம். மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள்
eedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved