நிரஞ்சனா மாவீரர் நெப்போலியன் ஒரு நூலகம் வைத்திருந்தார் அதில் ஏராளமான நூல்கள் இருந்தது. அந்த நூலகத்தில் ஒரு தமிழ் நூலும் இடம்பிடித்திருந்தது. அந்த நூல், “இராவணனை போல் இல்லாது பெண்ணாசையை நீக்கு. கேட்பார் பேச்சை கேட்டு நிம்மதி இழந்த கைகேயியை போல் இருக்காதே. கூனியை போல் சிண்டு முடித்து விடுபவர்களிடம் எச்சரிக்கையாக இரு. முடிந்தால் அப்படிப்பட்டவர்களிடம் இருந்து விலகியே இரு. நண்பனுக்காக உயிரையே கொடுக்கும் ஆஞ்சனேயனை போன்ற, குகனை போன்ற நண்பர்களிடம் நட்பு கொள். நீயும் நண்பர்களிடம் […]
நிரஞ்சனா சேலம் மாவட்டத்தில் உள்ளது அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில். கிளி கண்டறிந்த சிவலிங்கம் ஜீவராசிகளின் படைப்பின் இரகசியத்தை பற்றி முனிவர்களிடம் சொல்லிக் கொண்டு இருந்தார் பிரம்மன். சிவ வழிபாடே சிறந்த வழிபாடு என்று வாழ்ந்து வரும் சுகமுனிவர், பிரம்மன் கூறுவதை கேட்டுவிட்டு கோபம் கொண்டு, “ஜீவராசிகளின் படைப்பை பற்றிய இரகசியத்தை வெளிப்படையாக உன் கணவர் சொல்லிக் கொண்டு இருக்கிறார்”. என்று சரஸ்வதியிடம் முறையிட்டார். சரஸ்வதியிடம் தம்மை பற்றி சுகமுனிவர் குறைச் சொன்னதை அறிந்து ஆத்திரம் அடைந்த பிரம்மன், […]
நிரஞ்சனா இராமாயணம். இந்தியாவின் உலகப்புகழ் பெற்ற இதிகாசம். வாழ்க்கையின் தத்துவங்களை, ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய குணங்களை, சகோதர ஒற்றுமையை, விதியின் வலிமையை, நட்பின் மேன்மையை எடுத்துக்காட்டும் காவியம். அரச குடும்பத்தில் பிறந்த அனைவருக்குமே இராஜவாழ்க்கை அமைந்துவிடாது, அவர்களும் குடும்ப போராட்டங்களை சந்திக்க வேண்டும் என்று உணர்த்துகிறது இராமாயணம். அந்த போராட்டங்களையும் நல்ல நட்பின் துணைக்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பதை இராமாயணத்தின் ஏழு காண்டங்கள் நமக்கு சம்பவங்களாக சொல்கிறது. பாலகாண்டம் : இராமன் மற்றும் அவன் சகோதரர்களின் பிறப்பு. […]
மகிமை நிறைந்த குருவாயூர் – பகுதி – 2 சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும் நிரஞ்சனா குருவையும், வாயுவையும் அழைத்துக் சென்று கொண்டிருந்த பரசுராமர், ஒரு இடத்தில் நின்றார். அந்த இடம் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், அழகாகவும் இயற்கை வளமுடன் இருந்தது. “அடடா.. அற்புதம். என்னவொரு இயற்கை செழிப்பான இடம். இந்த இடம் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இறைவனே இங்கு இருப்பதாக ஓர் உள்ளுணர்வு எனக்கு உண்டாகிறது.” என்றார் குருபகவான். “ஆமாம் ஆமாம்… எனக்கும் அவ்வாறே தோன்றுகிறது.” […]
நிரஞ்சனா கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது புகழ் பெற்ற இந்த கிருஷ்ணர் கோவில். இந்த இடத்தை பூலோக வைகுண்டம் என்று பக்தர்களின் நம்பிக்கை. இங்கு ஸ்ரீகிருஷ்ணபகவான் நிரந்தரமாக வசிப்பதாக ஐதீகம். இங்குள்ள கிருஷ்ணரின் சிலைக்கு நான்கு கைகள் இருக்கிறது. முதல் கையில் பாஞ்சஜன்யம் என்ற சங்கையும், இரண்டாம் கையில் சுதர்சன சக்கரத்தையும், மூன்றாவது கரத்தில் கௌமோதகி எனப்படும் கதையையும், நான்காவது கையில் தாமரை மலரையும் வைத்து கொண்டு பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். […]
நிரஞ்சனா மனிதன் அறிய வேண்டிய முக்கியமானது தன்னை அறிதல். நாயை கண்டால் முயல் ஓடும் பூனையை கண்டால் எலி ஒடும். இப்படி ஜீவராசிகள் தன்னை பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கிறது. தான்யார் என்பதை உலகத்திற்கு தெரிவித்து இருக்கும் ஞானிகளும், விஞ்ஞானிகளும் பெரும் கூட்டமாக இல்லை. விரல் விட்டு என்ன கூடிய அளவே இருக்கிறார்கள். தண்ணீர் தாகத்தை தீர்க்கிறது, வயல்களை வளர்க்கிறது. அந்த தண்ணீரில் இருக்கும் மீன் அழுக்கை தின்று நீரை சுத்தப்படுத்துகிறது. அந்த மீனை பறவைகள், மனிதர்கள் […]
நிரஞ்சனா அபிரகாம் லிங்கனின் தந்தை காலணி தைக்கும் தொழிலாளி. அபிரகாம் லிங்கன் தன் தந்தையுடன் காலணிகள் தைக்கும் தொழிலை செய்துகொண்டே தந்தைக்கு சிரமம் தராமல், தன் பட்டப்படிப்புக்கு வாரத்தில் மூன்று நாட்கள் ஏர் உழுது கூலி பெற்று அந்த பணத்தில் புத்தகத்தை வாங்குவார். இப்படி கடுமையாக உழைத்து சட்ட கல்வி கற்றார். பிறகு அரசியலில் சேர்ந்தார். அதில் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்தார். இருந்தாலும் விடமுயற்சியால் அரசியலில் மிக பெரிய வெற்றியை கண்டார். நாட்டின் ஜனாதிபதியாக தேர்வும் […]
நிரஞ்சனா மலேசியாவில் இந்தியர் ஒருவர் அதி வேகமாக கார் ஓட்டி சென்றார். சென்ற வேகத்தில் சாலையில் இருந்த தடுப்பை கவனிக்காமல் வேகமாக சென்றதால் கார் அந்த தடுப்பை உடைத்து கொண்டு நின்றது. இதை அறிந்த போலீஸார், அந்த இடத்திற்கு வந்தார்கள். போலீசை கண்டதும் அந்த நபர் பதட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தன்னிடம் இருந்த 100டாலரை எடுத்து போலீஸாரிடம் கொடுத்தார். ஆனால் அந்த போலீஸார், கடும் கோபத்துடன், “உன் மீது இரண்டு வழக்கு பதிவு செய்ய […]
சார்லி சாப்ளின். உலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர். ஆனால் தன் தனிப்பட்ட வாழ்வில் பல துன்பங்கள், அவமானங்கள், தோல்விகள் போன்றவற்றை சந்தித்தவர். தந்தையின் அன்பு கிடைக்காமல், தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். தன் தாயாருடன் மேடையில் பாடி நடிக்க ஆரம்பித்தார். ஐந்து வயதிலேயே தன் திறமையால் அமோக வரவேற்பை பெற்றார் சார்லி சாப்ளின். சில வருடங்களிலேயே அவர் தன் மகிழ்ச்சியை இழந்தார். காரணம், அவரது தாயார் திடீரென மனநிலை பாதிப்படைந்தார். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக கிடைத்த வேலைகளையும் செய்தார். பிறகு […]