வீரசிவாஜி உச்சரிக்கும் மந்திரம்
நிரஞ்சனா
1666 ஆம் ஆண்டு அவுரங்கசீப் அவருடைய ஐம்பதாவது பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு வீரசிவாஜி அழைத்திருந்தார். சிவாஜி தன் மகனுடன் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அங்கே வீரசிவாஜிக்கு சரியான மரியாதை தரப்படவில்லை. சிவாஜியையும் அவரின் மகனையும் ராணுவ தளபதியின் பின்னால் நிற்க வைத்தார்கள். சபையில் தமக்கு கௌரவம் தராமல் அவமரியாதையாக நடத்தியதால் கோபம் அடைந்த வீர சிவாஜி, அங்கிருந்து புறப்பட முடிவு செய்தார். ஆனால் சிவாஜியை வெளியேற விடாமல் தடுத்தார்கள் அவுரங்கசீபின் ஆட்கள்.
சிவாஜியை விருந்துக்கு அழைத்ததே அவரை சிறைப்பிடிக்கதான். ஆக்ராவின் கோட்வலான புலத்கானின் என்பவரின் கண்காணிப்பில் சிவாஜியை வீட்டுக்காவலில் வைத்தார்கள். இப்படி சிறையில் மாட்டி கொண்டோமே என்று மனம் வருந்தினார் சிவாஜியின் மகன்.
அதற்கு சிவாஜி சொன்னார், “அச்சப்பட்டவன் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. தோல்வியில்லை தோல்வியில்லை, துணிந்தவனுக்கு தோல்வி இல்லை” என்ற சக்திவாய்ந்த மந்திர வார்த்தையை என் தாய் எனக்கு சொல்லி சொல்லி வளர்த்தாள். நமக்கு தோல்வியே இல்லை மகனே.” என்று கூறிய சிவாஜி, சில நாட்களிலேயே சாமர்த்தியமாக பலத்த காவலில் இருந்து தப்பினார்.
ஆம். வீரசிவாஜியின் தாய் ஜீஜாபாய் தன் மகன் வீரசிவாஜிக்கு சொல்லி தந்த தாரக மந்திரம், “துணிந்தவனுக்கு தோல்வியில்லை.” இந்த தாரக மந்திரம் வீரசிவாஜிக்கு மட்டுமல்ல ஒவ்வொரு மனிதர்களுக்கும் பொருந்தும். ஆனால் அந்த “துணிவு” என்பதை நல்ல செயல்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
ஒரு செயலை செய்யும் முன்னதாக பல தடவை இது சரியா என சிந்திக்க வேண்டும். அந்த செயல் நல்லதுதான் என்றால் மலை அளவு பிரச்சினைகள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் போராடினால் வெற்றியாளராக – சாதனையாளராக திகழலாம்.
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here